The Last Duel – 2021

Ridley Scott – வரலாறு சம்பந்தப்பட்ட படம் எடுக்கிறார் என்ற உடனே எனக்கு இந்த படத்தை பார்த்தே தீருவது என்று வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.  ஏனென்றால் Gladiator படத்தின் தாக்கம் அப்படி.

IMDb 7.8
தமிழ் டப் இல்லை. 
இது போக திறமையான நடிகர்கள் Matt Damon, Ben Affleck , Adam Driver. 
ஆனால் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா ? 
1300 வருடங்களில் ஐரோப்பாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.‌
படத்தின் மூலக்கரு என்று பார்த்தால் இரண்டு நண்பர்களுக்கு இடையை மண் மற்றும் பொண்ணுக்காக நடக்கும் சண்டை தான். 
ஹீரோ மனைவியின் நேர்மையை நீரூபிக்க கடைசியாக Duel எனப்படும் ஒரு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றான என்பதை சொல்கிறது படம். 
பெரிய படம் சுமார் 2.30 மணி நேரம் ஓடுகிறது. 
ஒரே நிகழ்வு மூன்று பேர்களின்  பார்வையில் சொல்லப்படுகிறது. 
முதலில் ஹீரோவின் பார்வையில் , இரண்டாவது வில்லனின் பார்வையில், மூன்றாவது அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபரின் பார்வையில்.  மூன்று கோணங்களிலும் சிறிது சிறிது மாற்றங்களை செய்து நடந்ததை சொல்கிறார் இயக்குனர். 
நல்ல படம் தான் ஆனால் Gladiator படம் மாதிரி எதிர்பார்ப்புடன் சென்றால் ஏமாற்றமே மிஞ்சும். படமும் கொஞ்சம் மெதுவாக தான் நகர்கிறது. 
படம் போன்ற போக்கில் வரதட்சணை, மாமியார் மருமகள் சண்டை, பெண்களின் ஒடுக்கப்பட்ட வாழ்க்கை என எல்லாவற்றையும் தொட்டுச் செல்கிறது. 
ஆண்கள் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும் நிலையில் ஒரு பெண் தனக்கு நேர்ந்த கொடுமைக்காக நியாயம் கிடைக்க எவ்வாறு போராடுகிறாள் என்ற வகையிலும் இந்த படத்தை எடுத்துக் கொள்ளலாம். 
மற்றபடி நடிப்பு, அந்த கால செட்டிங்குகள், லொகேஷன்கள், ஆடை வடிவமைப்பு, ஒளிப்பதிவு என அனைத்தும் அருமை. 
இது Action படம் கிடையாது. Purely History drama genre படம் . 
எதிர்பார்ப்பு இல்லாமல் ஒரு தடவ பார்க்கலாம். 
Jean de Carrouges is a respected knight known for his bravery and skill on the battlefield. Jacques Le Gris is a squire whose intelligence and eloquence makes him one of the most admired nobles in court. When Le Gris viciously assaults Carrouges’ wife, she steps forward to accuse her attacker, an act of bravery and defiance that puts her life in jeopardy. The ensuing trial by combat, a grueling duel to the death, places the fate of all three in God’s hands.
Release date: 15 October 2021 (USA)
Director: Ridley Scott
Starring: Matt Damon; Adam Driver; Jodie Comer; Ben Affleck
Adapted from: The Last Duel: A True Story of Trial by Combat in Medieval France

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Primal Fear – 1996Primal Fear – 1996

ஒரு சர்ச் பாதிரியாரை அங்கே வேலை செய்யும் இளைஞன் ஒருவன் கொடூரமான முறையில் கொன்று விடுகிறான்.  IMDb 7.7 Tamil dub ❌ OTT ❌ போலீஸ் அவனை கைது செய்கிறது ஆனால் நான் கொல்லவில்லை என்கிறான். இவனுக்கு ஆதரவாக வக்கீலான

Spartacus – Season 1 – Blood and SandSpartacus – Season 1 – Blood and Sand

இந்தத் தொடர் பண்டையகால ரோமப் பேரரசு ஆட்சியில் வாழ்ந்த ஸ்பார்ட்டகஸ் என்னும் வீரனின் வாழ்க்கையை பற்றிச் சொல்லும் தொடர்.  முதல் சீசன் –  Blood and Sand இந்த சீசனில் ஸ்பார்ட்டகஸ் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒரு சிறிய கிராமத்தில் மனைவியுடன் வாழ்ந்து

The Woman King – 2022The Woman King – 2022

The Woman King – 2022 ஆப்பிரிக்காவில் 1800 களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆக்சன் படம்.  படம் நல்லா இருக்கு ✅ கண்டிப்பாக பார்க்கலாம் 👍 IMDb 6.7 🟢| RT 94% 🟢 Tamil