குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வசூல் அள்ளிய ஹாரர் காமெடி நையாண்டி (Satire) படம்.
⭐⭐⭐.75/5
Tamil Dub ❌, OTT ❌
நண்பர்கள் குழு, காட்டில் நடுவே வீடு, கொலைகாரன் என வழக்கமான டெம்ப்ளேட்
ஆனா படம் ஜாலியா போகுது நல்ல டைம் பாஸ்.
ஒரு வார இறுதியில் காட்டுக்குள் இருக்கும் வீட்டுக்கு செல்கிறது 7 பேர் கொண்ட நண்ப(பி)ர்கள் குழு.

அங்கு உள்ள ஒரு அறையில் வித்தியாசமான ஒரு கருவி இருக்க அதை திறந்து பார்த்தால் Quiz போட்டிக்கான கேள்வி கேட்கப்படும் என்றும் பதில் தெரியவில்லை என்றால் கொல்லப்படுவீர்கள் என்ற குரல் வருகிறது.
முதலில் யாரோ விளையாடுகிறார்கள் என நினைக்க போக போக இது உண்மை என தெரிய வருகிறது.
உங்களுக்கு தெரியுமா?
வசூல் ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. $5M பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு இதுவரை $16M வசூல் செய்து உள்ளது.
உயிருக்கு பயந்து தப்பி ஓட முயற்சி செய்கிறார்கள் கொலைகாரன் விரட்டி வருகிறான்.
நண்பர்கள் குழு தப்பித்ததா , யார் இந்த கொலைகாரன் என்பதை படத்தில் பாருங்கள்.
முன்னாடியே சொன்ன மாதிரி புதுசா எதுவும் இல்லை ஆனா நிறைய இடங்களில் காமெடி ஒர்க் ஆகிருக்கு. நண்பர்களாக நடித்தவர்கள் அனைவரும் சிறப்பு.
கண்டிப்பாக பார்க்கலாம்.