2021 – ஒரு பார்வை

2021 ஒரு வழியா முடிகிறது. இந்த வருடமும் பெரும்பாலான பகுதியை கொரானா ஆக்கிரமித்து கொண்டது. ஆனால் 2020 ஐ ஒப்பிடுகையில் இந்த வருடம் கொஞ்சம் பரவாயில்லை. 

2020 ல் ட்விட்டரில் கணக்கு ஆரம்பித்தேன். நிறைய போஸ்ட்டுகள் போட்டேன் . ஆனால் பெரிதாக response இல்லை. 2021 ல் பிற்பகுதியில்  ஒரு நாள் தினேஷ் DM வந்து த்ரெட்டா போடுங்க மாம்ஸ் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும் என்று சொன்னாரு. 
த்ரெட் போட ஆரம்பித்தவுடன் மிகப்பெரிய ஆதரவு. குறிப்பாக Recommendation த்ரெட்டுகளுக்கு ஆதரவு பிச்சுகிச்சு.
10 + Followers ல் இருந்து மள மளவென வளர்ந்து தற்போதைய நிலவரப்படி 8200+ Followers. 
ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நன்றி. 
கொஞ்சம் எதிர்மறை கமெண்ட்களும் வந்தது. நம்ம நல்லா இருக்கு கண்டிப்பாக பாருங்கள் என்று சொன்னால் இந்த படம் நல்லாவே இல்லை என்று கமெண்ட்டுகள் வந்தது. 
அதனால் தான் handle name ஐ Tamil Hollywood Review என்பதில் இருந்து  TamilHollywood Recommendation  என்று மாற்றினேன். 
இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால் படத்தின் நிறை மற்றும் குறைகளை பேசி விட்டு படம் பார்க்கலாமா ? வேண்டாமா ? என்பதை படிப்பவர்களின் சாய்ஸ்ஸில் விடுவது.
அப்படியே படம் ரொம்ப நல்லா இருந்தாலும்/ நல்லா இல்லாவிட்டாலும் “தனிப்பட்ட” என்ற வார்த்தையை சேர்ப்பது. ஏனென்றால் நமக்கு நல்லா இருக்கு என்று தோணும் படம் இன்னொருத்தருக்கு கேவலமான படமாக தோன்றுகிறது. இதுவே ரிவர்ஸிலும் நடக்கலாம்.
இது நன்றாகவே வேலை செய்தது‌ . பெரிதாக அதற்கப்புறம் எதிர்மறை விமர்சனங்கள் இல்லை. 
இன்னொரு முக்கிய பிரச்சினை குடும்பத்துடன் பார்க்கலாமா என்ற கேள்வி ?  இதனை எவ்வாறு அணுகுவது என்பது பெரிய பிரச்சினை. ஏனென்றால் Sexual Scenes, Violence, Language என நிறைய இருக்கின்றன.  தற்போதைய ஆங்கில படங்களின் வசனங்கள் எப்படியும் கொஞ்சம் கெட்ட வார்த்தைகளை சேர்க்க தவறுவதில்லை. 
சிலர் எவ்வளவு வன்முறை இருந்தாலும் பரவாயில்லை ஆனால் செக்ஸ் காட்சிகள் இருந்தால் சொல்லிவிடுங்கள் என்கிறார்கள். 
ஆனால் செக்ஸ் காட்சிகள் அளவிற்கு வன்முறைக் காட்சிகள் மற்றும் கெட்ட வார்த்தைகள் குழந்தைகளிடம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. 
அதனால் IMDb ல் வரும் Parent’s Guide Section ஐயும் ட்வீட்டில் போட ஆரம்பித்தேன்.  சிலருக்காவது அது உதவிகரமாக இருந்திருக்கிறது என நம்புகிறேன் ‌‌.  
இன்னொரு முக்கிய பிரச்சினை தமிழ் டப் படங்களை பரிந்துரை செய்வது இல்லை என்பது.  இதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. 
முன்பை விட இப்பொழுது தான் தமிழ் டப் செய்வது சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. பார்க்கலாம் எப்படி போகிறது என்று. 
2021 ல் பிரபலமான போஸ்ட்களை பற்றி ஒரு பார்வை பாக்கலாம்
Twitter ல் ரொம்பவே பாப்புலராக லைக்குகளை அள்ளிக் குவித்த Top 3  போஸ்ட்ஸ்.
Twitter : 
(1152 Likes ) 
2. Investigation Thrillers
(956 Likes ) 
3. Mini Series – Investigation Thrillers – Part -1
(492 Likes) 
Blog : 

Mini-Series- Recommendation – Investigation Thrillers – Part 1 நிறைய பார்வைகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது.
(503 Views )
எனக்கு தனிப்பட்ட முறையில் நான் மிகவும் விரும்பப்பட்டு எழுதிய போஸ்ட். 
The Peanut Butter Falcon – என்ற படத்தின் விமர்சனம். அவ்வளவு அருமையான ஃபீல் குட் படம். 
(141 Views ) 
2021 – Top 5 Posts  ( Based on views )
1. Mini-Series- Recommendation – Investigation Thrillers – Part 1 https://www.tamilhollywoodreviews.com/2021/12/mini-series-recommendation.html (503 Views) 
2. DAVID ATTENBOROUGH: A LIFE ON OUR PLANET (2020)
3. Mutual Funds – Basics 
4. The Chestnut Man – 2021
5. எட்ஜ் ஆஃப் டுமாரோ – Edge Of Tomorrow (2014)
2021 ல் நான் தியேட்டரில் பார்த்த ஒரே படம் Spider Man : No Way Home . அதுவும் நன்றாகவே இருந்தது. 
2021 ல் ரொம்பவே எதிர்பார்த்து ஏமாற்றிய படங்கள். ரொம்ப மோசம் என்று சொல்ல முடியாது. ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வில்லை. 
மேலும் கொஞ்சம் Blog Statistics : 
2021 ல் கிடைத்த மொத்த Views: 42200+ 

Twitter ல் இருந்து Blog ஐ விசிட் செய்தவர்கள்: 9400+
 Google Search மூலமாக Blog ஐ விசிட் செய்தவர்கள்: 2800
IMDb வழியாக – 1100+ 

 
பல்வேறு நாடுகளில் இருந்து வந்த Views: 
இந்தியா – 20,400 + 
அமெரிக்கா – 5000+ 
ஜெர்மனி – 2900+
இந்தோனேஷியா – 2800+ 
இஸ்ரேல் – 2000+ 

Telegram : 

டெலிகிராம் சேனலின் முக்கிய நோக்கம் பரிந்துரைக்கும் படங்களின் டவுன்லோட் லிங்குகளை பகிர்வது மட்டுமே. அதன் காரணமாக நான் Private Channel லாகவே வைத்து இருக்கிறேன்.  
தற்போதைய நிலவரப்படி நமது சேனலில் 1332 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.‌
Google Search Statistics
போன வருடத்தை விட இந்த வருடம் Google Search ல் நமது Blog முன்னேறி உள்ளது. 

அடுத்த வருடம் இன்னும் நிறைய படங்கள் மற்றும் தொடர்களின் பரிந்துரைகளோடு சந்திக்கிறேன். 
எனக்கு தெரிந்து யாரையும் புண்படுத்தும் படியாக போஸ்ட் எதுவும் போடவில்லை. இதையே தொடர வேண்டும் என முயற்சி செய்கிறேன். 
அனைவருடைய ஆதரவிற்கும நன்றிகள் பல. 
ஏதாவது நிறை மற்றும் குறைகள் இருந்தால் சொல்லவும் திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறேன். 
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏
Welcome 2022 .. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ரிச்சர்ட் ஜீவல் (Richard Jewell ) – 2019ரிச்சர்ட் ஜீவல் (Richard Jewell ) – 2019

ரிச்சர்ட் ஜீவல் (Richard Jewell Tamil Review) – 2019 இத்திரைப்படம் 1996 நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.  ஹாலிவுட்டின் மூத்த இயக்குனர் மற்றும் நடிகர்களில் ஒருவரான கிளின்ட் ஈஸ்ட்வுட் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படம். கிளின்ட் ஈஸ்ட்வுட்

தி கிரீன் மைல் (The green mile )தி கிரீன் மைல் (The green mile )

தி கிரீன் மைல் (The green mile ) Tamil Review  ஷ்டீபன் கிங்(Stephen King )  எழுதிய சீரியல் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். ஜெயிலில் நடக்கும் அமானுஷ்யம் சிறிது கலந்த மிகவும் வித்தியாசமான கதை. இயக்குனர் Frank Dorabant

Financial Crimes – Enron ScandalFinancial Crimes – Enron Scandal

உலகத்தை உலுக்கிய சில Financial Crimes ஐ நம்ம பாத்துட்டு வர்றோம். அந்த வகையில் ஒரு காலத்தில் Wall Street ன் செல்லப் பிள்ளையாக இருந்த Enron Company எப்படி நாசமா போச்சுனு பார்க்கலாம்.  Enron 1985 ல ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி