Slither – 2006

இது ஒரு Sci Fi , ஹாரர் உடன்  காமெடி கலந்த படம். 

IMDb 6.5

தமிழ் டப் இருக்கு, தமிழ் டப் இருக்கு 😊

ஒரு சின்ன ஊருக்குள் இரவு நேரத்தில் வானில் இருந்து ஒரு எரிகல் விழுகிறது.அதிலிருந்து வர்ற ஏலியன்கள்ட்ட இருந்து ஊரை காப்பாத்துற படம் . 

அந்த கல் உள்ள இருந்து சின்னதா ஒரு புழு மாதிரி ஏலியன் அந்த பக்கம் வர்ற ஒருத்தர் உடம்புல போய்டுது. 

இந்த ஏலியன் எப்படினா எந்த உடம்புக்கு உள்ள போகுதோ அது அவங்க மூளைய தன் கன்ட்ரோல்ல எடுத்துக்கும். அவங்க ஜாம்பி மாதிரி மாறிடுறாங்க. ஆனா அவங்க மைண்ட் ஏலியன் கண்ட்ரோல்ல இருக்கும். 

இது மட்டும் இல்லாமல் முதல் முதலாக ஒருத்தன் உடம்புக்குள்ள போச்சுல அந்த மனுஷன் மூலமா அது இனத்தைப் பெருக்கும் வேலையையும் செய்யுது. 

ஒரு கட்டத்துல ஆயிரக்கணக்கான ஏலியன்கள் இனப்பெருக்கமாகி பெரிய பெரிய புழுவா  மொத்தமா  ஊருக்குள் வந்து கண்ணுல பட்டவங்க எல்லாரையும் முதல்ல வந்த ஏலியன்  கண்ட்ரோல்ல கொண்டு வருது. 

ஹீரோ ஒரு போலீஸ் , ஹீரோயின் மற்றும் சில போலீஸ்காரர்கள் சேர்ந்து அந்த ஏலியன்களை கொன்று ஊரை காப்பாற்றினார்களா என்பதை படத்தில் பாருங்கள். 

பெரிய லெவல்ல கதை எல்லாம் ஒன்னும் இல்லை வழக்கமான ஹாரர் பட டெம்ப்ளேட் தான்.

ஸ ஆனா காமெடி கலந்து நல்லா எடுத்துருக்காங்க. 

தமிழ் டப் நல்லா இருக்கு. 

ஏலியன் படமா இருக்குறதால வழ வழ கொழ கொழ இரத்தக் காட்சிகள் நிறைய இருக்குது. 

நல்ல டைம் பாஸ் மூவி கண்டிப்பா பாருங்க.

Director: James Gunn

Cast: Nathan Fillion, Elizabeth Banks, Michael Rooker, Gregg Henry, Tania Saulnier, Brenda James

Screenplay: James Gunn

Cinematography: Gregory Middleton

Music: Tyler Bates

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Crimes Of The Future – 2022Crimes Of The Future – 2022

Crimes Of The Future Tamil Review  ஒரு Sci Fi , Body Horror படம்.‌ மனித உடலின் பரிணாம வளர்ச்சி பற்றி பேசும் படம். கொஞ்சம் புரியவும் இல்ல. மெதுவா போகுது கொடூரமான மற்றும் நிர்வாண காட்சிகள் நிறைய

Carnival Row – கார்னிவல் ரோ – Season 1 (2019)Carnival Row – கார்னிவல் ரோ – Season 1 (2019)

இது ஒரு அமானுஷ்யம் கலந்து கற்பனை உலகில் நடக்கும் திகில் கலந்த தொடர்.  Fae எனும் ஊரில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.மனிதர்கள், Fae எனப்படும் பறக்கும் தேவதைகள், Puck – எனப்படும் ஆடு போன்ற தலை கொண்ட மனிதர்கள் என பலதரப்பட்ட

In The Shadow Of The Moon – இன் தி ஷாடோ ஆஃப் தி மூன் (2019)In The Shadow Of The Moon – இன் தி ஷாடோ ஆஃப் தி மூன் (2019)

சயின்ஸ் ஃபிக்ஷன் கலந்த ஆக்ஷ்ன் திரைப்படம்.  1988 -ல் ஆரம்பிக்கிறது திரைப்படம். போலீஸ் அதிகாரியான டாம் மற்றும் அவரது பார்ட்னர் இருவரும் இணைந்து ஒரு கொலை வழக்கை விசாரிக்க செல்கிறார்கள். ஆனால் கொலை நடந்த விதம் வித்தியாசமாக இருக்கிறது.  அவர்களின் மூளை