Mini-Series- Recommendation – Investigation Thrillers – Part 1

Mini-Series- Recommendation – Investigation Thrillers – Part 1 Signal,The Sinner, Unbelievable, Mare of East Town, The Fall review in tamil 


Signal IMDb 8.6

1 Season, 16 Episodes

ரொம்ப யோசிக்காம இந்த தொடரை பாருங்கள். இது மாதிரி தொடர் எல்லாம் வருவது அரிதிலும் அரிது.

நிகழ்காலத்தில் உள்ள ஒரு துப்பறியும் போலீஸ் அதிகாரி , கடந்த காலத்தில் வாழும் துப்பறியும் போலீஸ் அதிகாரியுடன் ஒரு வித சிறப்பு வாக்கி டாக்கி மூலம் தொடர்பு கொண்டு வழக்குகளை விசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தருகின்றனர். 

மேலும் படிக்க: https://www.tamilhollywoodreviews.com/2021/06/signal-sigeuneol-2016.html

Available in Netflix

The Sinner : IMDb 7.9

4 Seasons (Each Season 1 case)  , 32 Episodes 

இந்த தொடர் சாதாரண மக்கள் திடீரென ஏன் கொடூரமான கொலைகளை செய்கிறார்கள் என்பதை பற்றி ஆராயும் தொடர். ஒவ்வொரு சீசனிலும் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் குற்றங்கள் மற்றும் அதை ஏன் செய்தார்கள் என்பதை துப்பறியும் விதமாக நகர்கிறது கதை. 

பொதுவாக படங்கள் அல்லது சீரியல்கள் யார் கொலை செய்தார்கள் என்பதை சுற்றி நகரும். ஆனால் இந்த சீரியல் ஏன் கொலை செய்தார்கள் என்பதை சுற்றியே நகரும். 

இந்த தொடரை பற்றி மேலும் படிக்க: https://www.tamilhollywoodreviews.com/2020/06/sinner.html

Available in Netflix

Unbelievable: IMDb 8.4

1 Season , 8 Episode

ஒரே சின்ன தடயம் கூட இல்லாமல் தனிமையில் இருக்கும் பெண்களை தேடிப்பிடித்து பாலியல் வன்கொடுமை செய்யும் ஒரு கற்பழிப்பு குற்றவாளியை இரு பெண் காவல் அதிகாரிகள் தங்களுடைய புத்திசாலித்தனமான விசாரணையால் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதை பற்றிய தொடர்.

மேலும் படிக்க: https://www.tamilhollywoodreviews.com/2020/07/unbelievable-2019.html

Available in Netflix

Mare of East Town IMdb : 8.5

1 Season , 7 Episodes

இது ஒரு க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர். 

whodunit வகையான மினி தொடர்.

தொடரின் பெரிய ப்ளஸ்னு பார்த்தால் ஹீரோயின் Kate Winslet மற்றும் தொடர் நடக்கும் சிறிய ஊர். 

ஊரில் சிறு குழந்தையுடன் வசிக்கும் இளம்பெண் கொலை செய்யப்படுகிறார். 2 பழைய கேஸ்களுடன் இந்த இளம்பெண் கொலை கேஸும் வந்து சேர்கிறது. இந்த மூன்று கொலைகளையும் விசாரணை செய்து குற்றவாளியை கண்டுபிடிப்பது பற்றிய தொடர்.

மேலும் படிக்க: https://www.tamilhollywoodreviews.com/2021/10/mare-of-easttown-2021.html

Available in Hot Star

The Fall  IMDb 8.1

3 Seasons , 17 Episodes.

இது ஒரு திறமையான  சீரியல் கில்லருக்கும் , ஒரு திறமையான போலீஸ் ஆபிஸருக்கும் இடையேயான Clash . 

தனிமையில் சுதந்திரமாக சொந்த காலில் நல்ல அந்தஸ்துடன் தனிமையில்  வாழும் பெண்களை கொல்லும் கில்லர். 

தனிமையில் சிங்கிளாக இருக்கும் பெண்  போலீஸ் ஹீரோயின். 

இதுல சீரியல் கில்லர் குடும்பம் குட்டியுடன் நல்ல தகப்பனாக இருப்பான். 

Gillian Anderson (Sex Education ல் Otis அம்மாவாக வருவாங்க) – போலீசாக கலக்கி இருப்பார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Most Expected Hollywood Movies -2022Most Expected Hollywood Movies -2022

2022 ல் நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹாலிவுட் படங்கள் மற்றும் அதற்கான காரணங்கள்.  1. Avatar: The Way of Water  Release Date: December 16, 202 இந்த படத்தை பற்றி அதிகமாக பேச தேவையில்லை ஏனென்றால் உலகமே இந்த

Forest Based Movies RecommendationForest Based Movies Recommendation

Forest Based Movies Recommendation  பெரும்பாலான படத்தின் காட்சிகள் காட்டுக்குள் நடப்பது போன்று எடுக்கப்பட்ட சில படங்களை பார்க்கலாம்.  #movies #forest #forests 1. Predator – 1987  அடர்ந்த காட்டுக்குள் ஏலியனிடம் மாட்டும் ஒரு மிலிட்டரி குரூப்பின் சர்வைவல் படம்.

Poker Face – 2023 – Season 1Poker Face – 2023 – Season 1

Poker Face Review  10 Episodes (2 Yet to release)  ⭐⭐⭐⭐.25/5  Knives Out 1 & 2 பட டைரக்டர் Rian Johnson உருவாக்கத்தில் வந்துள்ள Crime Investigation சீரிஸ் இது.  ஹீரோயினுக்கு யார் பொய் சொன்னாலும் கண்டுபிடித்து