The Tomorrow War – தி டுமாரோ வார் – 2021

The Tomorrow War – தி டுமாரோ வார் – 2021 Tamil Dubbed Movie Review 

Amazon prime Video – ல் நேரடியாக வெளிவந்துள்ள படம். படம் பெயர் , கதைச் சுருக்கம் லைட்டா Edge Of Tomorrow  படத்தை ஞாபகப்படுத்துகிறது… 

Jurassic World , Guardians Of The Galaxy போன்ற படங்களில் நடித்துள்ள Chris Pratt ஹீரோவாக Dan கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

Yvonne Strahovski ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் (Muri) நடித்துள்ளார். The Handmaid’s Tale, Dexter போன்ற தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் இவர். 

படத்தின் கதையை பார்க்கலாம். 

The tomorrow war movie review in tamil, Chris Pratt, Yvonne Strahovski, Amazon original movie, Amazon Prime Video, Alien movie, time travel movie, the

2022 டிசம்பர் மாதம் படம் ஆரம்பிக்கிறது.
இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற Dan தற்போது ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் . 

ஒரு நாள் திடீரென ஃபுட்பால் கிரவுண்டில் இருந்து திமு திமு என நிறைய பேர் கையில் நவீன ஆயுதங்களுடன் வருகிறார்கள். 

தாங்கள் 2050 – ம் வருடத்தில் இருந்து வருவதாக கூறுகின்றனர்
 2050 – ல் ஏலியன்கள் பூமியை ஆக்கிரமிப்பு செய்து பெரும்பாலான மனித இனத்தை அழித்து விட்டதாகவும் கூறுகின்றனர். 
மனித இனம் அழியாமல் தடுக்க வேண்டும் என்றால் 2022 – ல் இருந்து மனிதர்கள் 2050 வந்து சண்டையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர்.

எல்லா நாடுகளும் ஒத்துக்கொண்டு இராணுவத்தை அனுப்புகிறது. ஆனால் எல்லாரையும் கொன்று விடுகிறது ஏலியன்ஸ் கூட்டம். சாதாரண ஜனங்களையும் அனுப்ப ஆரம்பிக்கிறது. இதில் ஒருவராக போகிறார் Dan. 

அங்கு இளம் விஞ்ஞானி மற்றும் இராணுவ கலோனலாக வருகிறார் Muri.Muri – யார் என்பது

 ஒரு ட்விஸ்ட் ஆனால் ஈஸியாக கண்டுபிடிச்சுருலாம் 😛

அவருடன் சேர்ந்து மருந்து கண்டுபிடிக்கிறார். ஆனால் எல்லாரையும் போட்டுத்தள்ளி விடுகிறது ஏலியன்ஸ் கூட்டம். Dan மட்டும் மருந்தோடு நிகழ்காலத்திற்கு வந்து விடுகிறார்.  

இரண்டு உலகத்திற்கும் நடுவே போய்ட்டு போய்ட்டு வரும் டெக்னாலஜியையும் ஏலியன்ஸ் போட்டுத் தள்ள . உலகம் + மகளை (எதிர்காலத்தில்) ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார்  என்பதே படத்தில் பாருங்கள்..

படம் பல தடவை அரைச்ச ஹீரோ உலகத்தை காப்பாற்றும் கதைதான். ஆனால் எதிர்காலம், நிகழ்காலம் , அப்பா மகள் பாசம் என்று லைட்டாக செண்டிமென்ட்டையும் கலந்து விட்டுள்ளார் இயக்குனர். 

நிகழ்காலம் , எதிர்காலம் என மாறி மாறி ரொம்ப மெனக்கெடாமல் நம்மையும் குழப்பாமல் இயல்பான திரைக்கதை.

ஏலியன்ஸ் கிராஃபிக்ஸ், சண்டைக்காட்சிகள் எல்லாம் செம சூப்பர். 

ரொம்ப எதிர்பார்ப்பு இல்லாமல் ஒரு நல்ல டைம் பாஸ் + ஆக்ஷன் மூவி பார்க்க வேண்டும் என்பவர்கள் குடும்பத்துடன் பார்க்கலாம்.

பக்காவான Week end movie.. 

தமிழ் ஆடியோவிலும் ரிலீஸ் ஆகியுள்ளது.

Directed by:Chris McKay
Cast: 
Chris Pratt
Yvonne Strahovski
J. K. Simmons
Betty Gilpin
Sam Richardson
Edwin Hodge
Jasmine Mathews
Ryan Kiera Armstrong
Keith Powers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Into the badlands – இன் டு தி ஃபேட்லான்ட்ஸ் – 2015 – 2019Into the badlands – இன் டு தி ஃபேட்லான்ட்ஸ் – 2015 – 2019

மொத்தம் 3 Season – 32 Episodes  இது உலகம் அழிந்து போன பின்பு நடப்பது போன்று உருவாக்கப்பட்ட ஒரு தொடர்.  தொடரில் துப்பாக்கி கலாசாரம் ‌கிடையாது, பழைய மாடல் கார்கள் மற்றும் பைக்குகள் வருகின்றன, சண்டைக்காட்சிகள் முழுவதும் தற்காப்புக் கலைகளை

Best Alien Movies Of All Time- தரமான ஏலியன் படங்கள்Best Alien Movies Of All Time- தரமான ஏலியன் படங்கள்

Best Alien Movies Of All Time- தரமான ஏலியன் படங்கள்      ஏலியன் படங்கள் எனக்கு ரொம்பவே பிடித்தமான ஒன்று.    கிராபிக்ஸ் , செட்டிங்கள் என கலக்கி இருப்பார்கள்.        பெரும்பாலான படங்கள் வழ

The Last of Us – What Is This Series About ?The Last of Us – What Is This Series About ?

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே 9 Episode களை கொண்ட 1 Season January 15 ல் HBO MAX ல் வெளியாகிறது.  அப்படி என்ன இருக்கிறது இந்த தொடரில் என்று பார்க்கலாம்.  2013 ஆம் ஆண்டு வெளிவந்த இதே பெயர் கொண்ட