10 Cloverfield Lane -2016

10 Cloverfield Lane  Tamil Review 

Wow செம Sci Fi திரில்லர். கண்டிப்பாக பாருங்கள். 🔥🔥🔥

IMDb 7.2

தமிழ் டப் இல்லை. 

ஆக்ஸிடென்ட்ல மாட்டிக்கிட்ட ஹீரோயினை ஒருத்தன் காப்பாற்றி பூமிக்கடியில் உள்ள bunker la வைச்சுருக்கான். உலகம் முழுவதும் அழிஞ்சு விஷவாயு பரவி இருக்கு வெளிய போனா சங்குதான் என்கிறான். 

10 cloverfield lane sci fi thriller movie review in tamil, 10 cloverfield lane IMDb, 10 cloverfield lane cast, apocalypse based movies, sci fi movie

ஆனா அதை கன்பர்ம் பண்ணணும் என்றால் வெளியே போகணும். அந்த கதவு சாவி ஓனர்ட்ட இருக்கு.  

அவன் சொல்வதை நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கும் ஹீரோயின் என்ன பண்ணுகிறார் என்பதை வைத்து படத்தை பக்காவாக நகர்த்தி சென்று இருக்கிறார்கள். 

அதே ரூம்ல இன்னொருத்தன் இருக்கிறான் . அவன் கை உடைஞ்சு கட்டு போட்டு இருக்கிறான். நான் உலகம் அழியுறத பார்த்தேன் நானா தான் இந்த இடத்துக்கு வந்தேன் என்கிறான். 

ஒரு சமயத்தில் கடத்தி வந்தவன் உண்மை பேசுவது போல் தெரிந்தாலும் , இன்னொரு.சமயத்தில் பொய் சொல்லி சிறைப்படுத்தி வைத்து இருப்பது போல தெரிகிறது ஹீரோயினுக்கு. 

இதே மனநிலை தான் படத்தை பார்க்கும் நமக்கும் . அந்த சஸ்பென்ஸ் தான் படத்தின் பலம். 

கடைசியில் ஹீரோயின் எடுத்த முடிவு என்ன ? உண்மையில் உலகம் அழிந்து விட்டதாக இல்லையா என்பதை படத்தில் பாருங்கள்.

படத்தில் மொத்தம் 3 பேர் தான் . ஒரே வீட்டிற்கு நடக்கும் கதை என்றாலும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என  பரபரப்பாக செல்கிறது.

Bunker ஓனராக வருபவர் செம நடிப்பு. 

கண்டிப்பாக பாருங்கள் 🔥🔥🔥

Director: Dan Trachtenberg

Cast: Mary Elizabeth Winstead, John Goodman, John Gallagher Jr.

Screenplay: Josh Campbell & Matthew Stuecken and Damien Chazelle

Cinematography: Jeff Cutter

Music: Bear McCreary

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Ozark – ஒஷார்க் – Season-1 (2017)Ozark – ஒஷார்க் – Season-1 (2017)

Ozark Tamil Review  இது ஒரு க்ரைம் த்ரில்லர் சீரிஸ். நெட்ப்ளிக்ஸ் தயாரிப்பில் இதுவரை 3 Season – கள் வெளியிடப்பட்டுள்ளது. முதல் சீசன் விமர்சனத்தை இப்பொழுது பார்க்கலாம்.  இது ரொம்பவே டார்க்கான சீரிஸ் எனவே குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்றது அல்ல.

No Exit – 2022No Exit – 2022

No Exit – 2022 Hulu Movie Tamil Review  நேத்து Hulu ல ரிலீஸ் ஆகி இருக்கும் ஒரு Horror Thriller .  புயலின் காரணமாக ஒரு முகாமில் தஞ்சமடைகிறார் ஹீரோயின். அங்கு வெளியே ஒரு காரில் ஒரு கடத்தப்பட்ட

Jurassic Park Dominion – 2022Jurassic Park Dominion – 2022

பிரபலமான Jurassic Park படங்களின் வரிசையில் கடைசி மற்றும் 4 வந்து பாகமாக வந்துள்ள படம்.  நான் ஜிராஸிக் பார்க் படங்களின் பெரிய ஃபேன் படம் எனக்கு பிடிச்சு இருந்தது 😊 IMDb 5.7 Tamil dub ✅ Available @primevideo