See Season 1 Review

See Season 1 Review post thumbnail image

See – Season 1 – 2019
Episodes 8
Tamil Subs ✅ @Apple TV+
Genre: Post Apocalyptic
⭐⭐⭐⭐.25/5

வைரஸ் தாக்குதல் காரணமாக உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் இறந்து விடுகிறார்கள் மீதம் உள்ளவர்கள் பல தலைமுறைகளாக கண்பார்வை இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

நம்ம ஹீரோ ஒரு மலைக்கிராமத்தில் தலைவனாக இருக்கிறார். பனிப்புயலில் தப்பி வந்த ஒரு கர்ப்மமான பெண்ணை காப்பாற்றி அவளை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

இன்னொரு பக்கம் ஒரு அரசி அந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைகளை கொல்ல வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு படைகளை அனுப்பி பல வருடங்களாக தேடி வருகிறார்.

இந்த தேடல் தான் படம். இது பல வருடங்களாக நீள்கிறது.

இந்த குழந்தைகளின் உண்மையான அப்பா யார் ? எதுக்காக அரசி இவர்களை கொல்ல நினைக்கிறார் ? ஹீரோவான வளர்ப்பு அப்பா இந்த குழந்தைகளை எப்படி காப்பாற்றினார் ? இந்த குழந்தைகளின் அம்மா உண்மையில் யார் ? போன்ற பல கேள்விகளுக்கு பதிலை சுவாரசியமாக சொல்கிறது தொடர்.

சீரிஸ்ஸோட கான்செப்ட்டே அருமை. தொடரில் யாருக்குமே கண்ணு தெரியாது‌. கண்ணு தெரியாமல் ஒரு உலகம் இருந்தால் அவங்க எப்படி வாழ்வார்கள், எவ்வாறு தொடர்பு கொள்வார்கள், எப்படி பயணம் செய்வார்கள், சண்டை செய்வார்கள் என்பதை அவ்வளவு அருமையாக காட்சிப்படுத்தி இருக்காங்க.

அதிலும் லொக்கேஷன்கள் எல்லாம் செம சூப்பராக இருந்தது. Production Quality 🔥

ஹீரோவாக Jason Momoa கலக்கி இருக்கிறார். கத்தியை தரையில் தேய்த்துக் கொண்டே நடப்பதாகட்டும், சண்டைக்காட்சிகளில் கழுத்தை சுத்தி வெட்டுவது , சென்டிமென்ட் காட்சிகள் என கலக்கி இருக்கிறார் மனுஷன் .

யாருக்குமே கண்ணு தெரியாத நிலையில் நடக்கும் போர் மற்றும் இதர சண்டைக்காட்சிகளை உருவாக்கிய ஸ்டண்ட் இயக்குனரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

Queen Kane கதாபாத்திரமும் சிறப்பு. கிட்டத்தட்ட Game Of Thrones ல் வரும் Cersei மாதிரியான கதாபாத்திரம் இது‌👌

கண்டிப்பாக பார்க்கலாம் 👍

Related Post

Collateral – கொலாட்ரல் (2004)Collateral – கொலாட்ரல் (2004)

Collateral Movie Tamil Review  இது ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படம். ஒரே இரவில் நடப்பது போன்ற படம் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத படம். அதிலும் Tom Cruise (Edge Of Tomorrow) , Jamie Foxx (Project Power,

பர்சன் ஆஃப் இன்ரஸ்ட் (Person Of Interest)பர்சன் ஆஃப் இன்ரஸ்ட் (Person Of Interest)

பர்சன் ஆஃப் இன்ரஸ்ட் (Person Of Interest) Review In Tamil  க்ரைம் வகையை சேர்ந்த தொடர்களில் எனக்கு பிடித்ததில் இரண்டாம் இடத்தில் உள்ளது.  முதல் இடத்தில் The Mentalist IMDb 8.5  5 Seasons , 103 Episodes ஒரு பணக்கார

Sci Fi படங்கள் – Part -1Sci Fi படங்கள் – Part -1

The Abyss – 1989 James Cameron டைரக்ட் பண்ண படம். அவர் எவ்வளவு பெரிய ஜீனியஸ்னு இந்த படத்தை பாத்தா தெரியும்.  ஒரு நீர்மூழ்கி கப்பல் விபத்துல கடலுக்கு அடியில் போய்விடும். அதை காப்பாற்ற மிலிட்டரி மற்றும் ஒரு எண்ணெய்