Dune – 2021

இயக்குனர் Denis Villeneuve குறிப்பிட்டு சொல்லக்கூடிய இயக்குனர்களில் ஒருவர். 

இவரது படங்களான Arrival, Sicario, Prisoners etc., எல்லாம் வேற லெவலில் இருக்கும். 

IMDb 8.3

தமிழ் டப் இப்போதைக்கு இல்லை. 

இந்த படம் ஒரு Sci Fi, Adventure படம். கதை நடப்பது கி.பி . 10, 191 ஆம் வருடத்தில் . கதைக்களம் அரசியல்,  மற்ற நாட்டின்  இயற்கை வளங்களை சுரண்டல்,  அதை தடுக்க நினைக்கும் பூர்வகுடிகள் ஆகியவற்றை சுற்றி நகர்கிறது. 

எனக்கு என்னமோ கதைக்கரு கிட்டத்தட்ட அவதார் படத்தோடதது தான். என்ன அங்கு அந்த மக்கள் காட்டுக்குள் வசிப்பவர்கள், இதில் பாலைவனத்தில் வசிக்கும் மக்கள். 

அங்கு ஒரு தனிமத்திற்காக தீவை கைப்பற்ற நினைப்பார்கள் இங்க Spice எனப்படும் ஒரு பொருள். 

புதுப்படம் மற்றும் தியேட்டர் மெட்டீரியல் என்பதால் ஸ்பாய்லர் கொடுக்க விரும்பவில்லை. 

படத்தின் விசுவல்ஸ், லொக்கேஷன்கள், தட்டான் மாதிரி பறக்கும் விமானங்கள், பெரிய பெரிய ஸ்பேஸ் ஷிப்,  பெரிய ஷைஸ் பாலைவன worm, செட்டிங்குகள் என எல்லாமே தரமாக இருக்கிறது. 

இசை Hans Zimmer புகுந்து விளையாடி இருக்கிறார் மனுஷன். நிறைய இடங்களில் ஹம்மிங் உடன் வரும் இசை அருமை.தேவையான இடங்களில் அதிரடி காட்டி இருக்கிறார். Headphone ல் அருமையாக இருந்தது, தியேட்டரில் இன்னும் சிறப்பாக இருக்கும். 

படம் சில இடங்களில் மெதுவாக நகர்கிறது. பொறுமையா பார்க்க வேண்டிய படம் .. 2.30 மணி நேரம் ஓடும் படம். 

கண்டிப்பாக பாருங்கள் 🔥🔥🔥🔥

இந்தியால Oct 22 தான் தியேட்டரில் ரிலீஸ் போல..

முடிந்த வரை தியேட்டரில் பாருங்கள். எனக்கு தியேட்டரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் இன்னொரு முறை கண்டிப்பாக பார்ப்பேன். 

Telegram la தரமான HD print இருக்கு.. DM for download link. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

A Clockwork Orange – 1971A Clockwork Orange – 1971

A Clockwork Orange – Tamil Review  டைரக்டர் பெயரே போதும் இந்த படம் பார்க்க. A Space Odessy , Full Metal Jacket , Shining போன்ற தரமான படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் Stanley Kubrick இயக்கத்தில்

Contact – 1997Contact – 1997

Contact – 1997 Tamil Review  இந்த படம் ரொம்ப வருஷமா என் வாட்ச் லிஸ்ட்ல இருந்தது. இது ஒரு Sci Fi படம்.  Forrest Gump பட இயக்குனரின் படம்,  ஹீரோயின் Jodie Foster ( Inside Man ,

The Killer – 2023The Killer – 2023

David Fincher’s ‘THE KILLER’ ⭐⭐⭐.25/5Tamil ✅ Netflix படம் ஸ்லோ தான் 🤗 ஒரு கான்ட்ராக்ட் கில்லர் ஒருத்தனை கொலை செய்யும் போது நடந்த தவறால் டார்கெட் மிஸ் ஆகிடுது‌ கில்லரோட முதலாளி & க்ளையண்ட் நம்ம மாட்டிக்குவோம் என்று