Black Crab – 2022

Sweden ல இருந்து வந்து இருக்கும் War based Sci Fi action thriller படம்.

பனி சூழ்ந்த பகுதியில் நாட்டின் ஒரு பக்கம் இருந்து இன்னொரு பக்கம் எதிரிகளுக்கு மத்தியில் ஒரு ரகசிய பொருளை பனிச்சறுக்கு செய்வதன் மூலம் எடுத்து செல்லும் குழுவை பற்றிய படம். 
எதிர்காலத்தில் ஸ்வீடன் போர்க்களமாக உள்ளது.‌ நடக்கும் கலவரத்தில் பனிச்சறுக்கில் வீராங்கனையான ஹீரோயின் மகளை பிரிந்து விடுகிறார. பின்னர் ஆர்மியில் சேர்ந்து விடுகிறார். 
ஒரே நாள் இவர் மற்றும் இவரது குழுவிற்கு புது டாஸ்க் கொடுக்கப்படுகிறது. நாடு போரில் தோற்று வருவதாகவும் அதை தடுக்க நாட்டின் இன்னொரு பக்கம் உள்ள இடத்திற்கு ஒரு பார்சலை டெலிவரி பண்ண வேண்டிய கட்டாயம். 
இதில் பிரச்சினை என்றால் வெப்பமயமாதல் காரணமாக எல்லாம் உறைந்து விட்டது. இவர்கள் போக வேண்டிய பாதை முழுவதும் எதிரிகள் வசம் உள்ள சின்ன சின்ன தீவுகள் கூட்டம். 
கடல் முழுவதும் உறைந்து லேசான ஐஸ் மேல் லேயரில் இருப்பதால் வாகனங்கள் போக முடியாது.‌ இதனால் ஸ்கேட்டிங் செய்து போக வேண்டும். 
இந்த குழு எதிர் முனைக்கு போய் சேர்ந்ததா ? அவர்கள் கொண்டு செல்லும் பார்சலில் இருந்தது என்ன என்பதை படத்தில் பாருங்கள். 
வழக்கமான ஒரு வார் படமாக இல்லாமல் இந்த படத்தின் atmosphere பெரிய ப்ளஸ். முற்றிலும் பனி சூழ்ந்த பகுதி உலகம் அழிந்த பின் நடக்கும் படத்திற்கு நன்றாகவே செட் ஆகி உள்ளது. 
வெப்பமயமாதல், அம்மா மகள் சென்ட்டிமென்ட் , நல்ல ஆக்சன் சீக்குவென்ஸ் என நன்றாகவே போகிறது படம். 
கண்டிப்பாக பார்க்கலாம் 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

A Quiet Place – 2A Quiet Place – 2

இந்த படத்தின் முதல் பாகம் செமயாக இருக்கும். இதுல வர்ற ஏலியன் சின்ன சத்தம் கேட்டா புயல் வேகத்தில் எங்க இருந்தாலும் வந்து அடிச்சு காலி பண்ணிட்டு போய்டும்.  IMDb 7.2 Tamil dub ✅ OTT Amazon ஏலியன்களை கொல்லும்

The Place Beyond The Pines(2012)The Place Beyond The Pines(2012)

இது ஒரு க்ரைம் மற்றும் திரில்லர் திரைப்படம். 2 மணி நேரத்திற்கு மேலாக ஓடக்கூடிய திரைப்படம் ஒன்றுக்கொன்று தொடர்புடைய 3 கதைகளை சொல்கிறது. ஆனால் திரைக்கதை மற்றும் படத்தொகுப்பில் கலவரம் எதுவும் பண்ணாமல் எளிமையான திரைக்கதை மூலம் படம் நகர்கிறது… Luke