The Unforgivable – 2021

 Sandra Bullock முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க Netflix வெளியிட்டு உள்ள படம். 

எப்பவுமே பக்காவா Sell ஆகிற Family +  செண்டிமெண்ட் தான் படத்தின் முக்கிய அம்சம். 

தந்தை ஒரு இறந்த பின் 5 வயது தங்கையுடன் வசித்து வருகிறார் Ruth (Sandra Bullock ) . ஒரு எதிர்பாராத தருணத்தில் அந்த ஊர் போலீஸை கொன்னுவிட்டு ஜெயிலுக்கு போய்விடுகிறார். 

20 வருடங்கள் கழித்து வெளிவரும் Ruth தன் தங்கையை கண்டுபிடித்து சந்திக்க முயற்சி செய்கிறார். 

இதற்கு தங்கையின்  வளர்ப்பு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க  சட்டரீதியாக உதவி செய்கிறார் ஒரு வக்கீல். 

படம் முழுவதும் Sandra Bullock தான் . இறுக்கமான முகத்துடன் சோகத்தின் உருவாக வருகிறார். மகள் போல வளர்த்த தங்கையை பிரிந்த சோகத்தையும் மறுபடியும் சந்திக்க அவருடைய தவிப்பும் ரொம்பவே நல்ல நடிப்பு. 

மற்றபடி முக்கியமான ட்விஸ்ட்யை நீங்களே கண்டுபிடித்து விடலாம். மற்றும் வில்லன்கள் ட்ராக் வலிந்து திணிக்கப்பட்டது போன்று ஒரு ஃபீலிங். 

Viola Davis, Vincent D’Onofrio , Jon Bernthal போன்ற திறமையான நடிகர்கள் இருந்தும் அவர்களுக்கு நடிக்க பெரிய வாய்ப்பு இல்லை.

ஆனால் overall ஆக பார்த்தோம் என்றால் ரொம்பவே Decent ஆன ஸ்லோ க்ரைம் ட்ராமா. கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். 

Ruth Slater, a woman released from prison after serving a sentence for a violent crime and attempts to re-enter society. She must try to put her life back together again in a world that refuses to forgive her past.

Director: Nora Fingscheidt

Starring: Sandra Bullock; Vincent D’Onofrio; Jon Bernthal; Richard Thomas; Linda Emond; Aisling Franciosi; Rob Morgan; Viola Davis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Super Dark Times – 2017Super Dark Times – 2017

Super Dark Times Tamil Review  High School ல் படிக்கும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் ஒரே பெண் மீது கண். எதிர்பாராத ஒரு  சம்பவம் இவர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது. IMDb 6.6 Tamil dub ❌ OTT

The Truman Show – 1998The Truman Show – 1998

ஜிம் கேரி நடிப்பில் 1998 ஆண்டு வெளிவந்து மூன்று ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம். IMDb 8.1 Tamil dub ✅ பிக்பாஸ் நிகழ்ச்சியை எல்லாம் தூக்கி சாப்பிடுவது போல ஒரு கான்செப்ட் கொண்ட படம்.  பிக்பாஸ் வீட்டில் திரும்பும் இடமெல்லாம்

Frailty – 2001Frailty – 2001

செமயான ஒரு சைக்காலஜிகல் திரில்லர்.  IMDb 7.2 Tamil dub ❌ OTT ❌ FBI பரபரப்பா ஒரு சீரியல் கில்லரை தேடுறாங்க . ஒருத்தன் சரண்டர் ஆகி என் தம்பி தான் அந்த கில்லர்னு சொல்றான்.‌  எதன் அடிப்படையில்  தம்பி