Nomadland – 2020

3 Oscar வாங்கிய படம். பக்கா அவார்ட் மெட்டீரியல். அதனால பரபரப்பான படங்கள் தான் பார்ப்பேன் என்பவர்கள் தவிர்க்கவும். 

வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்த ஒரு பெண் நவீன நாடோடி வாழ்க்கை வாழ முயற்சி செய்கிறார். அவருடைய நாடோடி  வாழ்க்கையின் ஒரு பகுதியை படமாக எடுத்து உள்ளார்கள். 
IMDb 7.4
#tamil டப் இல்லை. 
Fern – ஒரு 50+ வயதில் உள்ள பெண். ஒரு பெரிய ஃபேக்டரியை சுற்றி கட்டப்பட்ட ஊரில் வசித்து வருகிறார்கள்.  இருவரும் அங்கேயே வேலை பார்த்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் ஃபேக்டரி மூடப்பட ,கொஞ்ச நாளில் அந்த ஊர் மேப்பில் இருந்து தூக்குப்பட்டு  அதன் பின்கோட் கைவிடப்படுகிறது.
கணவனும் இறந்து விட, வீடு மற்றும் அனைத்தையும் விற்ற காசில் ஒரு வேன் வாங்கி அதையே தனது வீடாக மாற்றி வசிக்கிறார்
 
ஆங்காங்கே கிடைக்கும் வேலையை பார்த்தே கண்கொண்டு பல ஊர்களை சுற்றி வருகிறார். 
இந்த பயணத்தில் அவர் சந்திக்கும் மனிதர்கள், சந்திக்கும் சவால்கள் என நகர்கிறது படம். 
Fern கதாபாத்திரத்தில் Frances Mcdormand .. ப்பா என்ன ஒரு நடிப்பு.. 3 Billboards Outside Ebbing படத்தில் இவரது நடிப்பை பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன். அப்படத்திற்கு Oscar வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த படத்தில் எல்லாவற்றையும் இழந்த பெண் , ஆனால் எல்லாரிடமும்  உடனடியாக பழகும் குணம்.. அந்த உயிரில்லாத ஒரு சிரிப்பு.. கண்டிப்பாக வேறு யாரும் இந்த கதாபாத்திரம் இவரை விட பொருத்தமாக இருக்க வாய்ப்பு இல்லை. செம நடிப்பு.. இந்த படத்திற்கு ஆஸ்கார் விருது வாங்கியது பெரிய ஆச்சரியம் இல்லை. 
இதுவரை மொத்தம் 4 ஆஸ்கர் வாங்கி இருக்கிறார் போல.. 
முன்னாடியே சொன்னது போல ரொம்பவே ஸ்லோவான படம். பார்த்து விட்டு என்னய்யா படம் இது  என்று திட்டாதீர்கள். 
A woman in her sixties who, after losing everything in the Great Recession, embarks on a journey through the American West, living as a van-dwelling modern-day nomad.
Release date: 19 February 2021 (USA)
Director: Chloé Zhao
Starring: Frances McDormand; David Strathairn; Linda May; Swankie
Adapted from: Nomadland
Music by: Ludovico Einaudi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Only Murders in the building – 2021Only Murders in the building – 2021

Only Murders in the building Tamil Review இது‌ ஒரு Crime investigation Thriller + Comedy வழக்கமான Crime Investigation மாதிரி இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்து இருக்கிறார்கள். 1 Season , 10 Episodes (Each

The Menu – 2022The Menu – 2022

The Menu Tamil Review  ஒரு வேளை சாப்பாட்டுக்கு $1250 (₹1L +) காசு கொடுத்து ஒரு தீவுக்கு போற எலைட் குரூப் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படம்.  அதுல ஹீரோயின் எதிர்பாராதவிதமாக மாட்டுகிறாள். யாராவது இங்கிருந்து தப்பித்தார்களா என்பதை படத்தில்

The Fabelmans – 2022The Fabelmans – 2022

The Fabelmans Tamil Review  வருஷத்துல பாக்குற முதல் படம் நல்லா இருக்கனும் என்று பெரிய தலை Spielberg படத்தை பார்த்தேன்.  சிறுவயதில் இருந்து சினிமா மேல் இருக்கும் தன்னுடைய காதலை (கதையை) படமாக எடுத்து இருக்கிறார்.  Slow but worth