Death On The Nile – 2022

Death On The Nile Tamil Review 

அகதா கிறிஸ்டி நாவலை தழுவி எடுக்கப்பட்ட ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர் இது. 

நைல் நதியில் உல்லாசப் பயணம் போகும் ஒரு பெரிய படகில் பணக்கார பெண் ஒருவர் கொல்லப்படுகிறார் . 

Death on the Nile movie review in tamil, whodunit movie, movies like knives out, gal Gadot, Emma Mackay, investigation thrillers category movies

யார் அந்த பெண்ணை கொன்றது என்பதை ஹீரோ கண்டுபிடிப்பது தான் படம். 

பெரிய பணக்கார பொண்ணு Linnet (Gal Gadot ❤️) அவளின் நெருங்கிய நண்பி Jackie (Emma Mackay) . Jackie ன் காதலன் Simon. 

ஒரு கட்டத்தில் Simon மற்றும் Linnet சேர்ந்து Jackie யை கழட்டி விட்டு விட்டு கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள். 

Honeymoon க்கு  சொந்தகாரர்கள் ப்ரண்ட்ஸ் என பெரிய கூட்டத்தை கிளப்பிக்கொண்டு ஒரு போட்டில் நைல் நதியில் ட்ரிப் போறாங்க. 

இதில் ஒரு கெஸ்ட் தான் ஹீரோ மற்றும் படத்தின் டைரக்டரான  Kenneth Branagh டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் வருகிறார். 

நடுவே Jackie யும் போட்டில் புகுந்து இவர்களுக்கு குடைச்சல் கொடுக்கிறார். 

Boat ல இருக்குற பாதி பேருக்கு மேல் Linnet ஐ கொல்வதற்கு காரணம் இருக்குது. So யாரு கொலையாளி என்பதை படத்தில் பாருங்கள். 

படம் நல்லா இருக்கு. ஆனா ஏதோ மிஸ்ஸிங் . Linnet and Simon ஜோடியின் ரொமான்ஸ் அவ்வளவு எடுபடவில்லை. 

ஏமாற்றப்பட்ட பெண்ணான Jackie கதாபாத்திரத்தில் செக்ஸ் எஜீகேஷன் சீரிஸ் Maeve Wiley (Emma Mackay) நன்றாக பொருந்தி உள்ளார். 

Gal Gadot க்கு பெரிதாக ரோல் இல்லை. 

GOT ல் பேமஸான Rose ஒரு சின்ன ரோலில் வருகிறார்.‌

நல்ல ஒரு Whodunit படம் . கண்டிப்பாக பார்க்கலாம் 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Grimcutty – 2022Grimcutty – 2022

Grimcutty Tamil Review  ஒரு சர்ப்ரைஸ்க்காக ரிவ்யூ எதுவும் பாக்காம சில படங்களை பார்ப்பது உண்டு. இன்னிக்கு Hulu ல வெளியாகி உள்ள ஹாரர் படம் இது.  இன்டெர்நெட்ல வரும் ஒரு கொலைகார கேரக்டர் உயிரோட வந்து கொலை பண்ணுது.  ஹீரோயின்

Black Box – ப்ளாக் பாக்ஸ் (2020)Black Box – ப்ளாக் பாக்ஸ் (2020)

இது அமேசான் தயாரித்து வெளிவந்துள்ள திரைப்படம்.அமேசான் ப்ரைமில் வெளியாகி உள்ளது. இது ஹாரர் , திரில்லர் மற்றும் கொஞ்சம் அமானுஷ்யம் கலந்த திரைப்படம்.  படத்தின் நாயகன் நோலன் (Mamoudou Athie) பயங்கர கார் விபத்தில் சிக்கி மனைவியை இழந்தது மட்டும் அல்லாமல்

God’s Crooked Lines – 2022 – SpanishGod’s Crooked Lines – 2022 – Spanish

God’s Crooked Lines (AKA) Los renglones torcidos de Dios review  பிரபல ஸ்பானிஷ் இயக்குனர் Oriol Paulo இயக்கத்தில் The Body, The Invisible Guest வரிசையில் இன்னொரு தரமான 🔥🔥 சம்பவம். அவரோட தனித்துவம் திரைக்கதை..அத பக்காவா