The Glory – Korean – Season 1

The Glory Series Review 

#TheGlory – #Korean S1,8 Ep – Review #Netflix
⭐⭐⭐⭐/5
“Revenge Is A Dish Best Served Cold” 
ஸ்கூல்ல கொடூரமான டார்ச்சருக்கு உள்ளான பெண் அதுக்கு காரணமானவர்களை பழி வாங்கும் கதை
Plot, நடிப்பு &Engaging 👌
Revenge Genre – கொரியன்களை அடிச்சுக்க முடியாது 🔥
Highly Recommended 👍
The Glory Series Review in tamil, The Glory review, the Glory season 1 review, the Glory season one review, the Glory season 1 download

ஸ்கூல்ல ஒரு அப்பாவி பொண்ணை 5 பேர் கொண்ட ஒரு குரூப் படு பயங்கரமா கொடுமை படுத்துறாங்க. 
பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் என‌ யாரும் உதவாத நிலையில் உயிரை காப்பாற்றிக்கொள்ள பள்ளியில் இருந்து விலகுகிறாள். 
பிறகு ஒரு ஃபேக்டரியில் வேலை பார்த்து தனியாக படிச்சு காலேஜ் போய் டீச்சர் வேலையில் சேர்கிறார். 
கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆன நிலையில் மெதுவாக தன்னுடைய பழிவாங்கும் படலத்தை ஆரம்பிக்கிறார்.
எதுக்கு ஸ்கூல் டீச்சர் ஆனாள், எப்படி பழி வாங்க போகிறாள் என்பதை சுவாரஸ்யமாக சொல்கிறது தொடர். 
தொடர் செம டார்க்கா இருக்குது. 
அதுக்காக கொடூரமான காட்சிகள் இருக்குதா என்றால் இல்லை. பயங்கர வயலண்ட்டாக இருக்குதா என்றால் அதுவும் இல்லை. 
ஆனால் ஹீரோயினுக்கு நடக்கும் கொடுமைகளை பார்த்து அவளுக்காக ஃபீல் பண்ண வைத்து விடுகிறார் இயக்குனர்.
இந்த மாதிரியான உணர்வுகளை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் கொரியன் இயக்குநர்கள் வல்லவர்கள். 
இதற்கு நடுவில் ஒரு இன்ட்ரெஸ்டிங்கான லவ் ஸ்டோரி இருக்குது. 
ஆரம்பத்தில் மெதுவாக போனாலும் அவள் போட்ட திட்டங்களை செயல்படுத்த ஆரம்பிக்கும் போது நமக்கு தானாகவே ஆர்வம் வந்து விடுகிறது. 
சமீபத்தில் பார்த்த தொடர்களில் மிகவும் சிறப்பான ஒரு தொடர் . 
கண்டிப்பாக பாருங்கள் . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Nobody – 2021Nobody – 2021

Nobody – 2021 இந்த படத்தை பற்றி பார்க்குறதுக்கு முன்னாடி … உங்களுக்கு ஆக்ஷன் திரில்லர் படங்கள் பிடிக்கும் என்றாலோ, John Wick series படங்கள் பிடிக்கும் என்றாலோ யோசிக்காமல் படத்தை பாருங்கள் தரமான ஆக்ஷ்ன் என்டர்டெயின்மென்ட் கேரண்டி. 👍 ஹீரோ

The Body (El Cuerpo) – 2012The Body (El Cuerpo) – 2012

சூப்பரான ஒரு ஸ்பானிஷ் Mystery Thriller. நிறைய பேர் பார்த்து இருப்பீங்க.  The Game (2016) தமிழ் & கன்னடம், The Body (Hindi) என பல தடவைகள் உடைக்கப்பட்ட பர்னிச்சர் ‌‌ IMDb 7.6 Tamil டப் இருப்பது போல் தெரியவில்லை. 

Frailty – 2001Frailty – 2001

செமயான ஒரு சைக்காலஜிகல் திரில்லர்.  IMDb 7.2 Tamil dub ❌ OTT ❌ FBI பரபரப்பா ஒரு சீரியல் கில்லரை தேடுறாங்க . ஒருத்தன் சரண்டர் ஆகி என் தம்பி தான் அந்த கில்லர்னு சொல்றான்.‌  எதன் அடிப்படையில்  தம்பி