Bedevilled – 2010

இது ஒரு கொரியன் ஹாரர் திரில்லர். 

இளகிய மனம் படைத்தவர்கள் தவிர்ப்பது நல்லது.

IMDb 7.3

தமிழ் டப் இல்லை. 

சிட்டியில் ஒரு வேலை பார்க்கும் இளம்பெண் தனிமையில் வசிக்கிறார். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளால் வலுக்கட்டாயமாக லீவில் அனுப்பப் படுகிறார். 

இவர் தான் சிறுவயதில் வளர்ந்த தன் தாத்தா வசிக்கும் தீவிற்கு மன அமைதி வேண்டி போகிறார். அந்த தீவில் வசிப்பது மொத்தமே 9 பேர் தான். 

அந்த தீவில் இவளது சிறுவயது  நண்பி பாசத்துடன் வரவேற்கிறார். அந்த நண்பியின் கணவர் , கணவரின் தம்பி எல்லாரும் நண்பியை அடிமை போல நடத்துகின்றனர்.  அங்கு வசிக்கும் 5 வயதான பெண்களும் ஆண்கள் பக்கம். 

ஆண்கள் என்ன செய்தாலும் அவர்களுக்கு ஜால்ரா தட்டும் பெண்கள். நண்பிக்கு ஒரே ஆறுதல் அவளுடைய குழந்தை. 

ஒரு கட்டத்தில் தீவை விட்டு தப்ப முயற்சி செய்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது. 

அதற்கு அப்புறம் நடக்கும் ஒரு சம்பவம் காரணமாக இவள் தன்னுடைய பொறுமையின் எல்லையை தொடுகிறாள். 

ஒரு கட்டத்தில் பொங்கி எழுகிறாள்‌. அதுக்கு அப்புறம் என்ன நடக்கும் என்பதை படத்தில் பாருங்கள். 

இதற்கு நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்  டூர் வந்த பெண்.

படம் ஸ்லோ பர்னர் .. வன்முறை காட்சிகள் அதிகம் மற்றும் கடைசியில் வரும் வன்முறை காட்சிகள் ரொம்பவே கொடூரமானது. 

அந்த தீவில் வசிக்கும் பெண்ணாக நடித்தவர் செம நடிப்பு. 

ஹாரர் பட பிரியர்கள் கண்டிப்பாக பாருங்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Exit – Eksiteu- எக்ஸிட் (2019)Exit – Eksiteu- எக்ஸிட் (2019)

இது கொரியன் ஆக்ஷ்ன் காமெடி வகையைச் சேர்ந்த படம்.  படத்தின் நாயகன் ஒரு வெட்டி ஆபிசர் ஆனால் மலை ஏறுவதில்லை திறமைசாலி. தன் குடும்பத்துடன் வசித்து வருகிறான். வேலை இல்லாததால் குடும்பத்தினரும் மதிப்பதில்லை.  ஒரு மலையேறும் போட்டியில் ஹீரோயினை சந்திக்கிறான். அப்போட்டியில்

Train To Busan – 2016Train To Busan – 2016

Train To Busan – 2016 Korean Movie Review In Tamil    ரொம்பவே பிரபலமான கொரியன் ஜாம்பி படம் இது. இந்த படத்தை பெரும்பாலான சினிமா ரசிகர்கள் பார்த்து இருப்பார்கள்.    IMDb 7.6 Language: Korean  Tamil

The Endless – 2017The Endless – 2017

The Endless Tamil Review  ஒரு Cult ல் இருந்து ஓடி வந்த சகோதரர்கள் 10 வருஷத்துக்கு அப்புறம் Cult க்கு ஒரு நாள் போகிறார்கள். அங்க விசித்திரமான சம்பவங்கள் நடக்குது. அங்கிருந்து சகோதரர்கள் தப்பித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள்.  IMDb