அற்புதமான Fantasy, Adventure உடன் சிறிது War genre mix பண்ணி வந்த Spanish படம் .
The Shape Of Water பட இயக்குனர் Guillermo del Toro வின் மற்றொரு தரமான படம் இது.
கண்டிப்பாக பார்க்கலாம்.
IMDb 8.2
Tamil dub ❌
Won 3 Oscars
படத்தின் ஆரம்பத்தில் ஒரு குரல் பாதாள உலகின் இளவரசி பற்றிய கதையை சொல்கிறது. அந்த இளவரசி பூமிக்கு வந்து தான் யார் என்பதை மறந்து இறந்து விட்டார் என்றும் பாதாள உலகின் அரசரான அவள் அப்பா தன் மகள் எத்தனை ஜென்மம் ஆனாலும் திரும்ப வருவாள் என்று காத்துக்கொண்டு இருப்பதாகவும் சொல்கிறார்.
படம் 1944 க்கு நகர்கிறது. ஸ்பெயினில் உள்ள ஒரு ராணுவ கேம்ப்க்கு வருகிறார்கள் நிறைமாத கற்பினியான அம்மா மற்றும் 10 வயது மகள் Ofelia . அந்த கேம்பின் கேப்டன் Vidal தனது மனைவி மற்றும் Step daughter Ofelia வை வரவேற்கிறார்.
அந்த ராணுவ கேம்ப் உள்ள ஊரில் உள்ள மலைப்பகுதியில் ஒரு புரட்சி படை உள்ளது. அதை அழிப்பதற்கு தான் கேம்ப் அமைத்து உள்ளார்கள்.
அன்று இரவு ஒரு பெரிய வெட்டுக்கிளி போன்ற உருவம் Ofelia வை எழுப்பி ஒரு Maze போன்ற இடத்திற்கு கூட்டிச் செல்கிறது. அங்கு Fauna எனப்படும் பாதி மனிதன் மற்றும் பாதி ஆடு போல இருக்கும் மனிதனை சந்திக்கிறாள்.
Fauna ஒரு மந்திர புத்தகத்தை Ofelia விடம் கொடுத்து அதில் மூன்று Task களை பண்ணிட்டு வந்தா பாதாள உலகின் இளவரசி ஆகலாம் என்கிறது.
அவள் டாஸ்க் முடித்தாளா ? போராளிகள் குழுவின் நிலைமை என்ன ஆனது என்பதை படத்தில் பாருங்கள்
நல்ல ஒரு Fantasy படம். கேப்டனாக வருபவர் செம வில்லத்தனம்.
செட்டிங்குகள் , மேக்கப், கேமரா வொர்க் எல்லாம் செம சூப்பர். இந்த மூன்று பிரிவுகளில் தான் ஆஸ்கர் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டிப்பாக பார்க்கலாம். கொஞ்சம் கொடூரமான வன்முறைக் காட்சிகள் உண்டு. ஆபாசக் காட்சிகள் இல்லை.
Ofelia moves with her mother to her stepfather’s house. At night, a fairy leads her to a faun who informs her that she is a princess and she needs to participate in three tasks to prove her royalty.
Ready Player One Tamil Review (Tamil Dubbed) பிரபல இயக்குனர் Stephen Spielberg இயக்கத்தில் வந்த Sci Fi , Adventure கலந்த ஆக்ஷன் படம். படம் நடப்பது 2045 ல . மக்கள் நிம்மதியாக வாழ சூழல் இல்லாததால்
The Lost City – 2022 Movie Review In Tamil Sandra Bullock, Brad Pitt & Channing Tatum – இந்த மூணு பேர் போதாதா இந்த படத்தை பார்க்க. வழக்கமான Formula படி வந்து இருக்கும் ஒரு
Season 4 – Vol 2 வில்லன் Vecna உண்மையிலேயே யாருனு ஒரு சூப்பர் ட்விஸ்ட் உடன் முடிந்தது Vol 1. நேத்து Vol 2 ல் மிச்சம் உள்ள இரண்டு எபிசோட்கள் வெளிவந்து உள்ளது. இந்த எபிசோட்கள் Vecna வை