பால்கோவாவை பற்றிய த்ரெட்..
கொஞ்ச நாளைக்கு முன்னாடி வத்தலகுண்டு பக்கத்தில ஒரு சாலையோர பெரிய உணவகத்தில் சாப்பிட நிறுத்தினோம்.
நண்பர்கள் பால்கோவா கேட்டு இருந்தார்கள் சில காரணங்களால் ஊரில் இருந்து வாங்க முடியல.
அங்க ஒருத்தர் பால்கோவா வித்துட்டு இருந்தாரு.
பசங்க பால்கோவா வாங்கியே ஆகனும்னு நின்னானுக.
திருவில்லிபுத்தூர்காரன் நீ தான் வந்து செக் பண்ணி வாங்கி தரணும்னு கண்டிஷன் வேற.
எனக்கு தெரிந்து பால்கோவா வில் கலப்படம் செய்ய முடியாது. ஆனால் நம்ம ஆட்கள் தான் எதிலும் கலப்படம் செய்யும் மூளைக்காரர்கள் ஆச்சே..
நான் போய் ரேட்டு என்ன என்று கேட்டேன். அவர் கால் கிலோ 80 ரூபாய் என்றார். ரேட் கூட இருக்கே என்றேன் அப்பவாச்சும் உஷாராகம சார் ஒரிஜினல் திருவில்லிபுத்தூர் பால்கோவா சார் சாம்பிள் பாருங்க எனக் கொடுத்தார். இதுக்கு தான வெயிட்டிங் என்று வாங்கி வாயில் போட்ட உடனே தெரிந்து விட்டது
ரொம்ப மட்டமான குவாலிட்டி.. .நண்பர்களிடம் ரொம்ப இனிப்பா இருக்கு ஆசைக்கு ஒரு பாக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். உடனே கடைக்காரருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. பால்கோவா இனிப்பா இல்லாம வேற எப்படி இருக்கும் என்று சண்டைக்கு வர ஒன்றும் பேசாமல் ஒரு பாக்கெட் வாங்கிவிட்டு நகர்ந்தோம்.
இப்ப விஷயத்துக்கு வருவோம்.அந்த அதிக இனிப்பில் தான் சூட்சமம் இருக்கிறது. தரம் குறைந்த பால்கோவா ரொம்ப இனிப்பாக இருக்கும். சீனியின் சுவை தனியாக தெரியும். ரொம்ப மட்டமானது என்றால் சாப்பிட்டால் நெறு நெறு என்று இருக்கும்.
ஏனென்றால் பாலின் விகிதத்தை குறைத்து சீனியின் எடையை அதிகரிப்பதால் கடைசியாக கிடைக்கும் பால்கோவாவின் எடையில் அதிக பங்கை சீனி ஆக்கிரமித்து கொள்ளும். நல்ல தரமான பாலின் விலை , சீனியின் விலையை கம்பேர் பண்ணி பார்த்தால் அவங்க ட்ரிக் தெரியும்.
பாலை பல லிட்டர்களை காய்ச்சி குறைந்த மற்றும் சரியான அளவு சீனி சேர்த்து தயாரிக்கப்படும் பால்கோவா தனி சுவையாக இருக்கும். ஒரு மாதிரி பாலின் நறுமணத்துடன் சரியான அளவில் இனிப்பு சேர்த்தால் அட அட செமயா இருக்கும்.
இங்கு ஊருக்குள்ள நெறய கடைகள் அருமையான பால்கோவா தயார் செய்கின்றன.
வெளியூர்களிலும் நல்ல தரத்தில் கிடைக்கும்.செம இனிப்பா இருக்கு என்பதால் குழந்தைகளுக்கு பிடிக்கும் ஆனால் அது ஒரிஜினல் இல்லை. அதை கண்டுபிடிக்க மேலே சொன்ன ஐடியாவை பின்பற்றுங்கள்.
திருவில்லிபுத்தூர் மெயின் ரோடு முழுவதும் பால்கோவா கடைகள் தான். யாராவது இந்த பக்கம் வந்து பால்கோவா வாங்கனும் என்றால் சொல்லுங்கள் நான் நல்ல கடைகளை சொல்கிறேன் 👍