The Railway Men: The Untold Story Of Bhopal 1984

The Railway Men: The Untold Story Of Bhopal 1984 post thumbnail image

The Railway Men: The Untold Story of Bhopal 1984

December 2-3 , 1984 ல் நடந்த போபால் விஷ வாயு சம்பவம் பற்றி நம்ம படிச்சுருப்போம். உலக அளவில் தொழிற்சாலைகளில் நடந்த மோசமான விபத்துகளில் ஒன்றாக இன்னும் கருதப்படுகிறது.

பாதுகாப்பு குறைபாடுகள், அஜாக்கிரதை காரணமாக MIC (Methyl Isocyanate) என்ற விஷவாயு காற்றில் பரவியது.

கிட்டத்தட்ட 5 லட்சம்+ ( Total 15K+ Death- 3000 Immediate Death ) மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட நிலையில் ஏகப்பட்ட அரசியல் & கார்ப்பரேட் தலையீடு இருப்பதால் பல விஷயங்கள் இன்று வரை மர்மமாக உள்ளது.

உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆனால் வெளியில் பெரிதாக அறியப்படாத ஒரு சம்பவத்தை நிறைய கற்பனை கதாபாத்திரங்களை உள்ளே சொருகி நன்றாகவே உருவாக்கி உள்ளார்கள்.

விபத்து நடந்த இரவு அன்று ஸ்டேஷன் மாஸ்டராக பணியில் இருப்பவர் Iftekaar Siddiqui (Kay Kay Menon).

அந்த ஸ்டேஷனில் நிறைய பணம் இருக்கு என்று கொள்ளையடிக்க கான்ஸ்டபிள் வேடத்தில் வரும் திருடன் Balwant Yadav (Divyenndu)

புதிதாக Loco Pilot ஆக பணியில் சேர்ந்து இருக்கும் Union Carbide ன் பழைய எம்பளாயி Imad Riaz (Babil Khan)

அன்று பரிசோதனைக்காக குட்டி டிரெயினான GM Special ல் வரும் Railway General Manager Rati Pandey (R. Madhavan)

இவர்கள் மற்றும் ரயில்வே தொழிலாளர்கள் இணைந்து பல்லாயிரக்கணக்கான மக்களை எவ்வாறு விபத்தில் இருந்து காப்பாற்றினார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லியுள்ளார் இயக்குனர்.

இதற்கு நடுவில் இதில் நடைபெற்ற அரசியல், இந்திரா காந்தி கொலைக்கு அப்புறம் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை என நிறைய கவர் பண்ணி இருக்காங்க.

முக்கியமான நான்கு கேரக்டர்களும் நன்றாக நடித்து இருக்கிறார்கள்.

கடைசி இரண்டு எபிசோட்கள் அதுவும்ஒரே டிராக்கில் வரும் டிரெயின்களை சமாளிக்க செய்யும் போராட்டம் எல்லாம் திக் திக் என இருந்தது.

வெளிநாட்டவர் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் ரொம்பவே சுமார் ரகம்.

ரொம்பவே நிறைய கதாபாத்திரங்கள் நிறைய பேருக்கு பிண்ணனி இல்லாததால் ஒட்டவில்லை.

இது மாதிரி சின்ன சின்ன எதிர்மறை விஷயங்கள் இருந்தாலும் போரடிக்காமல் நகர்கிறது தொடர். அதனால் கண்டிப்பாக பார்க்கலாம் 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Nightingale – 2018The Nightingale – 2018

1825 களில் பிரிட்டிஷ் ஆதிக்க ஆஸ்திரேலியாவில்  நடக்கும் ஒரு பழிவாங்கும் கதை.  IMDb 7.3 Tamil dub ❌ Violent Content  தனது கணவன் மற்றும் குழந்தையை கொன்றவர்களை பழிவாங்க அடர்ந்த காட்டுக்குள் பயணம் செய்யும் பெண்ணின் கதையை சொல்லும் படம். 

The Silent Sea – 2021The Silent Sea – 2021

The Silent Sea Tamil Review  2022 வது வருடத்தின் முதல் பதிவு. Happy New Year To All  கொரியாவில் இருந்து வந்துள்ள Sci Fi சீரிஸ்.  1 Season , 8 Episodes வெளியாகி உள்ளது.  நான் இந்த