Day Trading – Basics

Day Trading – Basics post thumbnail image

Day Trading – Basics

இந்த போஸ்ட் Day Trading பண்ணுங்கனு சொல்றதுக்கு இல்ல. சில பேர் புதுசா டே டிரேட் பண்ணலாம்னு நெனப்பாங்க ஆன அத பத்தி எங்க படிக்கிறதுனு தெரியாம இருப்பாங்க. 

ஆர்வத்துல காசு தொலைக்கவும் வாய்ப்பு இருக்கு. இத படிச்சுட்டு போய் காசு தொலைச்சாலும் அளவோட தொலைக்கலாம்..ஏதோ கத்துக்கிட்டோம்னு திருப்தி இருக்கும்.. அத சரி பண்ண வாய்ப்பு இருக்கு. 

It’s not day trading recommendation post ☺️ just for awareness and learning.

முக்கியமான விஷயம் நான் ட்ரேடிங் விட்டு வெளிய வந்து 2 வருஷத்துக்கு மேல ஆச்சு. இப்ப முதலீடு பண்றதோட சரி. 

ட்ரேட் பண்ண சமயத்தில் பெருத்த நஷ்டம் இல்ல அது போல பெரிய லாபமும் சம்பாதிக்கவில்லை. போதுமான நேரம் ஒதுக்க முடியவில்லை மற்றும் வேலை பார்த்துக்கொண்டு ட்ரேடிங் செய்வது ரொம்பவே கஷ்டம். கம்பெனியிலும் ட்ரேட் செய்ய கட்டுப்பாடுகள் உண்டு. அதுனால் நிறுத்தி விட்டேன்.

Day Trading என்றால் என்ன ? 

ஷேர் மார்க்கெட்ல ஒரு ஷேரின் விலை நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும். இந்த மாற்றங்களை யூகித்து பங்குகளை வாங்கி விற்பதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். நீங்க நொடிகளில், நிமிடங்களில், மணி நேரங்களில் கூட பண்ணலாம். 

ஆனா அடுத்த நாளுக்கு இந்த ஷேரை கொண்டு போக மாட்டார்கள் ‌. இது தான் Day Trading. 

எந்த மார்க்கெட் என்றாலும் அதன் அடிப்படை

Supply & Demand 

Supply கொறஞ்சா Demand ஏறும் (பங்கு விலை அதிகரிக்கும்) 

Supply அதிகரித்தால் Demand குறையும் (பங்கு விலை குறையும்) 

இப்ப கம்பெனி நல்லா ஓடுது புதுசா பொருட்கள் அறிமுகம் செய்யுறாங்க என்றால் நிறைய பேர் பங்குகளை வாங்குவார்கள் ஆனால் வாங்கியவர்கள் விற்க தயக்கம் காட்டுவார்கள். (Demand increase, Price increase)

கம்பெனி சரியா போகல, புது பொருட்கள் அறிமுகம் ஒன்னும் இல்ல , ஊழல் நடக்குதுனு செய்திகள் வருகிறது என்றால் எப்படியாவது வித்துட்டு வெளில வந்தா போதும்னு நெனப்பாங்க . (Demand decrease, supply increase, Price Decrease) 

இப்ப ட்ரேடிங்ல என்ன நடக்குதுனு பார்க்கலாம். 

உதாரணமாக ITC ஒரு பங்கின் விலை 300 னு வைச்சுக்கோங்க. 

நீங்க 10 ITC வாங்குறீங்க. 

10 X 300 = 3000 

நீங்க வாங்குன 10 நிமிஷத்துல 305 ரூபாய்க்கு அதிகரிக்கிறது. 

அப்ப நீங்க விற்று விடுகிறீர்கள். 

10 X 305 = 3050

இப்ப உங்க லாபம் 3050 – 3000 = 50 ரூபாய்

(இதுல ப்ரோக்கர் சார்ஜ் etc., இருக்கு இப்போதைக்கு அத விட்ருவோம்) 

இதுவே விலை ஏறாம 5 ரூபாய் குறைந்தால் – 295

2950 – 3000 = -50 (Brokerage etc..,) 

இது ஈஸியா இருக்க மாதிரி தெரியுல. இதுல என்ன பிரச்சினை என்று கேட்கலாம். 

இந்த விலையேற்றம் நேரா மேலயும் போகாது , நேரா கீழேயும் வராது. இது ஒரு அலை மாதிரி போகும்.

இந்த ஏற்ற இறக்கங்களை யூகித்து பணம் சம்பாதிப்பது தான் இதில் சிக்கலான ஒன்று. 

இதை ஓரளவு கண்டுபிடிப்பது எப்படி? Or கணிப்பது எப்படி? 

Stock Market களில் ஒரு பிரபல Phrase உள்ளது . 

“History Repeats Itself” 

ஒவ்வொரு பங்குக்கும் சில குறிப்பிட்ட விலையில் நின்னு கொஞ்ச நேரம் மேல போலாமா இல்ல கீழ வரலாமானு யோசிக்கும்.

விலை இறங்கும் போது நிக்கிற இடத்தை Support Zone என்றும், விலை ஏறும் போது நிக்கிற இடத்தை Resistance Zone என்றும் சொல்லுவாங்க. 

Support, Resistance Zones – களை ப்ரேக் பண்ணுமா , பண்ணாதா என்பதை பல காரணிகள் தீர்மானம் செய்யும். உதாரணமாக அன்றைய மார்கெட் நிலவரம், அந்த கம்பெனி நிகழ்வுகள், Nifty or Sensex index, Sector Performance என நிறைய இருக்கு. 

இந்த Support & Resistance Zone களை வைத்து தான் எந்த விலையில் வாங்கலாம் (Entry) , எந்த விலையில் விக்கலாம் (Exit) , நம்ம நெனச்ச படி நடக்கவில்லை என்றால் எந்த டைமில் நஷ்டம் ஆனாலும் பரவாயில்லை வெளிய வரலாம் (Stop loss ) என பல முடிவுகள் எடுக்கப்படுகின்றன. 

இந்த Stop loss யை சரியா உபயோகிக்காமல் or அதை பத்தியே தெரியாமல் போய் சிக்கியவர்களின்‌ நிலை ரொம்ப மோசமாக இருக்கும். இது தான் தற்கொலைகளுக்கு வழி வகுக்கிறது. 

மேல சொன்ன Entry, exit , stoploss போன்றவற்றை பங்கின் விலை ஏற்ற இறக்க Historical டேட்டாகளை வைத்து ஓரளவு கணக்கிடலாம். இந்த முறைக்கு பெயர் தான் Technical Analysis (TA)

இந்த TA க்கு முக்கியமான விஷயம் Historical Data & அந்த டேட்டாவை நம்ம எப்படி பாக்குறது. 

இதுக்கு தான் Chart கள் உபயோகம் ஆகிறது. 

இந்த சார்ட்டுலயும் ஜப்பான்காரன் கண்டுபிடிச்ச “Japanese Candlestick” சார்ட் தான் பெரும்பாலும் உபயோகத்தில் உள்ளது. 

இதுல கேண்டிலா இருக்கும். 

இதுல 

Open & Close – Candle main body

மேல உள்ள குச்சி எவ்வளவு விலை வரைக்கும் மேல போச்சு 

கீழ உள்ள குச்சி எவ்வளவு விலை வரைக்கும் கீழ போச்சு என்பதை குறிக்கும். 

இந்த கேண்டில் 1 நிமிஷம், 3 நிமிஷம், 10 நிமிஷம், 30 நிமிஷம், 1 மணி நேரம் , 1 நாள் என எப்படி வேணும் என்றாலும் பார்க்கலாம். 

இந்த மாதிரி டேட்டா தருவதற்கு என்றே பல தளங்கள் உள்ளன. 

உதாரணமாக

Tradingview 

https://in.tradingview.com/chart/?symbol=NSE%3ANIFTY

Investing.com 

https://in.investing.com/equities/itc-chart

பெரும்பாலான டிரேடிங் அப்ளிகேஷன்கள் real time charts கொடுக்கும். 

உதாரணமாக நேத்து ITC ன் 1 மணிநேரம் சார்ட் பாருங்க‌ (Zerodha – Kite ) 

இந்த சார்ட்டை படித்து அது உருவாக்கும் Pattern களை வைத்து பங்கின் விலை ஏற்ற இறக்கங்களை யூகித்து ட்ரேட் செய்ய முடியும். 

Basic Technical Analysis – Zerodha Varsity ல நல்லா இருக்கும்: 

அந்த Pattern களை பற்றி அடுத்த த்ரெட்டில் பார்க்கலாம். 

நீங்க எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் Discipline ரொம்ப ரொம்ப முக்கியம் டிரேடிங்ல. 

Emotions தான் டிரேடிங்யை ரொம்ப ரொம்ப பாதிக்கிற ஒன்னு. 

Profit வர்றப்ப எப்படி வித்துட்டு வெளிய வர்றீங்களா அதே மாதிரி Loss ல போறப்பவும் ரோபோ மாதிரி புக் பண்ணிட்டு வெளிய வந்துவிட வேண்டும். 

அடுத்து Revenge Trade .. இப்ப பாரு நான் போன ட்ரேட்ல விட்டதட இப்ப பிடிக்கிறேன்னு ஆரய்பிச்சீங்கனா உங்க அழிவு ஆரம்பம்.

Always remember “Market is supreme” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Hyundai 10000 – Floating CraneHyundai 10000 – Floating Crane

நேத்து ஒரு வீடியோ பார்த்தேன் . கிரேன் ஒன்னு ஒரு பெரிய கப்பலை தூக்கிட்டு இருக்குற மாதிரி. அந்த கிரேன் கூட தண்ணில ஒரு மிதக்கும் அமைப்பில் இருந்த மாதிரி தெரிந்தது.பாக்கவே பயங்கர பிரம்மாண்டமாக இருந்தது .. சரி இது என்னன்னு

LG – DD – Washing Machine with WIFILG – DD – Washing Machine with WIFI

போன வாரம் washing machine வாங்க Show Room போனேன். ஓரளவு என்ன நமக்கு வேண்டும் என்ற ஐடியா இருந்தாலும் என்ன ப்ராண்ட் வாங்கலாம் என்பதில் கொஞ்சம் குழப்பம்.  ஏற்கனவே Direct Drive technology பத்தி கொஞ்சம் படிச்சுட்டு போய் இருந்தேன்

IMAX – அறிமுகம்IMAX – அறிமுகம்

IMAX – என்றால் என்ன ?  எனக்கு தெரிஞ்சு பெரிய ஸ்கீரீன்ல படம் ஓடும், ஆடியோ குவாலிட்டி நல்லா இருக்கும்.  சரி கொஞ்சம் இத பத்தி படிக்கலாம்னு Search பண்ணப்ப கிடைத்த தகவல்களை translate பண்றேன்.  Image Maximum என்பதன் சுருக்கமே