Tips For IT Freshers/Students

 இந்த த்ரெட் அட்வைஸ் கிடையாது, இத படிங்க வேலை கிடைக்கும் என்ற நேரடியான தகவல் எதுவும் இல்லை.  என்னுடைய IT அனுபவத்தில் என்ன பண்ணா ஈஸியாக வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கு எப்படி கேரியர்ல முன்னேறலாம் என்பதை  பார்க்கலாம்.

இருக்குறலயே ஈஸியா கெடைக்கிறது அட்வைஸ்/ டிப்ஸ் தான். அத யார் வேணும்னாலும் கொடுக்கலாம் . அதனால் என்னுடைய Experience சொல்லிவிட்டால் இந்த த்ரெடட படிக்கிறவஙக தொடரலாமா ? வேண்டாமா என்று முடிவு செய்ய வசதியாக இருக்கும். 

என்னுடைய மொத்த IT அனுபவம் கிட்டத்தட்ட 15 வருடங்கள். முதல் பாதி கிட்டத்தட்ட 7 + வருடங்கள் JavaScript, jQuery, PHP மற்றும் அதை சார்ந்த தொழில்நுட்பங்களில் Web development ல் வேலை பார்த்து இருக்கிறேன். 

அதன் பின்  Devops(Docker, AWS,PCF, CI,CD ,Jenkins என பல  ஏரியாவில் வேலை பார்த்து இருக்கிறேன். தற்பொழுது ஒரு பெரிய அமெரிக்க வங்கியின் டெக்னிக்கல் பிரிவில் சென்னையில் (Individual Contributor Role) வேலை பார்த்து கொண்டு இருக்கிறேன். 

சில முக்கியமான விஷயங்களை பார்க்கலாம். 

1. Programming is the king 

இங்க நிறைய பசங்க கோடிங் பண்ண புடிக்கல புரியவே மாட்டேங்குது அதுனால நாங்க Testing/ Non Technical Role ல போக போறோம்னு சொல்றாங்க. 

இது ரொம்பவே தப்பான அணுகுமுறை.  Coding ஆர்வம் இல்லாமல்/ தெரியாமல் நீங்க IT Field ல உள்ள வந்து முன்னேறி நல்ல சம்பளம் வாங்குறது கொஞ்சம் கஷ்டம். 

வரவே முடியாது என்று சொல்லவில்லை ஆனால் உங்கள் வளர்ச்சி கொஞ்சம் மெதுவாக தான் இருக்கும். 

2. Courses alone won’t get you a job

Trending ல இருக்கும் டெக்னாலஜியை படித்தால் உதாரணமாக 

Java , Selenium, AWS, Azure, Devops , Python etc ., கோர்ஸ் படிச்சா வேலை கண்டிப்பாக கிடைக்கும் என்பது ஒரு மாயை தான். 

நிறைய பேருக்கு கோர்ஸ் மட்டும் படிச்சு வேலை கிடைத்து இருக்கலாம் ஆனால் ஸ்கில்ஸ் இல்லாமல் சர்வைவ் பண்ண முடியாது.

உதாரணமாக DevOps.

நாலு Tools தெரிந்து கொண்டால் Devops உலகில் வேலை கிடைக்கும் என நினைக்காதீர்கள். Devops நல்ல படியாக பண்ணணும் என்றால் SDLC, Agile , Development Process , Basic Linux, Bash , கொஞ்சம் Programming என்று பலவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டும். 

3. Make Coding As Your Passion

கடமைக்கு programming  படிக்காதீங்க. ஏன் படிக்கிறோம் ? எதுக்கு படிக்கிறோம் ? ஒவ்வொரு line of code ம் எப்படி கம்ப்யூட்டருக்கு புரியுற மாதிரி மாறுது internal ல என்ன நடக்குது என்று புரிந்து கொள்ளுங்கள். 

அதே மாதிரி ஒரு வெப்சைட் browser ல Enter பண்ணுணா பின்னாடி என்னென்ன நடக்குது என்று புரிந்து கொள்ளுங்கள். 

Enjoy பண்ணி Code எழுதுங்க.. 

How to learn coding? 

சின்ன சின்ன ப்ரோக்ராம் வைச்சு ஸ்டார்ட் பண்ணுங்க. 

https://www.w3schools.com/ – இந்த வெப்சைட்டில் Basics சிம்பிளா இருக்கும். 

YouTube ல நிறைய வீடியோக்கள் கிடைக்கும்

Pluralsight , Udemy போன்ற App களில்

கோர்ஸ்கள் சிறப்பாக இருக்கும். 

சும்மா படிக்காமல் சின்னதாக CRUD(Create, Read, Update and Delete) operations டிரை பண்ணி பாருங்க.

ஏதாவது ஒரு Programming language செலக்ட் பண்ணி அதுல Focus பண்ணுங்க.

என்னோட பரிந்துரைகள் C,C++, Java , Python , Java Script

சும்மா புதுசா அது வருது இது வருதுன்னு ஜம்ப் பண்ணாதீங்க. எல்லாத்துக்கும் அடிப்படை மேலே சொன்னவைகள் தான்.ஒண்ண உருப்படியா படிச்சா மத்த லாங்குவேஜ் எல்லாம் ஈஸியாக படித்து விடலாம். 

4.Communication 

நுனி நாக்கு ஆங்கிலம் எல்லாம் தேவை இல்லை. ஆனால் நீங்கள் நினைப்பதை மற்றவர்களுக்கு  convey பண்ணும் அளவிற்கு கண்டிப்பாக ஆங்கில புலமை தேவை. 

அவ்வளவு தான் நான் சொல்ல வந்தது. இது என்னுடைய பர்ஸனல் ஒப்பீனியன் தான்.  யாருக்காவது முரண்பாடு இருந்தால் தாராளமாக தெரிவிக்கலாம். 

5. Linux

விண்டோஸ் எல்லாம் வீடு மட்டும் காலேஜோட சரி.  வெளி உலகில் பெரும்பாலும் Linux தான். கொஞ்சம் Linux / Unix பற்றி தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். Bash Script தெரிந்து வைத்துக் கொள்வது சிறப்பு. 

Any questions please comment .  Again please avoid questions like 

1. Which Course is the best ? 

2. Where to study ? Etc.., 

All the best 👍

1 thought on “Tips For IT Freshers/Students”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Turning Point : 9/11 And The War On TerrorTurning Point : 9/11 And The War On Terror

Turning Point : 9/11 And The War On Terror tamil review  இது ஒரே மினி டாக்குமெண்டரி சீரிஸ் ‌‌ அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு நடந்த இரட்டைக் கோபுர தாக்குதல் மற்றும் அதன் பின் விளைவுகளை பற்றிய டாக்குமெண்டரி. 

ஜாம்பிலான்ட் – Zombieland (2009)ஜாம்பிலான்ட் – Zombieland (2009)

ஜாம்பிலான்ட் ( Zombieland) இது நகைச்சுவை கலந்த திகில் வகையை சார்ந்த ஜாம்பி திரைப்படம். உலகம் அழிந்த பின் அமெரிக்காவில் தப்பித்த நால்வர் மற்றும் அவர்களின் சாலை பயணங்களை (ஜாம்பிக்களின் நடுவில்) ஜாலியாக சொல்லும் திரைப்படம். ஒரு இளைஞன் (பெற்றோர்களை சந்திப்பது