The Rescue – 2021

2018 ல நியூஸ்ல மிகவும் பரபரப்பா வந்த ஒரு செய்தியை பற்றிய டாக்குமெண்டரி. 

தாய்லாந்து மலைப்பகுதியில் ஒரு குகைக்குள் விளையாட போன ஒரு ஃபுட்பால் டீமை சேர்ந்த சிறுவர்கள் + Coach திடீர் மழை காரணமாக உள்ளே மாட்டிக் கொள்கிறார்கள். அவர்களை எப்படி மீட்டார்கள் என்பதை சொல்கிறது. 

IMDb 8.4

Tamil dub ❌

Available @hotstar

அந்த குகைய பார்க்கவே பயமா இருக்கு. கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் மேல நீளமானது. பல கிளைகள் ,பாதைகள், சுரங்கங்கள் என பாக்க Maze மாதிரி இருக்கு. இதுல பசங்க உயிரோட இருக்காங்களா ? இறந்து விட்டார்களா என ஒரு சின்ன க்ளு கூட இல்லை. 

இந்நிலையில் Thai Navy Seals வந்து உள்ள நுழைய பாக்குறாங்க கொஞ்சம் தூரம் கூட அவங்களால போக முடியவில்லை ‌‌. 

அதுக்கு அப்புறம் நியூஸ் பார்த்துட்டு Cave Divers எனப்படும் பொழுதுபோக்கிற்காக குகைக்குள் நீச்சல் அடிக்கும் தன்னார்வலர்கள் 4 பேர் UK ல இருந்து வர்றாங்க. 

இதற்கு நடுவில் தாய்லாந்து Navy, US military , உலகம் முழுவதும் இருந்து தன்னார்வலர்கள் என எல்லாரும் வந்து குவிகிறார்கள்.

எவ்வளவு பேர் வந்தாலும் அந்த 4 பேருக்கு தான் அந்த குறுகிய இருண்ட குகைக்குள் போக Skills இருக்கு. 

எப்படி ப்ளான் பண்ணி உள்ள போனாங்க ? அந்த 13 பேரையும் உயிரோடு மீட்டார்களா என்பது திரில்லர் படத்தையும் மிஞ்சும்  1.45 மணி நேர டாக்குமெண்டரி.

18 நாட்கள் 5000 பேருக்கு மேல் இந்த ஆப்ரேஷனில் பங்கு பெற்று உள்ளனர். கடைசியில் கண்டிப்பாக அழுக வைச்சுருவாங்க. 

12 நாளுக்கு அப்புறம் தான் பசங்க உயிரோட இருக்காங்க என்று கண்டுபிடிப்பார்கள். அந்த டைம்ல எடுத்த வீடியோ அவ்வளவு அழகா இருக்கும். 

அந்த பசங்க கடைசி வரைக்கும் பயமே இல்லாமல் சிரிச்சுகிட்டே இருப்பாங்க. என்ன ஒரு மன தைரியம் மற்றும் நம்பிக்கை . 

என்னை பொறுத்தவரை அந்த நாலு பேரும் Super Hero க்கள் தான். 

கண்டிப்பாக பாருங்கள். 

Highly Recommended 🔥🔥🔥🔥🔥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

DAVID ATTENBOROUGH: A LIFE ON OUR PLANET (2020)DAVID ATTENBOROUGH: A LIFE ON OUR PLANET (2020)

டேவிட் அட்டன்பரோ – குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் விலங்குகள் பற்றிய பல ஆவணப்படங்களில் பணி புரிந்து உள்ளார்.  தனிப்பட்ட முறையில் அவருடைய விசிறி நான். அவருடைய டாக்குமெண்டரிகள் அனைத்தும் வாவ் சொல்ல வைக்கும் ரகங்கள். Planet

Don’t F**K With Cats: Hunting An Internet Killer- 2019Don’t F**K With Cats: Hunting An Internet Killer- 2019

இது ஒரு சீரியல் கில்லரை பற்றிய டாக்குமெண்டரி.  3 எபிசோட் ,  மொத்தம் 3 மணி நேரம் ஓடக்கூடியது.  இன்டெர்நெட்டில் திடீரென ஒரு வீடியோ வருகிறது. அதில் ஒருவன் இரண்டு பூனைகளை ஒரு பாலிதீன் பாக்கெட்டில் போட்டு மூச்சு திணறச் செய்து

My Octopus Teacher – மை ஆக்டோபஸ் டீச்சர் – 2020My Octopus Teacher – மை ஆக்டோபஸ் டீச்சர் – 2020

 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த 1.5 மணி நேரம் ஓடக்கூடிய டாக்குமெண்டரி படம் தான் மை ஆக்டோபஸ் டீச்சர்.  இந்த வருடம் சிறந்த ஆவணப்பட பிரிவில் ஆஸ்கார் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.  இது தென் ஆப்ரிக்காவின் கடற்கரை ஓரம் உள்ள கடல்