இது ஒரு அருமையான சர்வைவல் சீரிஸ்.
⭐⭐⭐⭐.5 /5
7 Episodes
Tamil ✅ , Netflix
Can be watched with family ✅ (Very few violent scenes)
ரொம்ப நாள் ஆச்சு இது மாதிரி ஒரு நல்ல சீரிஸ் பார்த்து.ஒரே நாள்ல முடிச்சுட்டேன்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் திடீரென ஒரு வகையான காய்ச்சல் பரவுகிறது. இதில் உள்ளூர் மக்களுடன் சுற்றுலா பயணிகளும் மாட்டிக் கொள்கிறார்கள். எந்த தடுப்பூசி அல்லது குணப்படுத்தும் மருந்து இல்லாத நிலையில் மக்கள் இறக்க ஆரம்பிக்கிறார்கள்.

அரசாங்கம் இதை கட்டுக்குள் கொண்டு வருவது மட்டும் அல்லாமல் மருந்து கண்டுபிடிப்பு, நோய் பாதிக்கப்படாமல் இருக்கும் மக்களை காப்பாற்ற போராடுவது தான் கதை.
இதில் இரண்டு குழந்தைகளுடன் சுற்றுலா வந்த பெற்றோர்கள் பிளளைகளை விட்டு தனியாக மாட்டிக்கொண்டு மறுபடியும் அவர்களிடம் சேர முயற்சி செய்கிறார்கள்.

ஒரு நர்ஸ், ரிசர்ச் ஸ்டூடன்ட், உள்ளூர் டாக்சி டிரைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் என பல டிராக்குகளில் கதை நகர்கிறது.

இன்னொரு முக்கியமான ஒரு குரூப் அங்கே காடுகளில் வசிக்கும் பழங்குடி மக்கள். இவர்களை மட்டும் இந்த நோய் தாக்குவதில்லை.

இது போக ஊருக்குள் இருக்கும் ஒரு பவர்ஃபுல் ரிசர்ச் கம்பெனி.
இதை அனைத்தையும் ஒன்று சேர்ந்து திடீரென 30 வருடங்கள் பின்னாடி செல்வது, சில கதாபாத்திரங்களின் ஃப்ளாஷ் பேக் என மாறி வருகிறது.
ஆனால் இதை தெளிவாக எடுத்து உள்ளார்கள். ரொம்பவே எங்கேஜிங்கான திரைக்கதை மற்றும் நடிப்பு.
சர்வைவல் தொடர் என்பதால் பெரும்பாலும் மனித உணர்வுகள் மற்றும் அதனால் ஒவ்வொருத்தரும் எடுக்கும் முடிவுகள் மற்றும் அதனால் வரும் பின்விளைவுகள் என சூப்பராக இருந்தது.
முதல் எபிசோடில் வரும் டாக்டர் கொஞ்ச நேரம் வந்தாலும் நல்ல impact.
அந்த போலீஸ் கதாபாத்திரம் சிறப்பு. கடைசி வரை அவரு நல்லவரா கெட்டவரா என்பதை திறம்பட கொண்டு போய் இருக்கிறார்கள்.
அப்படியே போற போக்கில் கார்ப்பரேட் சதி, சாதிப் பிரிவினை , பழங்குடி மக்கள் பிரச்சினை, அரசியல் என எல்லாத்தையும் கவர் பண்ணி இருக்காங்க.
மனிதன் மகத்தான சல்லிப் பயல் என்பதை பல காட்சிகளில் பார்க்கலாம்.
அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் பழங்குடி ஒருத்தரிடம் உதவி கேட்பார் அப்போது கூட இருப்பவர் சொல்லுவார்
“உசுர கேட்குறதுக்கு முன்னாடி பேரையாவது கேளுங்கையா”.
அந்த டயலாக் காட்சியில் அருமையாக பொருத்தி இருக்கும்.
அந்த மான் நிக்கோபார் தீவுகள் இந்த கதைக் களத்துக்கு அருமையாக பொருந்தி உள்ளது. பசுமை மற்றும் தொடரின் தீம்க்கு பக்காவான லொக்கேஷன். தமிழ் டப் நல்லா இருக்கு 👍
ஆனா எதிர்பாராத இடத்தில் பொசுக்குனு முடிச்சு விட்டானுக. இப்ப அடுத்த சீசனுக்கு வெயிட் பண்ணனும்.
சில இடங்களில் மெதுவாக போனது. ஆனால் மொத்தமாக பார்த்தால் very good watch.
Go for it 👍