The Swordsman – 2020

இன்னொரு கொரியன் வரலாற்று திரைப்படம். ரிடையர்டான வாள்வீச்சில் கிங்கான ஹீரோ மகளுடன் காட்டுக்குள் அமைதியாக வசித்து வருகிறார். ஒரு கட்டத்தில் மகள் கடத்தப்பட பழைய பன்னீர் செல்வமாக மகளை மீட்க கிளம்புகிறார். 

 
IMDb 6.8
Tamil dub ❌
OTT ❌
 
கண்பார்வையை இழந்து வரும் ஹீரோ சிகிச்சைக்காக நகரத்துக்குள் வர நேரிடுகிறது. 
அடுத்து நடக்கும் சில சம்பவங்களால் அவரின் மகள் மனிதர்களை அடிமையாக்கி விற்கும் பவர்புல்லான ஒரு கூட்டத்தில் சிக்கிக் கொள்கிறாள்‌. 
 
கண்பார்வை குறைந்து கொண்டே வர இருக்கும் சொற்ப நேரத்தில் மிகப்பெரிய படைகளை சமாளித்து மகளை மீட்டானா என்பதை படத்தில் பாருங்கள்.
 
கதை ரொம்பவே சிம்பிளான ஆனால் செம் பவர்புல்லான கதை‌ . அருமையான திரைக்கதை படத்தை அழகாக நகர்த்தி செல்கிறது. முதல் பாதி முழுவதும் Plot செட் செய்யப்படுகிறது. இரண்டாவது பாதி பெரும்பாலும் ஆக்சன் சீக்குவன்ஸ் தான். 
 
வாள் சண்டை காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம். அதுவும் துப்பாக்கியுடன் சண்டைக்கு வரும் வீரர்களுடன் வாள் சண்டையிடும் காட்சிகள் சிறப்பு. லாஜிக்கை யோசிக்க விடாமல் எடுத்த விதம் சிறப்பு. 
 
ஹீரோவாக வருபவர் கலக்கி இருக்கிறார். அசால்ட்டாக வாளை கையாளும் விதம் சூப்பர். 
முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் Joe Taslim( Raid (லீடாக வருபவர்) , The Night Comes For Us பட ஹீரோ .. அவரது பங்கை சிறப்பாக செய்துள்ளார். 
 
அரசியல், சென்டிமென்ட் , ஆக்சன் என எல்லாவற்றையும் கலந்த ஒரு பக்காவான படம். 
 
கண்டிப்பாக பாருங்கள் 🔥🔥🔥
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Exit – Eksiteu- எக்ஸிட் (2019)Exit – Eksiteu- எக்ஸிட் (2019)

இது கொரியன் ஆக்ஷ்ன் காமெடி வகையைச் சேர்ந்த படம்.  படத்தின் நாயகன் ஒரு வெட்டி ஆபிசர் ஆனால் மலை ஏறுவதில்லை திறமைசாலி. தன் குடும்பத்துடன் வசித்து வருகிறான். வேலை இல்லாததால் குடும்பத்தினரும் மதிப்பதில்லை.  ஒரு மலையேறும் போட்டியில் ஹீரோயினை சந்திக்கிறான். அப்போட்டியில்

க்ராவ்ல் (Crawl) – 2019க்ராவ்ல் (Crawl) – 2019

க்ராவ்ல் (Crawl) –  2019  இது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மிருகத்தின் ‌இடமிருந்து தப்பிப்பது பற்றிய திரைப்படம்.  நாயகி ஒரு நீச்சல் வீராங்கனையாக வருகிறார்.‌ஒரு நாள் அவருடைய அக்கா  ஃபோன் செய்து அவர்களுடைய அப்பா ஃபோன் எடுக்கவில்லை என்றும் கடுமையான புயல்

Sweet Home – ஸ்வீட் ஹோம் (2020) – Korean SeriesSweet Home – ஸ்வீட் ஹோம் (2020) – Korean Series

Sweet Home – ஸ்வீட் ஹோம் (2020) – Korean Series Review In Tamil  இது ஒரு கொரியன் சீரிஸ்..  1 சீசன் அதில் 10 எபிசோட்கள்…  பேரை பார்த்த உடன் ஏதோ குடும்ப உறவுகள் சம்மந்தப்பட்ட தொடர் என்று