The Chestnut Man – 2021

The Chestnut Man – 2021 Mini Series Review In Tamil

Denmark – ல இருந்து வந்து இருக்கும் க்ரைம் த்ரில்லர். 

IMDb – 8.4
1 Season, 6 Episodes
சீரியல் கில்லர் பற்றிய சூப்பரான investigation thriller.. 
The Chestnut Man series review in tamil, the Chestnut Man Netflix series, crime thriller series, series to watch weekend, binge watch series.

My recommendation – highly recommended 🔥🔥🔥🔥🔥
ஹீரோயின் ஒரு டிடெக்டிவ் தன் மகளுடன் வசித்து வருகிறார். மகளுடன் இருக்க முடியாமல் வேலைப்பளு அதிகமாக இருப்பதால் வேறு டிபார்ட்மெண்ட் மாற முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். 
இன்னொரு பக்கம் அந்த ஊரு சமூக நலத்துறை அமைச்சரான பெண்  Rosa தன் பெண் குழந்தையை பறிகொடுத்த சோகத்தில் அரசியலில் இருந்து விலகி இருந்துவிட்டு ஒரு வருடம் கழித்து மீண்டும் பணிக்கு திரும்புகிறார். 
ஹீரோயினின் மேலதிகாரி ஒரு பெண் கொலையை விசாரிக்க அவரை அனுப்புகிறார். அவருடைய பார்ட்னராக புதிதாக ஒருவரை அனுப்பி வைக்கிறார். 
கொலையை விசாரிக்க இருவரும் போகின்றனர். அங்கு ஒரு இளம் பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரது ஒரு கை மணிக்கட்டு பகுதியில் வெட்டி எடுக்கப்பட்டு இருக்கிறது. 
இறந்த பெண் உடலின் பக்கத்தில் Chestnut Man எனப்படும் பொம்மை வைக்கப்பட்டு உள்ளது.  அது Chestnut மற்றும் குச்சிகளால் அந்த ஊர் குழந்தைகள் செய்யும் பொம்மை ‌‌.
இந்த கொலையின் தடயவியல் துறை அறிக்கையில் அந்த Chestnut Man ல் உள்ள கைரேகைகள் ஒரு வருடம் முன்பு இறந்து போன மினிஸ்ட்ரின் மகள் கைரேகையுடன் ஒத்துப் போகிறது. 
இதுக்கு அப்புறம் இன்னொரு பெண் கொலை செய்யப்பட்டு கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பக்கத்தில் Chestnut Man பொம்மை வைக்கப்பட்டு உள்ளது. அந்த பொம்மையிலும் இறந்து போன பெண்ணின் கைரேகைகள் உள்ளன. 
ஹீரோயின் மற்றும் அவரது பார்ட்னர் இணைந்து இந்த கொலைகாரனை தேட ஆரம்பிக்கிறார்கள். 
கொலைகாரன் யார் ? எதன் அடிப்படையில் கொலை செய்கிறான்?  இறந்த போன மினிஸ்டர் பெண்ணின் ரேகைகள் எவ்வாறு வந்தது ?  போன்ற கேள்விகளுக்கு பரபரப்பாக பதில் சொல்கிறது தொடர். 
நல்ல ஒரு திரைக்கதை.. கொலைகாரன் யார் என்று யூகிக்க முடியாத வண்ணம் உள்ளது.‌ 
டென்மார்க் நாட்டின் லொக்கேஷன்கள் அருமை. நடிகர் மற்றும் நடிகைகள் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.  ட்விஸ்ட்கள் வந்து கொண்டே இருக்கும். 
6 எபிசோட் தான்.. எந்த எபிசோடும் போர் அடிக்கவில்லை. செம crisp ஆன சீரிஸ். Strongly recommend for crime detective thriller lovers. 
Danish மொழியில் இங்கிலீஷ் சப்டைடில் உடன் பார்த்தேன். 
சமீபத்தில் பார்த்த மிக நல்ல க்ரைம் தொடர் இது. 
கண்டிப்பாக பாருங்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

God’s Crooked Lines – 2022 – SpanishGod’s Crooked Lines – 2022 – Spanish

God’s Crooked Lines (AKA) Los renglones torcidos de Dios review  பிரபல ஸ்பானிஷ் இயக்குனர் Oriol Paulo இயக்கத்தில் The Body, The Invisible Guest வரிசையில் இன்னொரு தரமான 🔥🔥 சம்பவம். அவரோட தனித்துவம் திரைக்கதை..அத பக்காவா

Knives Out (2019) & Gone Baby Gone (2007)Knives Out (2019) & Gone Baby Gone (2007)

Knives Out (2019) & Gone Baby Gone (2007) Tamil Review  இன்னிக்கு நம்ம 2 இன்வெஸ்ட்டிகேஷன் திரில்லர் படத்தை பத்தி பார்க்க போறோம்.  இரண்டு படத்துக்கும் என்னோட Recommendation – 🔥🔥🔥🔥🔥 Strongly Recommended.  ரெண்டு படமுமே அடுத்து

Don’t F**K With Cats: Hunting An Internet Killer- 2019Don’t F**K With Cats: Hunting An Internet Killer- 2019

இது ஒரு சீரியல் கில்லரை பற்றிய டாக்குமெண்டரி.  3 எபிசோட் ,  மொத்தம் 3 மணி நேரம் ஓடக்கூடியது.  இன்டெர்நெட்டில் திடீரென ஒரு வீடியோ வருகிறது. அதில் ஒருவன் இரண்டு பூனைகளை ஒரு பாலிதீன் பாக்கெட்டில் போட்டு மூச்சு திணறச் செய்து