நேத்து ஒரு வீடியோ பார்த்தேன் . கிரேன் ஒன்னு ஒரு பெரிய கப்பலை தூக்கிட்டு இருக்குற மாதிரி. அந்த கிரேன் கூட தண்ணில ஒரு மிதக்கும் அமைப்பில் இருந்த மாதிரி தெரிந்தது.பாக்கவே பயங்கர பிரம்மாண்டமாக இருந்தது .. சரி இது என்னன்னு படிக்க ஆரம்பித்தேன் . அப்போது தெரிந்து கொண்டதை பகிர்கிறேன்.
இந்த கிரேன் பெயர் Hyundai-10000 . இதை
Hyundai Heavy Industries Co., Ltd. (HHI) எனும் கொரியன் கம்பெனி உருவாக்கி இருக்கிறது.
இதனை உருவாக்கும் வேலை 2013 ல் ஆரம்பித்து, 2015 வருடம் முடிவு பெற்றுள்ளது.
இதனுடைய தூக்கும் திறன் 10000 டன்கள். இதற்கு முன்னாடி வரைக்கும் உலகின் மிகப்பெரிய கிரேனின் தூக்கும் திறன் 1600 டன்கள் மட்டும். இதிலிருந்தே தெரிந்து இருக்கும் எவ்வளவு பவர்ஃபுல் என்று.
இது ஒரு Shear leg type floating crane (Shear legs, also known as sheers, shears, or sheer legs, are a form of two-legged lifting device) .
இந்த கிரேனை ஒரு Barge (மிகப்பெரிய Flat படகு) ல Fix பண்ணிக்கலாம் . 360 Degree சுத்தும் திறன் உடையது.
எதையாவது ஹெவியா தூக்கிட்டு இருக்குறப்ப ஏதாவது சின்ன ஃபெயிலியர் ஏற்ப்பட்டாலும் அந்த பொருளை கீழே விழாமல் தாங்கும் திறன் உடையது.