Poker Face – 2023 – Season 1

Poker Face Review 

10 Episodes (2 Yet to release) 

⭐⭐⭐⭐.25/5 
Knives Out 1 & 2 பட டைரக்டர் Rian Johnson உருவாக்கத்தில் வந்துள்ள Crime Investigation சீரிஸ் இது. 
Poker Face season 1 series review, poker face review, poker face Review in Tamil

ஹீரோயினுக்கு யார் பொய் சொன்னாலும் கண்டுபிடித்து விடும் ஒரு திறன் உள்ளது. இதனை உபயோகித்து கெட்டவர்களை கண்டுபிடிப்பது தான் இந்த தொடர். 
இது ஒரே ஒரு கொலைகேஸ் துப்பறிவது பற்றியது இல்லை. ஒவ்வொரு எபிசோட்லயும் ஒரு புது கேஸ் வரும். ஆனால் ஹீரோயினின் மெயின் ஸ்டோரி லைன் ஒரு டிராக்கில் வரும். 
கிட்டத்தட்ட The Mentalist சீரிஸ் மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம் (Concept Wise) 
ஹீரோயின் ஒரு சூதாட்ட கிளப்பில் வேலை பார்க்கிறார். அங்கு தனது தோழி கொல்லப்படுகிறார். அதை கண்டுபிடிக்க முயல அந்த க்ளப்பின் ஓனருடன் பிரச்சினை ஆகிறது. 
இவரை கொல்ல அந்த குரூப் துரத்த இவர் காரில் தனது வாழ்க்கையை நடத்துகிறார். இந்த பயணத்தில் இவர் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் அங்கு நடக்கும் குற்றங்களை கண்டுபிடிக்க உதவுவது என போகிறது. 
ரத்தக்களரி , வன்முறை , ஆபாசக் காட்சிகள் , சைகோ என ரொம்ப intense ஆக இல்லாமல் லைட்டாக ஜாலியாக போகிறது தொடர். அதுதான் இந்த தொடரின் பெரிய ப்ளஸ். 
ஹீரோயின் வாய்ஸ் மாடுலேஷன் மற்றும் நடிப்பு கலக்கல். 
அதுவும் இரண்டு வில்லத்தனமான கெளவிகள் வரும் எபிசோட் எல்லாம் செமயா இருக்கும். 
ரொம்ப யோசிக்காமல் பாருங்க கண்டிப்பா என்ஜாய் பண்ணுவீங்க 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Cadaver – 2022 [Tamil]Cadaver – 2022 [Tamil]

நடிகை அமலாபால் ஹீரோயினாக நடித்து அவரே தயாரித்து வெளியிட்டு உள்ள ஒரு Crime Investigation Thriller படம் இது.  Available @Disney Hotstar Tamil ✅ காட்டுக்குள் எரிந்த நிலையில் ஒரு பிணம் கிடைக்கிறது. இறந்தது ஒரு பெரிய VIP ஆக

Nomadland – 2020Nomadland – 2020

3 Oscar வாங்கிய படம். பக்கா அவார்ட் மெட்டீரியல். அதனால பரபரப்பான படங்கள் தான் பார்ப்பேன் என்பவர்கள் தவிர்க்கவும்.  வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்த ஒரு பெண் நவீன நாடோடி வாழ்க்கை வாழ முயற்சி செய்கிறார். அவருடைய நாடோடி  வாழ்க்கையின் ஒரு பகுதியை

Nightcrawler – நைட் கிராவ்லர் (2014)Nightcrawler – நைட் கிராவ்லர் (2014)

அருமையான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் 👌 Louis Bloom (Jake Gyllenhaal) – சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்து வாழ்க்கையை ஓட்டுகிறான். ஆனால் வாழ்கையில் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளுடன் பல வகையான முயற்சிகள் செய்து வண்ணம் உள்ளான் அது