The Silent Sea – 2021

The Silent Sea Tamil Review 

2022 வது வருடத்தின் முதல் பதிவு.

Happy New Year To All 

கொரியாவில் இருந்து வந்துள்ள Sci Fi சீரிஸ். 

1 Season , 8 Episodes வெளியாகி உள்ளது. 

The silent sea korean series review in tamil, korean mystery series review in tamil, the silent sea in tamil, korean series in tamil , Hollywood Tamil

நான் இந்த தொடரை பற்றி எதுவுமே படிக்காமல் பார்த்தேன் அதனால் சஸ்பென்ஸ் நன்றாக இருந்தது. எனவே ஸ்பாய்லர் இல்லாமல் Short-a இந்த தொடரை பற்றி பார்க்கலாம். 

IMDb 7

Tamil dub ❌

எதிர்காலத்தில் நடப்பது போன்ற தொடர் இது. உலகத்தில் தண்ணீர் முழுவதும் காலி ஆகிவிட்டது.  சமூகத்தின் ஏற்ற தாழ்வுகளை தண்ணீர் தான் முடிவு செய்கிறது. தண்ணீர் ரேஷன் மூலமாக தான் வழங்கப் படுகிறது. 

இந்நிலையில் நிலவில் உள்ள 5 வருடங்களுக்கு முன்பு மூடப்பட்ட விண்வெளி நிலையத்தில் இருந்து ஒரு முக்கியமான பொருளை எடுத்து வரவேண்டும் என தென்கொரியா அரசு ஒரு குழுவை தயார் செய்கிறது. 

அந்த குழுவின் கேப்டன் Han ( Train To Busan , Squid Game la Sales man ),  அறிவியல் ஆலோசகராக Dr. Song ( Bae Doona – Kingdom & The Host ), டாக்டர் மற்றும் சில வீரர்கள் உள்ளனர். 

இவர்கள் கிளம்பி நிலாவில் உள்ள விண்வெளி நிலையத்திற்கு போன பின்பு வரும் பிரச்சனைகளும் அதை சமாளித்து அந்த முக்கிய பொருளை எடுத்து வந்தார்களா என்பதை சொல்கிறது முதல் சீசன். 

அந்த முக்கிய பொருள் என்ன என்பது நம்மை போலவே அந்த குழுவுக்கும் தெரியாது. 

நல்ல ஒரு புதுமையான கான்செப்ட் மற்றும் கதை‌. ஆனால் எடுத்த விதம் வழக்கம் போல தான் உள்ளது. Aliens, Resident Evil  போன்ற படங்கள் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. 

சில காட்சிகள் ரொம்பவே இழுக்கிறார்கள் .. Skip 10 seconds பட்டனை அழுத்த வேண்டியது ஆகிற்று.. 

மற்றபடி ரொம்ப எல்லாம் ஃபோர் இல்லை, நிறைய ட்விஸ்ட்கள் உள்ளன, செட்டிங்ஸ், லொக்கேஷன்கள், Future gadgets என அனைத்தும் அருமை. 

நல்ல டைம் பாஸ் ‌‌. . நான் ஒரே நாளில் பார்த்து முடித்து விட்டேன். டைட்டில், recap எல்லாம் ஸ்கிப் பண்ணுணா சராசரியாக ஒரு எபிசோட் 35 நிமிடங்கள் ஓடும். 

கண்டிப்பாக பார்க்கலாம் 👍

Based on

The Sea of Tranquility

by Choi Hang-yong

Developed by

Netflix

Written by

Park Eun-kyo

Directed by

Choi Hang-yong

Starring

Bae Doona

Gong Yoo

Lee Joon

Kim Sun-young

Lee Moo-Saeng

Watch Trailer; 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

E.T. The Extra-Terrestrial – 1982E.T. The Extra-Terrestrial – 1982

E.T. The Extra-Terrestrial Tamil Review  ⭐⭐⭐⭐.5/5 Tamil ❌ – ஏலியன் தெரியம பூமில மாட்டிகிது – Scientists இத தேடுறாங்க – ஏலியன் ஒரு பையன் கூட ப்ரண்ட் ஆகுது – இந்த பையன் & Co எப்படி

Carnival Row – கார்னிவல் ரோ – Season 1 (2019)Carnival Row – கார்னிவல் ரோ – Season 1 (2019)

இது ஒரு அமானுஷ்யம் கலந்து கற்பனை உலகில் நடக்கும் திகில் கலந்த தொடர்.  Fae எனும் ஊரில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.மனிதர்கள், Fae எனப்படும் பறக்கும் தேவதைகள், Puck – எனப்படும் ஆடு போன்ற தலை கொண்ட மனிதர்கள் என பலதரப்பட்ட

Alienist – ஏலியனிஸ்ட் – Season 1 (2018)Alienist – ஏலியனிஸ்ட் – Season 1 (2018)

இது 1890 – களில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடப்பது போன்ற தொடர்.  சைக்காலஜிஸ்ட் என்று ஒரு மருத்துவ பிரிவு வருவதற்கு முன்பு மனநோய்க்கு ஆளான மக்களுக்கு வைத்தியம் பார்ப்பவர்கள் தான் ஏலியனிஸ்ட்.  தொடரின் கதைக்கு வருவோம். படத்தின் ஆரம்பத்தில் ஒரு