1 Season, 10 Episodes
Yellowjackets – 2021

2 Season (Expected end 2022)
இந்த தொடரை ஒரு கலவையான Genre ல் சேர்க்கலாம். Survival, Family, Horror,Teens,Drama.
Lost , The 100 சாயல் நெறய இருக்கு.
IMDb 8.0
Available @Voot
Tamil Dub ❌
1996 ல் Yellowjackets என்ற பெண்கள் Foot Ball team விமான விபத்தின் காரணமாக காட்டுக்குள் மாட்டிக் கொள்கிறார்கள்.ஆனால் உயிர் பிழைக்க ஏதோ கொடூரமான வேலைகள் செய்து உள்ளனர்.
25 வருடங்களுக்கு பின் தொடர் 2021 க்கு நகர்கிறது. அந்த விபத்தில் தப்பித்த 4 பெண்களுக்கு மிரட்டல் வருகிறது. நீங்க எப்படி தப்பிச்சு வந்தீங்கனு தெரியும் அத தான் வெளில சொல்லுவேன் என்று மிரட்டல் வருகிறது.
இதிலிருந்து தொடர் இரண்டு டைம் லைனில் மாறி மாறி பயணிக்கிறது.
காட்டுக்குள் என்ன நடந்தது , இப்போது என்ன நடக்கிறது என மாறி மாறி சொல்கிறது தொடர். Lost தொடர் மாதிரி தனி தனி கேரக்டர் ஃபிளாஷ் பேக்கும் உண்டு.
சீன்கள் டைம் லைனில் மாறிக்கொண்டே இருக்கிறது.செம்ம ஸ்கீரின் ப்ளே மற்றும் எடிட்டிங்.
இரண்டு டைம்லைனிற்கும் ஒரே கதாபாத்திரத்தில் வேறு வேறு நடிகர்/நடிகைகளை நடிக்க வைத்து இருக்கிறார்கள். இரண்டு டைம்லைனிற்கும் நல்ல கதாபாத்திர தேர்வு .
தொடர் மெதுவாக போனாலும் நல்லா interesting+Engaging’a போகுது. நல்ல ஒரு Slow Burner. .
Waiting for season 2
கண்டிப்பாக பார்க்கலாம் 👍