Flight – 2012

இது ஒரு டிராமா திரில்லர் படம். 

இயக்குனர் Robert Zemeckis.  Forrest Gump எனும் அருமையான படத்தை கொடுத்தவரின் இன்னொரு தரமான படம் இது. 
ஹீரோ தலைவர் Denzel Washington . இது போதாதா படம் பார்க்க. 
IMDb 7.3 
படத்தின் தலைப்பை பார்த்த உடன் flight ல் நடக்கும் ஏதோ பரபரப்பான சம்பவத்தை பற்றிய படம் என நினைத்தேன் ‌‌. 
ஆனால் படம் குடி மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையான ஒரு பைலட் மற்றும் அதனால் அவன் சந்திக்கும் பிரச்சினைகளை பற்றியது. 
படத்தின் ஆரம்பத்தில் முதல் நாள் முழுவதும் குடித்து விட்டு போதைப் பொருட்கள் உட்கொண்டு விட்டு அடுத்த நாள் விமானத்தை எடுக்கிறார். கிளம்பி கொஞ்சம் நேரத்தில் இரண்டு சின்ன வோட்கா பாட்டிலை ஏர் ஹோஸ்ட்டஸ் இடமிருந்து திருடி அடித்து விட்டு மட்டை ஆகிறார். ஆனால் மிகவும் மோசமான ஒரு இயந்திரக் கோளாறு காரணமாக கீழே விழும் விமானத்தை தன்னுடைய அனுபவம் மற்றும் புத்திசாலித்தனத்தால் காப்பாற்றி நூற்றுக்கணக்கான பயணிகளை காப்பாற்றுகிறார். 
இவர் ஹீரோவாக கொண்டாடப்பட்டு இருக்க வேண்டும் இல்லையா ?  ஆனால் இவர் ரத்தத்தில் ஆல்கஹால் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்பு விசாரணையின் கோணம் மொத்தமாக மாறுகிறது. 
இதற்கு நடுவில் குடியை விட செய்யும் முயற்சிகள் தோல்வியடைகிறது. இவருடைய குடும்பம் மற்றும் ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் என அனைத்தும் குடிப்பழக்கம் காரணமாக நாசமாகிறது. 
இவ்வளவுக்கும் காரணமான குடியை விட்டாரா ? விபத்து விசாரணை என்ன ஆனது என்பதை படத்தில் பாருங்கள். 
Denzel Washington நடிப்பில் கலக்கி இருக்கிறார் ‌‌அவருடைய கேரியரில் கண்டிப்பாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படமாக இது இருக்கும்.
நல்ல திரைக்கதை போர் அடிக்காமல் போகிறது. நல்ல ஒரு க்ளைமாக்ஸ் ‌‌.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். 
 Director: Robert Zemeckis
Cast: Denzel Washington, Kelly Reilly, Bruce Greenwood, Don Cheadle, John Goodman, Melissa Leo, Nadine Velazquez
Screenplay: John Gatins
Cinematography: Don Burgess
Music: Alan Silvestri

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Good Will Hunting – 1997Good Will Hunting – 1997

Ben Affleck & Matt Damon இணைந்து திரைக்கதை எழுத Robin Williams போன்ற பெரிய தலை நடித்து வந்த ஒரு டிராமா படம் தான் இது. கொஞ்சம் ஸ்லோ ஆனா நல்ல ஃபீல் குட் படம்.  IMDb 8.3 Tamil

Sweet Tooth – Season 2 ReviewSweet Tooth – Season 2 Review

Sweet Tooth – Season 2 @netflix Review 8 Episodes Tamil ❌ முதல் சீசன் முடிந்த இடத்தில் இருந்து தொடங்குகிறது. முதல் சீசன் ரிவ்யூ லிங்க் கீழே உள்ளது.  இந்த சீசனை பொறுத்த வரைக்கும் நிறைய எமோஷனல் காட்சிகள்.

Enemy – 2013Enemy – 2013

இன்னும் Dennis Villeneuve’s effect போகாம பார்த்த அவரோட இன்னொரு படம்.  படத்தோட ஒன் லைனர் நல்லா இருந்தது. Jake Gyllenhaal ஹீரோவாக நடித்து இருந்தார். அதுனால பார்த்த படம்.  IMDb 6.9  ஹீரோ Adam ஒரு காலேஜ்ல ஹிஸ்டரி வாத்தியாரா