Puthiya Mugam – 1993

Puthiya Mugam – 1993 post thumbnail image

இந்த படத்தை முதன் முதலில் 10 வயதில் பெற்றோர்களுடன் தியேட்டரில் பார்த்தேன்.

கரூரில் கவிதாலயா, கலையரங்கம் என்று அடுத்தடுத்து இரண்டு தியேட்டர்கள் உண்டு.

ஒரு தியேட்டரில் புதிய முகம் இன்னொரு தியேட்டரில் சரத்குமாரின் வேடன் படமும் ஓடிக்கொண்டு இருந்தது.

அந்த டைமில் சரத்குமார் படங்கள் ஆக்சன் படங்களாக இருப்பதால் அதுக்கு தான் போகனும் என்று சொல்லியும் எங்க வீட்டில் புதிய முகம் தான் கூட்டிட்டு போனாங்க.

ஆனா படத்தில் இருந்து ஒரு காட்சி கூட ஞாபகம் இல்லை. நேத்து யூட்யூபில் நேற்று இல்லாத மாற்றம் பாடல் ரெக்கமெண்டேஷனில் வரவும் இன்னிக்கு இந்த படத்தை பாக்கனும் என்று முடிவு செய்தேன்‌.

படம் வொர்த்து 👍 ரஹ்மான் மியூசிக் 🔥🔥

சுரேஷ் மேனன் இயக்கி நடித்த இந்த படத்தில் ரேவதி, வினீத், நாசர், ரவிச்சந்திரன், ராதா ரவி , சின்னி ஜெயந்த், கஸ்தூரி, ரகுவரன் ஆகியோர் நடித்து உள்ளார்கள்.

இசை ஏ ஆர் ரஹ்மான், டயலாக்ஸ் K.S. அதியமான்.

இந்த படம் 1989 ல் வெளியான Twist of Fate என்ற மினி சீரிஸை தழுவி எடுக்கப்பட்டது.

படத்தின் ஹீரோ வினீத் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு குரூப்பிடம் அடியாளாக சேர்கிறார்.

ஒரு சில சம்பவங்களுக்கு அப்புறம் அந்த கூட்டத்தில் இருந்து வெளியே வர நினைக்கும் அவர் புத்திசாலித்தனமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றி (சுரேஷ் மேனனாக ) எதிரிகளுக்கு முகத்தை காட்டாமலேயே தப்பிக்கிறார்.

இதுவரை இலங்கையில் நடந்த கதைக்களம் இந்தியாவுக்கு நகர்கிறது. இந்தியாவில் மனைவி , குழந்தை என செட்டில் ஆனா நிலையில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு இவனுடைய பழைய வாழ்க்கை தோண்டப்படுகிறது. வில்லன்கள் திரும்ப வருகிறார்கள் .. இத்தனை வருடம் கழித்து இவனது ரகசியம் வெளிவர காரணம் என்ன என்பதை படத்தில் பாருங்கள்.

முதலில் இந்த படம் தப்பான காலகட்டத்தில் வந்த படம். இந்த மாதிரி கான்செப்ட் மற்றும் க்ளைமேக்ஸ் கொண்ட படம் அப்ப புதுசு.
இப்ப வந்தால் கொண்டாடி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

நிஜத்தில் மனைவியான ரேவதிக்கு அருமையான ரோல் கொடுத்து உள்ளார் இயக்குனர் மற்றும் ஹீரோவான சுரேஷ் மேனன் அவ்வளவு அழகு மற்றும் நடிப்பு.

நாசர் & சின்னி ஜெயந்த் நண்பர்களாக நிறைவான கதாபாத்திரத்தில் வருகிறார்கள். அதுவும் சின்னி ஜெயந்த் கதாபாத்திரம் 👌

மூத்த நடிகர் ரவிச்சந்திரன் & ராதாரவி இரண்டு பேரும் வில்லன்களாக வருகிறார்கள்.

வினீத் தனது ரோலை சிறப்பாக செய்துள்ளார். சுரேஷ் மேனன் இயக்கம் & நடிப்பு இரண்டுக்குமே முதல் படம். ரொம்பவே குறைவாகவே பேசுகிறார். சண்டைக்காட்சிகள் எல்லாம் ரொம்பவே செயற்கையாக இருந்தது.

ரகுவரன் தனக்கே உரிய வில்லத்தனத்துடன் சின்னதாக கேமியோ பண்ணிருக்கார்.

சுரேஷ் மேனன்க்கு டப்பிங் அரவிந்த் சாமி & வினீத்திற்கு சீயான் விக்ரம் அவர்களும் டப்பிங் பேசி இருக்காங்க. ரொம்பவே பொருத்தமா இருந்தது. வினித் ரோலை அரவிந்த் சாமி பண்ணுவதாக இருந்ததாம் வேற காரணங்களுக்காக பண்ண முடியவில்லை என்று விக்கிபீடியா சொல்றான்.

ஏ ஆர் ரஹ்மான்:
என்ன மாதிரியான BGM போட்டு இருக்கார் மனுசன். பாடல்களை பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த மாதிரி பழைய படங்களை பார்க்கும் போது பாடல்களை ஸ்கிப் பண்ணுவது வழக்கம். ஆனா சில பாடல்களை வலிந்து திணித்து இருந்தாலும் ஸ்கிப் பண்ணாமல் பார்க்க வச்சுட்டாரு.

நிறைய இடங்களில் BGM தாறுமாறு அதுவும் பேண்ட்டேஜ் ரிமூவ் பண்ணும் இடம், வினீத் இன்ட்ரோ என சொல்லிட்டே போகலாம். நிறைய மியூசிக் அவரது பல படங்களில் கேட்ட மாதிரியே இருக்கு.

படம் அவ்வளவு எமோஷனல் கனெக்ட் இல்லை என்றாலும் கடைசில வர்ற நேற்று இல்லாத மாற்றம் சோக வெர்ஷன் லைட்டா மைண்ட ஏதோ பண்ணுது..

நிறைய இடங்களில் என்ன ஆகும் என கண்டுபிடித்து விடலாம். ஆனா லாஜிக் எல்லாம் பார்க்காமல் 1993 ல் வந்த படம் என்பதை நினைத்து கொண்டு பாருங்க..என்ஜாய் பண்ணலாம்.

Go for it 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Shape Of Water – 2017The Shape Of Water – 2017

The Shape Of Water 4 Oscar வாங்குன Sci Fantasy Romance!!!, Thriller.  1960 வருடத்தில் வாய் பேச முடியாத இளம்பெண்ணுக்கும்,  ஏலியன்+மீன் மாதிரி இருக்கும் ஒரு மிருகத்துக்குமான Relationship பற்றிய படம்.  IMDb 7.3 Tamil dub இல்லை. 

Knives Out (2019) & Gone Baby Gone (2007)Knives Out (2019) & Gone Baby Gone (2007)

Knives Out (2019) & Gone Baby Gone (2007) Tamil Review  இன்னிக்கு நம்ம 2 இன்வெஸ்ட்டிகேஷன் திரில்லர் படத்தை பத்தி பார்க்க போறோம்.  இரண்டு படத்துக்கும் என்னோட Recommendation – 🔥🔥🔥🔥🔥 Strongly Recommended.  ரெண்டு படமுமே அடுத்து