Cold Case – கோல்ட் கேஸ் – 2021

இது ஒரு மலையாள திரைப்படம். 

என்னமோ இந்த Signal சீரியல் பார்ததுல இருந்து இந்த Cold Case என்ற வார்த்தைகள் மேல் ஒரு ஈர்ப்பு… ட்ரெய்லர் நல்லா இருந்தது .. அது போக ப்ரித்விராஜ் போலீஸ் யூனிஃபார்ம்ல கலக்கலா இருந்தார். இது தவிர அருவி பட புகழ் அதிதி பாலன் ரொம்ப நாளைக்கு பிறகு நடிச்சு இருக்காங்க. படம் கொஞ்சம் பேய் படம் மாதிரியும் இருந்தது. 
ஆத்துல மீன் வலையில் ஒரு கருப்பு பாலிதீன் பேக் மாட்டுது. ஏதோ லம்பா கிடைச்சுருச்சுனு ஓபன் பண்ணி பார்த்த ஒரு மண்டை ஓடு இருக்குது. .
இந்த கேஸ்ஸ விசாரிக்க குழ அமைக்கப்படுகிறது அதற்கு தலைவராக வரார் அசிஸ்டன்ட் கமிஷனர் சத்யஜித் ( பிரித்விராஜ்) .
இவர் இன்ட்ரோ வித்தியாசமா நல்லாவே இருந்தது ‌‌. ஃபுல் ஷேவ் மற்றும் ட்ரிம் பாடி என காக்கிச்சட்டைக்கு பக்காவாக பொருந்துகிறார். 
இன்னொரு பக்கம் டிவில பேய் புரோகிராம் பண்ற மேதா ( அதிதி பாலன் – அவங்க தான் அந்த அருவியே தான் ) . தன் குழந்தையுடன் ஒரு வீட்டிற்கு வாடகைக்கு போறாங்க.. அந்த வீட்ல நம்ம வடிவேல் சொல்ற மாதிரி  பேய் பன்ற எல்லாமே நடக்குது. இதுக்கு என்ன காரணம் என்பது கொஞ்சம் தெரிய வருகிறது. 
சத்யஜித் கொலை சம்பந்தப்பட்ட விசாரணையில் தீவிரமாக இறங்குகிறார். 
இன்னொரு பக்கம் மேதா இந்த அமானுஷ்ய நிகழ்வுகளுக்கான காரணத்தை தோண்ட ஆரம்பிக்கிறார். 
கொலை செய்யப்பட்டது யார் என்பதை கண்டுபிடிக்கவே நாக்கு தள்ளுகிறது.. வெறும் மண்டை ஓடு மட்டும் வைச்சுக்கிட்டு கொலையானுது யார்? கொலை செய்தது யார் என்பதை எப்படி துப்பறிகிறார் சத்யஜித் என்பது தான் படம். 
இதில் மேதா மற்றும் சத்யஜித் விசாரணை எந்த வகையில் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதையும் சொல்கிறது படம். 
படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது பிண்ணனி இசை ‌‌அதுவும் அமானுஷ்ய காட்சிகளில் திடுக்கிட வைக்கிறார் இசையமைப்பாளர்.  
கேரளாவின் அழகை அப்படியே அள்ளி இருக்கிறார் கேமரா மேன். அதுவும் சத்யஜித் மலைக்கிராமத்திற்கு பைக்கில் போகும் அந்த சாலை அவ்வளவு அருமை… 
படத்தில் அனைவரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.  இறந்த பெண்ணாக நடித்தவர் சிவகார்த்திகேயன் உடன் மனம் கொத்தி பறவை படத்தில் நடித்துள்ளார்.
குறைகள் என்று பார்த்தால் பெரியதாக இல்லை. படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம்.  சில இடங்களில் மெதுவாக நகருகிறது. 
என்னை கேட்டால் பேய் போர்ஷன் எல்லாத்தையும் கட் பண்ணிட்டு 1.5 மணிநேர  க்ரைம் இன்வெஸ்ட்டிகேஷன் படமா ரிலீஸ் பண்ணிருக்கலாம். 
பெரிதாக குறைகள் இல்லை… கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

CBI 5 – The Brain – 2022CBI 5 – The Brain – 2022

CBI பட வரிசையில் மம்முட்டி  பிரபல அதிகாரியான சேதுராம ஐயர் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த மலையாள investigation Thriller படம்.  IMDb  6.3 Tamil dub ✅ Available @Netflix ஒரு அமைச்சர் கொல்லப்படுகிறார் அதை தொடர்ந்து பல கொலைகள் வரிசையாக

The Town – தி டவுன் (2010)The Town – தி டவுன் (2010)

Ben Affleck – இயக்கி நடித்துள்ள திரைப்படம் இது. பொதுவாக இவரது படங்கள் சிறப்பாக இருக்கும்…  இது Charlestown எனும் ஊரில் வங்கிகள் கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் பற்றிய திரைப்படம். இந்த ஊரில் வங்கிகளை கொள்ளை அடிப்பதயே குலத்தொழிலாக வைத்து உள்ளனர்.

Encounter – 2021Encounter – 2021

 Encounter – 2021 ஹீரோ ஒரு Ex Military . Divorce ஆன மனைவியுடன் வசிக்கும் இரண்டு மகன்களை ரோட் ட்ரிப் போகலாம் என இரவு நேரத்தில் கூட்டிக்கொண்டு போகிறார்.  ஏலியன்கள் தாக்கப் போகின்றன அதனால் மிலிட்டரி பேஸ்க்கு போக வேண்டும்