Spartacus – Season 1 – Blood and Sand

இந்தத் தொடர் பண்டையகால ரோமப் பேரரசு ஆட்சியில் வாழ்ந்த ஸ்பார்ட்டகஸ் என்னும் வீரனின் வாழ்க்கையை பற்றிச் சொல்லும் தொடர். 

முதல் சீசன் –  Blood and Sand

இந்த சீசனில் ஸ்பார்ட்டகஸ் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒரு சிறிய கிராமத்தில் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார் ஸ்பார்ட்டகஸ்.  அடிக்கடி ஒரு கொடூர ஆதிவாசிகள் கும்பல் கிராமங்களை தாக்கி‌ கண்ணில் பட்டவர்களை கொன்று குவிக்கிறது. அவர்களை முழுமையாக அழிக்க முடியவில்லை. இந்நிலையில் ரோம் அரசின் படைத்தளபதி (க்ளாபர்)  தங்கள் படையுடன் இணைந்து கொள்ளுங்கள் அந்த ஆதிவாசிகள் கூட்டத்தை அழிக்க ரோம் அரசின் படைகள் உதவும் என்கிறார். ஸ்பார்டகஸ் படைகள் ரோம் படையுடன் இணைகிறார்கள். 

Spartacus blood and sand review in tamil, ஸ்பார்ட்டகஸ் ப்ளட் அன்டு சான்ட்ஸ் விமர்சனம் ,Andy Whitfield, John Hannah, Lucy Lawless, Sandy Winton

ஆனால் ரோம் படைகள் தங்கள் கிராமத்தின் பக்கம் செல்லாமல் எதிர்திசையில் செல்கிறது. 

இதனால் அதிருப்தி அடைந்த ஸ்பார்டகஸ் மற்றும் அவனது குழு ரோம் படை அதிகாரிகளிடம் தகராறு செய்கின்றனர். ஒரு கட்டத்தில் இரு குழுவிற்கும் இடையிலான தகராறு முற்றி ஸ்பார்டகஸ் படை ரோம் படையினர் சிலரை  கொன்று விட்டு தப்பித்து ஓடி விடுகின்றனர். 

இதனால் தேசத்துரோகிகளாக அறிவிக்கப்பட்டு அனைவரையும் சிறை பிடிக்கிறது க்ளாபரின் படைகள்.  ஸ்பார்டகஸ் அடிமையாக அறிவிக்கப்பட்டு கிளாடியேட்டர் அமைப்பு நடத்தி வரும் பேட்டியாட்டஸ் இடம் விற்கப்படுகிறார்.  அவரது மனைவி கொத்தடிமையாக விற்கப்படுகிறார். 

கிளாடியேட்டர் கூடத்தின் தலையாய கடமை மக்கள் மகிழ்ச்சிக்காக பெரிய மைதானத்தில் ரத்தம் தெறிக்க சண்டை போடுவது மற்றும் அதற்கு பயிற்சி அளிப்பது.  

அங்கு ஏற்கனவே உள்ள அடிமைகளுடன் முட்டலும் மோதலுமாக இருக்கிறது. குறிப்பாக தற்சமயம் சாம்பியனாக உள்ள க்ரக்ஸஸ் உடன் சுத்தமாக இணங்கவில்லை ‌. பேட்டியாட்டஸ் மனைவிக்கும் (க்ரேசியா)  க்ரக்ஸஸ் இடையே கள்ளத் தொடர்பு வேறு உள்ளது. 

ஸ்பார்ட்டகஸ் ஒரு கட்டத்தில் பேட்டியாட்ஸ் உடன் ஒரு உடன்படிக்கைக்கு வருகிறான். ஸ்பார்ட்டகஸ் முறையாக பயிற்சி எடுத்து பணம் சம்பாதித்து கொடுத்தால் அவனுடைய மனைவியை தேடி கண்டுபிடித்து கொடுப்பதாக உறுதி கொடுக்கிறான் பேட்டியாட்டஸ்.

அவனை முழுமையாக நம்பும் ஸ்பார்டகஸ் தீவிர பயிற்சி எடுத்து வெல்லவே முடியாது என்று பெயர் கொண்ட வீரனை கிர்க்ஸஸ் உடன் இணைந்து வீழ்த்தி புது சாம்பியனாக உருவாகிறான். இந்த சண்டையில் க்ரக்ஸஸ் படுகாயம் அடைந்து மரணப்படுக்கையில் விழுகிறான்.

நன்றாக போய் கொண்டு இருந்த வாழ்க்கையில் இடியென வரும் செய்தி அவனது வாழ்க்கையின் போக்கே திருப்பி போடுகிறது. 

கிளாடியேட்டர் கூடத்தில் இருந்து தப்பிக்க முடிவு செய்கிறான். ஆனால் தப்பித்து வந்தால் ரோம் பேரரசுக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் அவன் போடும் திட்டம் மற்றும் அதை செயல்படுத்திய விதத்தை திரையில் பாருங்கள். 

கிராஃபிக்ஸ் மற்றும் செட்டிங்ஸ் உதவியுடன் பண்டைய ரோம் அரச எவ்வாறு இருந்தது என்பதை காட்டுகிறார்கள். 

சண்டைக் காட்சிகள் சிறப்பாக உள்ளது ஆனால் ரத்தம் சதை என எல்லாம் தெரிக்கிறது. கை , கால்கள் வெட்டப்படுகிறது, தலைகள் உருளுகின்றன. 

இளகிய மனம் கொண்டவர்கள் இந்த தொடரை தவிர்ப்பது நல்லது. 

ஸ்பார்ட்டகஸ் ரோலில் Andy Whitfield கலக்கி இருக்கிறார். பேட்டியாட்டஸ் என்ற வில்லத்தனம் கலந்த ரோலில் John Hannah ( Mummy படத்தில் காமெடியனாக வருபவர்) சிறப்பான நடிப்பு. 

கிளாபர், க்ரேசிய மற்றும் டாக்ட்டரே கதாபாத்திரத்தில் வருபவர்களும் நன்றாக நடித்துள்ளார்கள். 

வன்முறை காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகளுக்கு பெயர் போனது கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடர். ஆனால் அது எல்லாம் ஜிஜீபி என்று சொல்லும் அளவிற்கு அந்த மாதிரியான காட்சிகள் தொடர் முழுவதும் உள்ளது.

குடும்பத்துடன் பார்ப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும். 

IMDb Rating : 8.5

Available in Netflix

Cast: Andy Whitfield, John Hannah, Lucy Lawless, Sandy Winton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Amistad – 1997Amistad – 1997

Amistad Tamil Review  தலைவன் Stephen Spielberg படம்.‌ IMDb 7.3 OTT ❌ Tamil Dub ❌ 1839 களில் அடிமைகளாக சிக்கிக்கொண்ட ஆப்பிரிக்காவை சேர்ந்த குழு அமெரிக்காவில் தங்களின் விடுதலைக்காக சந்திக்கும் சட்டப் போராட்டம் பற்றிய படம்.  உண்மை

A Time To Kill – எ டைம் டு கில் – 1996A Time To Kill – எ டைம் டு கில் – 1996

அமெரிக்க நிறவெறி அட்டூழியங்களை பற்றி சொல்லும் இன்னொரு படம்.  கொஞ்சம் பழைய படம் தான்… But worth watching…. படத்தின் முக்கிய அம்சம் நடிகர்கள்.. அதிலும் எனக்கு ரொம்பவே பிடித்த Samuel Jackson, Kevin Spacey(Se7en), Matthew McConaughey and Sandra

Into the badlands – இன் டு தி ஃபேட்லான்ட்ஸ் – 2015 – 2019Into the badlands – இன் டு தி ஃபேட்லான்ட்ஸ் – 2015 – 2019

மொத்தம் 3 Season – 32 Episodes  இது உலகம் அழிந்து போன பின்பு நடப்பது போன்று உருவாக்கப்பட்ட ஒரு தொடர்.  தொடரில் துப்பாக்கி கலாசாரம் ‌கிடையாது, பழைய மாடல் கார்கள் மற்றும் பைக்குகள் வருகின்றன, சண்டைக்காட்சிகள் முழுவதும் தற்காப்புக் கலைகளை