தி கிரீன் மைல் (The green mile )
ஜெயிலில் நடக்கும் அமானுஷ்யம் சிறிது கலந்த மிகவும் வித்தியாசமான கதை.
இயக்குனர் Frank Dorabant ..Shasank Redemption எனும் காலத்தால் அழியாத திரைப்படத்தை இயக்கியவரின் மற்றும் ஒரு படைப்பு.
படத்தை பார்க்க முக்கிய காரணங்கள், டாம் ஹான்க்ஸ்(பால் ) மற்றும் மைகேல் கிளார்க்(ஜான் ) – இன் இயல்பான நடிப்பு மற்றம் மென்மையான திரைக்கதை.
ஜான் என்பவன் இரண்டு சிறு குழந்தைகளை கற்பழித்து கொலை செய்தததாக குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை கைதியாக வருகிறான். ஆனால் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டிருக்கிறான்.
ஜெயில் அதிகாரி பால், சைக்கோ தனமான அதிகாரி பெர்சி, மற்ற கைதிகள் மற்றும் ஒரு எலி என அனைவருக்கும் நடுவில் சுவாரஸ்யமாக செல்கிறது கதை.
நீங்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய அருமையான திரைப்படம். வித்தியாசமான திரைப்படமும் கூட.