Most Dangerous Game – 2020

இது மனிதர்களை பொழுதுபோக்குக்காக வேட்டையாடும் ஒரு பணக்கார சைக்கோ குரூப் மற்றும் அவர்களின் விளையாட்டில் சிக்கிக்கொண்ட ஹீரோவை பற்றிய கதை. 

IMDb 6.9
Tamil Dub available in Prime Video
நல்ல பரபரப்பான ஆக்ஷன் திரில்லர் . கண்டிப்பாக பார்க்கலாம் . 
ஹீரோ ஒரு பிஸினஸ் மேன் . அழகான மனைவி மற்றும் பிறக்கப்போகும் குழந்தை என வாழ்க்கை போகிறது.  பிஸினஸ்ஸில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக நிம்மதியை இழந்து தவிக்கிறான் ‌. 
இந்நிலையில் ஒருநாள் மயங்கி விழ மருத்துவ பரிசோதனையில் மூளையில் கட்டி நீ உன் நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறாய் என்கிறார் டாக்டர் ‌ .
குடும்பத்துக்கு கடனை விட்டுச் செல்ல மனசு இல்லாமல் தவிக்கிறான். ஹாஸ்பிடலில் ஒரு நர்ஸ் விசிட்டிங் கார்டு கொடுத்து அங்கு கடன் தருவார்கள் ஃபோன் பண்ணி பாரு என்கிறான்.
அங்கு Miles என்பவனை சந்திக்கிறான் ஹீரோ. நீ தான் சாகப் போறேல எங்க வேட்டை கேம்ல கலந்துக்கோ நீ உயிரோடு இருக்கிற ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 50 மில்லியன் தருகிறோம்  என்று
 மூளைச்சலவை செய்து சம்மதிக்க வைத்து விடுகிறான் . 
என்ன மாதிரியான விளையாட்டு ,  ஹீரோ தப்பிச்சானா, பணம் கிடைச்சதா என்பதை பரபரப்பாக சொல்கிறது படம். 
இது மாதிரி மனித வேட்டை படங்கள் நிறைய பார்த்து இருப்போம். பெரும்பாலான படங்கள் காட்டுக்குள் இல்லை என்றால் தீவுக்குள் நடக்கும். ஆனால் பெரிய வித்தியாசம் என்னவென்றால் இந்தப் படத்தில் வேட்டை நடப்பது முழுவதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த சிட்டியில் .
நல்ல பொழுது போக்கு படம். சில சீன்கள் நம்மளே guess பண்ணிடலாம் ஆனா ஹீரோ தான் தெரியாத மாதிரியே இருக்காரு.
Overall நல்ல டைம் பாஸ் படம் 👍👍
Cast : Christoph Waltz, Aaron Poole, Sarah Gadon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Se7en – செவன் (1995)Se7en – செவன் (1995)

Se7en (Seven) – செவன் (1995)  – Tamil Review  இந்த திரைப்படம் Thriller, Crime, Physiological thriller, Serial killer என எந்த வகையான Genre எடுத்துக் கொண்டாலும் டாப் 3 படங்களில் இருக்கும்.  பிரபல இயக்குனரான David Fincher

Sick – 2022Sick – 2022

Sick Tamil Review  Genre: #slasher #horror thriller Tamil ❌ ⭐⭐⭐.5 / 5  – கோவிட் டைம்மில் Quarantine பண்ண தனியாக உள்ள பங்களாவுக்கு செல்லும் தோழிகள். இவங்களை கொல்ல வரும் கில்லர் – வழக்கமான Slasher படம்

Ponniyin Selvan – 2022Ponniyin Selvan – 2022

Ponniyin Selvan Review – பொன்னியின் செல்வன் படம் விமர்சனம்  நாவலை படித்து பல வருடங்கள் ஆகிடுச்சு. அதனால் நிறைய மறந்து போச்சு. அதுபோக இவ்வளவு பெரிய கதையை திரையில் கொண்டு வருவது லேசுபட்ட காரியம் இல்ல.எனவே எதிர்பார்ப்பு இல்லாமல் போனேன்.