இது ஒரு அருமையான பரபரப்பான கொரியன் ஆக்சன் திரைப்படம். கொரியாவில் அரசர்கள் ஆட்சி செய்த போது நடக்கும் கதை. படத்தின் தலைப்பிலிருந்து இது வில்வித்தை சம்பந்தப்பட்ட படம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
படத்தின் ஆரம்பத்தில் இரு குழந்தைகளை (அண்ணன் மற்றும் தங்கை) ஒரு அரசபடை துரத்துகின்றது. குழந்தைகளின் தந்தை தன் உயிரை கொடுத்து அக்குழந்தைகள் தப்பிக்க உதவுகிறார்.

அக்குழந்தைகள் தனது தந்தையின் நண்பர் வீட்டில் அடைக்கலம் புகுகிறார்கள்.
கதை 13 வருடங்கள் முன்னோக்கி நகர்கிறது. அண்ணன் (Nam Yi) தங்கை(Ja-In) இருவரும் வாலிப வயதில் உள்ளனர். தங்களை வளர்த்த அப்பாவை நண்பரின் மகன்(Seo gun) தங்கையை மணமுடிக்க ஆசைப்படுகிறார்.
திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. திருமண நாளன்று இன்னொரு அரசரின் படையெடுப்புக்கு ஆளாகிறது இவர்களது கிராமம். கண்ணில் பட்டவர்கள் அனைவரையும் கொன்று மிச்சம் உள்ளவர்களை அடிமைகளாக அழைத்துச் செல்கிறது இந்த கூட்டம்.
அப்பாவின் நண்பரை கொன்றுவிடுகிறது இந்த கூட்டம். நண்பன் மற்றும் தங்கையே அடிமைகளாக எடுத்துச் செல்கின்றனர். Nam Yi அதிருஷ்டவசமாக அந்த இடத்தில் இல்லாததால் தப்பித்து விடுகிறான்.
வில்வித்தையில் மிகவும் திறமை வாய்ந்தவன் Nam Yi. தனியாளாக தன் தங்கையை மீட்க வில் மற்றும் அம்பு துணையுடன் கிளம்புகிறான்.
மிகப்பெரிய அரச படைகளுடன் வில் மற்றும் அம்பு துணையுடன் போராடி தங்கையை மீட்டான என்பதை படத்தில் பாருங்கள்.
படம் ஆரம்பத்தில் சிறிது மெதுவாக நகர்கிறது. ஆனால் தங்கையை கடத்தி சென்றவுடன் படம் உச்சகட்ட பரபரப்பு அடைகிறது.
ஆரம்பத்தில் எவ்வாறு வில் மற்றும் அம்பு மட்டும் வைத்துக்கொண்டு படைகளை சமாளிப்பான் என்ற சந்தேகத்துடன் தான் படத்தை பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் சிறப்பான முறையில் நம்பும்படியான விதத்தில் படம் எடுக்கப்பட்டுள்ளது.
நாயகன் வில்வித்தையில் எவ்வளவு திறமையானவன் என்பதை எதிரிஅரசரின் படைகள் விளக்குவது போன்ற காட்சிகளின் மூலம் தெளிவாக சொல்லப்படுகிறது.
அதுவும் எதிரிப் படையின் தளபதி வில்லிலிருந்து அம்பு புறப்பட தயாராக இருக்கும் வேளையில் நாயகன் விடும் அம்பு தளபதியின் வில்லின் நாணை பிய்த்துக் கொண்டு போகும் காட்சி அருமை.
பல இடங்களில் அம்பு எவ்வாறு சென்று யாரைப் குத்தியது என்பது தெரியாத அளவு மிக வேகமாக படம் பிடித்து உள்ளனர். இரண்டு மூன்று இடங்களில் மீண்டும் மீண்டும் பார்த்த பிறகு தெளிவாக புரிந்தது.
ஒரு கட்டத்தில் படம் நிறைய இடங்களில் Apocalypto படத்தை ஞாபகப்படுத்தியது. குறிப்பாக புலி வரும் காட்சிகள்.
படம் பிடித்த இடங்கள் அருமையாக இருந்தது.
அம்புகள் காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும் சத்தம் சிறப்பு.
கிராபிக்ஸில் புலி வரும் காட்சிகளை இன்னும் கொஞ்சம் சிறப்பாக எடுத்திருக்கலாம்.
கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன் மற்றும் அண்ணன் நடுவே நிற்பது மற்றும் அதன் பின்னர் நடக்கும் காட்சிகள் இருக்கை நுனியில் உட்கார வைக்கும்.
ஆக்ஷன் படங்களில் இது மிகவும் வித்தியாசமான மற்றும் பரபரப்பான திரைப்படம். அண்ணன் தங்கை பாசத்துடன் பரபரப்பான திரைக்கதையுடன் சிறப்பான படத்தை தந்துள்ளார் இயக்குனர்.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
IMDb Rating : 7.2
Director: Han-min Kim
Writer: Han-min Kim
Cast: Hae-il Park, Seung-yong Ryoo, Moon Chae-Won, Mu-Yeol Kim, Han-wi Lee, Kyeong-yeong Lee, Gi-woong Park, Rye Hei Otani