Talk To Me – 2022 – Review
தனிமை, சோகம் மற்றும் விரக்தி ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்யும் என்பதை ஹாரர் கலந்து சொல்லும் படம்.
⭐⭐⭐.75/5
Tamil ❌
அம்மாவை இழந்த ஒரு பெண் Mia அவளின் ப்ரண்ட் மற்றும் அவளின் தம்பியுடன் சுற்றுகிறாள்.

இவர்களின் கேங்கில் ஒருவன் கை போன்ற சிலையை வைச்சு இருக்கான். அத வைச்சு செத்தவங்க கூட பேசலாம் & அவர்களை நம் உடலுக்குள் அனுமதிக்கலாம். ஆனா குறிப்பிட்ட டைம்குள்ள கையை எடுத்து விட வேண்டும்.
விளையாட்டாக மியாவின் ப்ரண்ட் தம்பி இந்த கேம் விளையாடும் போது சில விபரீதங்கள் நடக்கிறது. அது என்ன ? அதனுடைய பின் விளைவுகள் என்ன என்பதை படத்தில் பாருங்கள்.

படம் ஃபாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி என்பதால் எதிர்பார்ப்பு அதிகம்.
படத்தில் நடிப்பு , திரைக்கதை, பிண்ணணி இசை , பேய் வரும் போது உபயோகிக்கும் கேமரா ஆங்கிள் என எல்லாம் அருமை.
முதல் சீனில் வரும் கங்காருவை எப்படி கடைசில கனெக்ட் பண்ணி இருப்பாங்க என்பதில் டைரக்டர்களின் திறமை இருக்கிறது.
படம் நல்லா இருக்கு. ரொம்ப எதிர்பார்க்காமல் பாருங்க. நான் அவ்வளவாக பேய் படம் பார்ப்பது இல்லை. எனக்கே அவ்வளவு பயம் வரவில்லை.

எனக்கு தெரிஞ்சு படம் திடுக்கிடும் திகில் காட்சிகளை மையமாக வைத்து எடுக்கப்பட வில்லை. இவர்கள் ரத்தம், பாடி ஹாரர் வைச்சு பயமுறுத்துகிறார்கள். நம்ம மக்கள் ரொம்பவே திகிலாக இருக்கும் என்று நினைத்து ஏமாந்து இருக்கலாம்.
இதை ஏன் சொல்றேன் என்றால் நான் இந்த படத்தை பற்றிய போஸ்ட் போடும் போது எல்லாம் நிறைய பேர் எதிர்பார்த்த அளவு இல்லை என்கிறார்கள்.
அதனால் எதிர்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். You may or may not like it 😜