The Spy – தி ஸ்பை (2019) – Season 1

இது நெட்பிளிக்ஸ் வெளியிட்ட மினி சீரிஸ். 

ஒரு சீசன் அதில் 6 எபிசோட்கள் உள்ளது. 

சில சீரிஸ்களை பார்க்க ஆரம்பித்தால் நிறுத்த முடியாது. அந்த வகையை சேர்ந்த தொடர் இது. ஒரே மூச்சில் 6 எபிசோட் களையும் பார்த்து முடித்து விட்டேன். 

1960 – 1965 வருடங்களில் இஸ்ரேல் மற்றும் சிரியா நாடுகளுக்கு இடையே நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 

Eli Cohen என்ற இஸ்ரேலிய உளவாளி சிரியாவில் செய்யும் சாகசங்கள் பற்றி சொல்வது தான் இந்த தொடர்.  

1960 – களில் சிரியா மற்றும் இஸ்ரேல் இடையை எல்லையில் சண்டை ஏற்படுகிறது . இதனால் சிரியாவில் நடப்பதை பற்றி தெரிந்து கொள்ள ஒரு உளவாளியை அனுப்ப முடிவு செய்கிறது இஸ்ரேலின் பிரபல உளவு அமைப்பான Mossad. .

டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோரில் கிளார்க் வேலை பார்க்கும் Eli  சந்தோஷமாக மனைவி Nadia உடன் வாழ்ந்து வருகிறார். 

ஒரு சந்தர்ப்பத்தில் உளவாளியாக மொஸாட் அமைப்பால் தேர்வு செய்து பயிற்சி கொடுக்கப்படுகிறது. 

ஒரு நாளில் மனைவியிடம் கவர்ன்மென்ட் டிபென்ஸ் காண்ட்ராக்டர் வேலை என பொய் சொல்லி விட்டு அர்ஜென்டினா கிளம்புகிறார்.  

அங்கு புது அடையாளம் கொடுக்கப்படுகிறது. மிகப்பெரிய பணக்கார வியாபாரியாக Kamel Amin-Thabaath என்ற பெயருடன் வெளி வருகிறார்.  

அர்ஜென்டினா நாட்டிற்கு வந்துள்ள சிரியாவின் ராணுவ ஜெனரல் உடன் நட்பாகி அவரின் உதவியுடன் சிரியாவின் Damascus நகருக்கு செல்வதற்கு திட்டம் தீட்டப்படுகிறது. .

பல தடைகளை தாண்டி சிரியா வரும் Kamel தனது பணபலம் மற்றும் திறமையால் அரசியல், இராணுவத்தை சேர்ந்த பிரபலங்களுடன் நட்பாகிறார். கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தகவல்கள் சேகரித்து இஸ்ரேலுக்கு அனுப்புகிறார். கடைசியில் இவருக்கு என்ன நேர்ந்தது என்பதுடன் தொடர் முடிகிறது ‌.

நேர்த்தியான திரைக்கதை காரணமாக ஒவ்வொரு எபிசோடும் பரபரப்புடன் நகர்கிறது . 1960 களில் நடக்கும் கதை என்பதால் தயாரிப்பில் மெனக்கெட்டு இருக்கிறார்கள். 

ஒளிப்பதிவு மிக அருமை …. 

படத்தில் தகவல் தொடர்பு Morse Code – ஐ நம்பி உள்ளது. அதனால் ஒவ்வொரு முறையும் தகவல் தொடர்பு காட்சிகள் வரும் போது திரையில் பரிமாறிக்கொள்ளும் தகவல்களை டைப்பிங் பாணியில் காட்டுவது அருமை. 

பரபரப்பான காட்சிகள் பல உள்ளன… உதாரணமாக Eli ன் தாய் தந்தை புதைத்த இடத்தை கேட்கும் காட்சி, சிரியன் எல்லையை கடக்கும் போது தன் உடமைகள் பரிசோதனையில் இருந்து தப்பிப்பது, சிரியா இராணுவ அதிகாரி இஸ்ரேல் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொல்ல சொல்வது என நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.  

Osama Bin Laden – ன் அப்பா  Muhammad Bin Laden சில காட்சிகளில் வருகிறார்.  ஒசாமா பின்லேடன் ஒரு காட்சியில் சிறுவனாக தலைகாட்டுகிறார். 

இன்னொரு ட்ராக்கில் Eli யின் மனைவி கர்ப்பமாகி குழந்தை பெற்று தனிமையில் போராடுகிறார். இருவருக்கும் இடையே ஆன காதல் மற்றும் பிரிவின் துயரம் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது.  

Sacha Baron Cohen உளவாளி கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார்.. 

அவரது மனைவியாக Hadar Ratzon Rotem சிறப்பான தேர்வு.  

இது போன்ற தொடர்களை தவற விடக்கூடாது ..‌ கண்டிப்பாக பாருங்கள்…

IMDb Rating : 7.9 / 10

Available in Netflix 

Directed by Gideon Raff

Written by Gideon Raff and Max Perr 

Cast: : Sacha Baron Cohen, Hadar Ratzon Rotem, Noah Emm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Menu – 2022The Menu – 2022

The Menu Tamil Review  ஒரு வேளை சாப்பாட்டுக்கு $1250 (₹1L +) காசு கொடுத்து ஒரு தீவுக்கு போற எலைட் குரூப் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படம்.  அதுல ஹீரோயின் எதிர்பாராதவிதமாக மாட்டுகிறாள். யாராவது இங்கிருந்து தப்பித்தார்களா என்பதை படத்தில்

Blue Jay – ப்ளு‌ ஜெ (2016)Blue Jay – ப்ளு‌ ஜெ (2016)

Blue Jay Tamil Review  இது 2016 – ல் வந்த ரொமாண்டிக் திரைப்படம்.  படத்தின் நாயகன் Jim (Mark Duplass) தன் அம்மா இறந்துபோன காரணத்தினால் சொந்த ஊருக்கு வருகிறார்.  நாயகி Amanda (Sarah Paulson) தன் சகோதரி கற்பமாக

Signal – Sigeuneol- சிக்னல் – 2016Signal – Sigeuneol- சிக்னல் – 2016

Signal – Sigeuneol- சிக்னல் – 2016 – Korean Mini Series Review In Tamil  1 சீசன் அதில் 16 எபிசோட்களை கொண்ட கொரியன் தொடர்.  தொடரின் கதைக் கரு ரொம்பவே ஆர்வத்தை தூண்டக்கூடியதாக இருந்ததால் பார்க்க ஆரம்பித்தேன்.