Margin Call – 2011

Margin Call Tamil Review 

2008 ல் பொருளாதார நெருக்கடியின் ஆரம்ப கட்டத்தில்  ஒரு Investment பேங்கில் நடக்கும் சிக்கலான சூழ்நிலையே அந்த பேங்கின் முக்கிய அதிகாரிகள் எவ்வாறு எதிர் கொண்டனர் என்பதை சொல்லும் படம்.

IMDb 7.1 

தமிழ் டப் இல்லை. 

Margin call 2011 movie review in tamil, margin call financial crisis movie , margin call movie cast, margin call IMDb, Kevin Spacey

ரெகுலரான படம் கிடையாது. Financial background இருந்தா புரிய கொஞ்சம் எளிதாக இருக்கும்.

படத்தின் ஆரம்பத்தில் Trading Floor ல் HR மக்கள் உள்ளே வருகின்றனர். சகட்டு மானிக்கு employees’a Fire பண்றாங்க. அதுல Risk Management ல வேலை பாக்குற சீனியர் ஒருத்தர். 

அவர் கிளம்புறப்ப அவர பண்ணிட்டு இருக்குற புரோஜக்ட்ட ஒரு ஜீனியர் பையன்ட  கொடுத்து ஜாக்கிரதை அப்படினு சொல்லிட்டு போறார். 

அந்த பையன் அறிவாளியா இருக்க அன்னிக்கு நைட்டே அந்த புராஜெக்ட்டா முடிச்சுருரான். 

அவன் கண்டுபிடிச்சது என்னனா.. 

கம்பெனி Risk Management System  ல பெரியயயய ஓட்டை இருக்கு. கம்பெனி வாங்கி வச்சுருக்க Asset la கொஞ்சம் சேதாரம் ஆனாலும் கம்பெனியோட மொத்த Market Capitalisation amount விட சேதாரம் அதிகமா ஆகிடும் என்பது தான். 

அப்பறம் என்ன நைட்டோட நைட்டா பெரிய தலைகள் எல்லாம் வருது. அதிரடியான முடிவை எடுக்கிறார் கம்பெனி தலைமை அதிகாரி. 

அது என்ன முடிவு.. கடைசியில் கம்பெனி, தொழிலாளர்கள் நிலைமமை என்ன ஆனது என்பதை படத்தில் பாருங்கள். 

Kevin Spacey கலக்கி இருக்கிறார். அதுவும் கடைசியில் Traders ட்டா வேண்டா வெறுப்பாக கொடுக்கும் Speech அருமை .. 

நம்ம The Mentalist ஹீரோ Simon Baker ஒரு சின்ன ரோலில் வருகிறார். 

நல்ல படம்.. திரைக்கதை நம்மை ‌‌நகரவிடாமல் வைத்து இருக்கும். 

ஏற்கெனவே சொன்ன மாதிரி இது ரெகுலரான படம் கிடையாது.. நிறைய Financial domain மற்றும் terms பத்தி பேசுவாங்க. பார்க்கலாமா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.  

Director: J.C. Chandor

Cast: Kevin Spacey, Paul Bettany, Jeremy Irons, Zachary Quinto, Penn Badgley, Simon Baker, Demi Moore, Stanley Tucci, Mary McDonnell

Screenplay: J.C. Chandor

Cinematography: Frank G. DeMarco

Music: Nathan Larson

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Black Bird – 2022 – Mini SeriesBlack Bird – 2022 – Mini Series

Apple Tv ல வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் Crime, Investigation Thriller வகையை சேர்ந்த ஒரு மினி சீரிஸ். IMDb 8.4⭐, 1 Season, 6 Episodes, Tamil dub ❌ உண்மையாக நடந்த சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட சீரியல் கில்லர் பற்றிய

Saani Kaayidham – 2022Saani Kaayidham – 2022

ஒரு சாதாரண பழிவாங்கும் கதை அதை ஹாலிவுட் ஸ்டைலில் ராவாக எடுத்து இருக்கிறார்கள்.  படத்தின் இயக்குனர் Quentin Tarantino ரசிகரா இருப்பார் போல. பழி வாங்கும் காட்சிகள் கொடூர வன்முறை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள்.  ஜாதி பிரச்சினை காரணமாக போலீஸ்

The Body (El Cuerpo) – 2012The Body (El Cuerpo) – 2012

சூப்பரான ஒரு ஸ்பானிஷ் Mystery Thriller. நிறைய பேர் பார்த்து இருப்பீங்க.  The Game (2016) தமிழ் & கன்னடம், The Body (Hindi) என பல தடவைகள் உடைக்கப்பட்ட பர்னிச்சர் ‌‌ IMDb 7.6 Tamil டப் இருப்பது போல் தெரியவில்லை.