Financial Crimes – Enron Scandal

உலகத்தை உலுக்கிய சில Financial Crimes ஐ நம்ம பாத்துட்டு வர்றோம். அந்த வகையில் ஒரு காலத்தில் Wall Street ன் செல்லப் பிள்ளையாக இருந்த Enron Company எப்படி நாசமா போச்சுனு பார்க்கலாம். 

Enron 1985 ல ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி ‌‌இந்த கம்பெனியோட முக்கிய வியாபாரம் Energy business.  .

நல்லா innovation எல்லாம் பண்ணி 90 s ல செம் லாபம் பார்த்த நல்ல வளர்ச்சி அடைந்து உள்ளனர். 

இதெல்லாம் பார்த்து பாராட்டி பல அவார்டுகள் கொடுத்து இருக்கிறார்கள். 

America’s Most Innovative Company” by Fortune for six consecutive years: 1996–2001.

1992 ல அவங்களோட Accounting method’a (MTM) மாற்றிக்கொள்ள ரெகுலேட்டர்ஸ் அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். இந்த முறையில் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு. 

2000 வருடத்தில் வீடியோ ரெண்டல், Broadband என பல பிசினஸ்ஸில் பெரிய அளவில் முதலீடு செய்து இருக்கிறார்கள். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இந்த கம்பெனியின் பங்கு அதன் All time High விலையை எட்டியது $90.56

நிறைய பிசினஸ் சரியா போகவில்லை என்றாலும் புதிய Accounting முறையை தவறான வழியில் பயன்படுத்தி லாபத்தை கூட்டியும், நஷ்டத்தை குறைத்தும் காட்டி உள்ளார்கள். 

கொஞ்சம் கொஞ்சமாக நஷ்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. 2001 ல் CEO சத்தமில்லாமல் திடீரென ரிசைன் பண்ணிட்டு எஸ்கேப் ஆகிறான். அந்த வருடம் $137 Billion loss காட்டப்படுகிறது. 

அனலிஸ்ட்ஸ் எல்லாம் ரேட்டிங் குறைக்க ஆரம்பிக்க பங்கு விலை கட கடவென குறைந்து $40 க்கு வர்த்தகம் ஆகிறது. 

2001 ல் $618 மில்லியன் நஷ்டம் என சொல்கிறது கம்பெனி.  இவனுக ஏதோ சரியில்லையே என்று சந்தேகப்படும் SEC ( நம்ம ஊரு SEBI மாதிரி) விசாரணையை ஆரம்பிக்கிறது. 

கடைசியில் வேறு வழி இல்லாமல் நாங்க 1997 ல இருந்து தப்பான கணக்கு தான் காட்டிட்டு

 வர்றோம் என ஒப்புக் கொள்கிறது கம்பெனி. 

December 2 , 2001 அன்று கம்பெனி திவாலானது என்று அறிவிக்கப்பட்டது. அன்றைய பங்குசந்தையின் முடிவில் பங்கின் விலை $0.26. 

June 15 ,2002 ல் பங்கு சந்தையில் இருந்து கம்பெனி தூக்கப்படுகிறது. 

மொத்தமா இன்வெஸ்ட்டர்ஸ்களுக்கு நஷ்டமான தொகை $74 Billions. 

இந்த பிரச்சினைல பெரிய ஆப்பா வைக்கப்பட்டது அந்த கம்பெனி ஆடிட்டர் மற்றும் அந்த ஆடிட்டர் கம்பெனி. 

இவனுக பண்ணுண பிராடுல ஆடிப்போனது அரசாங்கம். இவனுக எந்த எந்த வகையில் எல்லாம் பிராடு பண்ணாங்கனு கண்டுபிடித்து அந்த ஓட்டைகள் எல்லாத்தையும் அடைக்கிற மாதிரி புதுசா ஒரு சட்டமே உருவாக்கப்பட்டது. அது தான் Sarbanes–Oxley act இத July 2002 ல் அப்போதைய அதிபர் George W. Bush நடைமுறைப்படுத்தினார். 

இது மாதிரி இன்னும் ஒரு interesting டாபிக்கோட அடுத்த த்ரேட்ல மீட் பண்ணுவோம். இந்த மாதிரி டாபிக்ல இன்ட்ரெஸ்ட் இருந்தா கமெண்ட் பண்ணுங்க இன்னும் நிறைய பேசலாம். 

For more information : https://www.investopedia.com/updates/enron-scandal-summary/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Witcher – Season – 2The Witcher – Season – 2

The Witcher – Season – 2  Tamil Review  இன்னும் முதல் சீசன் பார்க்கவில்லை என்றால் அதை பார்த்து விட்டு 2 சீசன் ஆரம்பிக்கவும்.  1st Season Review :  முதல் சீசனில் சிரி மற்றும் Geralt இணைந்தது உடன்

[Documentary] Night Stalker : The Hunt For A Serial Killer -2021[Documentary] Night Stalker : The Hunt For A Serial Killer -2021

இது ஒரு டாக்குமெண்டரி. Night Stalker என பட்டப்பெயர் இடப்பட்ட Richard Ramirez எனும் கொடூர கொலைகாரனை கண்டுபிடித்ததை பற்றியது‌.  இந்த டாக்குமெண்டரி பற்றி பார்க்கும் முன் இந்த Richard Ramirez பற்றி பார்க்கலாம்.  1960 ஆம் வருடம் பிறந்த இவனின்