Contact – 1997

Contact – 1997 post thumbnail image

Contact – 1997 Tamil Review 

இந்த படம் ரொம்ப வருஷமா என் வாட்ச் லிஸ்ட்ல இருந்தது. இது ஒரு Sci Fi படம். 

Forrest Gump பட இயக்குனரின் படம்,  ஹீரோயின் Jodie Foster ( Inside Man , ஹீரோ Matthew McConaughey (A Time To Kill, Lincoln Lawyer 

IMDb 7.5

தமிழ் டப் இல்லை. 

Contact movie review in tamil, Rober Zemeckis movie, Jodie Foster, Matthew McConaughey, sci fi movie review in tamil, Forrest Gump director movies, al

வேற கிரகத்தில் உயினங்கள் உள்ளதா என்பதை ஆராய்ச்சி செய்யும் ஹீரோயின் பற்றிய படம். 

எல்லி ஒரு திறமையான விஞ்ஞானி. இவருடைய லட்சியம் மனிதர்களைத் தவிர இந்த பிரபஞ்சத்தில் வேறு உயிரினங்கள் உள்ளனவா அப்படி இருந்தால் அதை ஆதாரத்துடன் நிரூபிப்பது. 

இதற்காக சில தனியார் உதவியுடன் பெரிய பெரிய ரேடியோ டெலஸ்கோப் உதவியுடன் வானத்தில் இருந்து ஏதாவது சிக்னல் வருகிறதா என்று ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்குறாங்க. 

இதற்கு இடையில் அங்கு உள்ள மதம் சம்பந்தப்பட்ட படிப்பில் படிக்கும் Palmer உடன் பழக்கம் ஏற்படுகிறது. 

ஒரு நாள் யாரும் எதிர்பாராத வண்ணம் வானத்தில் இருந்து ஒரு சிக்னல் வருகிறது. உலகமே பரபரப்பாகி அதை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை சுற்றி படம் நகர்கிறது. 

Sci Fi படம் என்றாலும் கதாபாத்திரங்களுக்கு தான் முக்கியத்துவம். கிராஃபிக்ஸ் எல்லாம் பக்காவா தேவையான அளவுக்கு தேவையான இடத்தில் உபயோகப்படுத்தி உள்ளனர். 

அதுவும் அமெரிக்கா அதிபர் கிளிண்டன் ஸ்டேட்மெண்ட் கொடுப்பது எல்லாம் அருமையான கட்டிங் & ஒட்டிங்… 

படத்தில் எல்லாமே உள்ளது mystery, suspense , romance, adventure. 

கடவுள் நம்பிக்கை கொண்ட ஹீரோ Vs அறிவியல் மீது நம்பிக்கை கொண்ட ஹீரோயின் நல்ல ஒரு ஜோடி. அதையும் படத்தில் முக்கியமான இடத்தில் உபயோகப்படுத்திய விதமும் அருமை. 

கொஞ்சம் பெரிய படம்.. 2.30 மணி நேரம் ஓடும். ஏலியன் சிக்னல் வந்த பிறகு படத்தை எப்படி நகர்த்தி எவ்வாறு  முடிப்பார்கள் என்ற யோசித்துக் கொண்டே தான் படம் பார்த்தேன்  . நல்ல ஒரு க்ளைமாக்ஸ் 👌

Jodie Foster தான் படம் முழுக்க , செம அழகு + நடிப்பு . McConaughey ஹீரோ என்று சொல்ல முடியாது ஒரு துணை நடிகர் போல அப்பப்ப வருகிறார். 

இயக்குனரை பற்றி சொல்லவே தேவையில்லை. Forrest Gump படத்துக்கு அப்புறம் Sci Fi வைச்சு அருமையான படத்தை தந்து இருக்கிறார். . சூப்பரான படம் கண்டிப்பாக பாருங்கள் 🔥🔥🔥🔥🔥

Director: Robert Zemeckis

Cast: Jodie Foster, David Morse, Rob Lowe, John Hurt, Angela Bassett, William Fichtner, Tom Skerritt, James Woods, Matthew McConaughey, Jena Malone

Screenplay: James V. Hart and Michael Goldenberg based on a story by Carl Sagan and Ann Druyan, based on the novel by Carl Sagan

Cinematography: Don Burgess

Music: Alan Silvestri

Trailer: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

CBI 5 – The Brain – 2022CBI 5 – The Brain – 2022

CBI பட வரிசையில் மம்முட்டி  பிரபல அதிகாரியான சேதுராம ஐயர் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த மலையாள investigation Thriller படம்.  IMDb  6.3 Tamil dub ✅ Available @Netflix ஒரு அமைச்சர் கொல்லப்படுகிறார் அதை தொடர்ந்து பல கொலைகள் வரிசையாக

Lion – 2016Lion – 2016

செம சென்டிமென்ட் படம். கண்டிப்பா அழ வச்சுருவாங்க. சிறுவயதில் தன் குடும்பத்தை பிரிந்த ஹீரோ 25 வருடங்கள் கழித்து மீண்டும் தன் குடும்பத்தை தேடி கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  IMDb 8.0 தமிழ் டப் இல்லை. படத்தோட ஆரம்பத்தில் ஒரு குக்கிராமம்

The Outfit – 2022The Outfit – 2022

1956 ஆம் வருடத்தில் ஒரு டெய்லர் கடையில் ஒரே இரவில் நடக்கும் Brilliant ஆன க்ரைம் டிராமா.  IMDb 7.4 Tamil dub ❌ OT T ❌ இரண்டு கேங்குகளுக்குள் நடக்கும் பிரச்சினையில் சிக்கிக்கொள்கிறார் ஒரு திறமையான டெய்லர். எப்படி