House Of The Dragon – Season 1 – Tamil Review

House Of The Dragon – Season 1 – Tamil Review post thumbnail image

 

பிரபல Game Of Thrones(GOT) சீரிஸ்ஸின் Prequel ஆக வந்துள்ள தொடர் தான் இது. 

 
இதை பார்க்கும் முன்பு GOT பார்த்து இருந்தால் நல்லது. ஆனா கண்டிப்பாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. 
 
IMDb 8.6
Tamil dub ❌
Available @DisneyHotstar
 
House of the dragon tamil review, house of the dragon season 1 review, got tamil review, game of thrones tamil review , house of the dragon free downl
 
 
தொடரின் கதை என்னவென்று பார்க்கலாம். GOT மாதிரியே அரசர் பதவிக்கு அடித்துக் கொள்ளும் பல குடும்பங்களின் கதை தான் இது. 
 
கற்பனையில் அமைந்த ஒரு மிகப்பெரிய சார்ராஜ்யத்தை ஆளும் மன்னன். 
 
அவனுக்கு ஒரு தம்பி மற்றும் மகள் உள்ளனர். 
 
ராணி கர்ப்பமாக உள்ளார் & நாடே அரசரின் ஆண் வாரிசை எதிர்பார்க்கிறது. . ஆனா குழந்தை பெறும் போது ஏற்பட்ட சிக்கலில் ஆண் குழந்தை & ராணி இரண்டு பேரும் இறந்து விடுகிறார்கள்.
 
அரசரின் தம்பி கொஞ்சம் கோபக்காரனாக நிலையானவனாக இல்லாததால் தனது மகளை வாரிசாக அறிவித்து தனக்கு பின் அவள் தான் நாட்டை ஆள வேண்டும் என்று தீர்மானம் போட்டு சிற்றரசர்களிடம் ஒப்புதல் வாங்கி விடுகிறார். 
 
அரசர் பிற்பாடு வேறு பெண்ணை திருமணம் செய்து ஆண் குழந்தை பெறுகிறார். 
 
இப்போது அரசரின் தம்பி, மகள் , தற்போதைய மனைவி , மாமனார் மற்றும் இன்னபிற குடும்பங்கள் அரியணையை அடைய செய்யும் சித்து வேலைகள் மற்றும் அரசியல் தான் இந்த தொடர். 
 
தொடர் ஒரு Political Drama அதனால் வேகமாக நகரும் என எதிர்பார்க்க வேண்டாம். கிட்டத்தட்ட 6 எபிசோட்கள் Plot செட் செய்ய, கேரக்டர்கள் அறிமுகம்  என்று நகர்கிறது.
 
GOT அதனுடைய Production value விற்காக பெரிதும் பேசப்பட்ட ஒன்று. இந்த தொடர் அதையும் மிஞ்சும் விதத்தில் உள்ளது. குறிப்பாக  டிராகன்களின் டிசைன் மற்றும் கிராபிக்ஸ் செம குவாலிட்டி. 
 
இன்னொரு முக்கியமான விஷயம் பிண்ணனி இசை. Ramin Djawadi கலக்கி இருக்கிறார். 
 
நடிப்பை பொறுத்தவரை கதாபாத்திரங்கள் தேர்வு சிறப்பு. 
 
7-10 எபிசோட்கள் செம் ஸ்பீட் எடுக்கிறது. எதிர்பார்ப்பை எகிற வைத்து பொசுக்கென்று முடித்து விடுகிறார்கள்.அடுத்த சீசன் வருவதற்கு 2024 வரை காத்திருக்க வேண்டும். 
 
கண்டிப்பாக பார்க்கலாம் 👍
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Squid Game – 2021Squid Game – 2021

 இந்த சீரிஸ் இப்ப செம ஹாட்டா போய்ட்டு இருக்குது. நிறைய பேர் பார்த்து இருப்பீங்க. இன்னும் பார்க்காமல் இருக்கும் மக்களுக்காக இந்த போஸ்ட் 😊 IMDb 8.3  இந்த சீரிஸ் ஓட கான்செப்ட் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு.  உதாரணமாக Statue, release

தி சின்னர் (The Sinner)தி சின்னர் (The Sinner)

தி சின்னர் (The Sinner) இந்த தொடர் சாதாரண மக்கள் திடீரென ஏன் கொடூரமான கொலைகளை செய்கிறார்கள் என்பதை பற்றி ஆராயும் தொடர். ஒவ்வொரு சீசனிலும் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் குற்றங்கள் மற்றும் அதை ஏன் செய்தார்கள் என்பதை துப்பறியும் விதமாக

Poker Face – 2023 – Season 1Poker Face – 2023 – Season 1

Poker Face Review  10 Episodes (2 Yet to release)  ⭐⭐⭐⭐.25/5  Knives Out 1 & 2 பட டைரக்டர் Rian Johnson உருவாக்கத்தில் வந்துள்ள Crime Investigation சீரிஸ் இது.  ஹீரோயினுக்கு யார் பொய் சொன்னாலும் கண்டுபிடித்து