Run – ரன்-2020

இது பக்காவான திரில்லர் படம். 

 
படத்துல மெயின்னா அம்மா , மகள் இரண்டு கேரக்டர் தான். ஆனால் 2 மணி நேர படம் போனது தெரியாது. 
 
படத்தின் கதையை பார்ப்போம்.. 
 
படத்தின் ஆரம்பத்தில் ஒரு மருத்துவமனையில் குறை மாதத்தில் பிறந்த குழந்தைக்கு அதிதீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
 
அம்மா குழந்தை நன்றாக இருக்கிறதா என்று கேட்கிறார். கண்ணாடி பெட்டிக்குள் உள்ளங்கை அளவே உள்ள குழந்தை காட்டப்படுகிறது. 
 
அடுத்த காட்சியில் ஒரு டீனேஜ் பெண் நடக்க முடியாத நிலையில் உள்ளார். காலையில் எழுந்த உடன் மாத்திரை சாப்பிடுகிறார், சுகர் பார்க்கிறார்… மொத்தத்தில் பல வகையான நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார் என தெரிய வருகிறது. 
 
அவரது அம்மா (Sarah Paulson – Blue Jay) பாசமாக உள்ளார். வீட்டிலேயே படிப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுத்து உள்ளார்.
 
ஒரு கட்டத்தில் மகள் அம்மாவின் ஷாப்பிங் bag-ல் சாக்லேட் தேடும் போது ஒரு மாத்திரை அவரது அம்மா பேரில் இருப்பதை பார்க்கிறார்.  ஆனால் அந்த மாத்திரை தினமும் அவருக்கு கொடுக்கப்படுகிறது. 
 
இதிலிருந்து சந்தேகம் வந்து மாத்திரையை ஆராய்ச்சி செய்ய பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவருகிறது. 
 
படத்தை பற்றி மேலும் சொல்லி சஸ்பென்ஸ்யை கெடுக்க விரும்பவில்லை. 
 
Sarah Paulson – அம்மா கேரக்டருக்கு பக்காவாக செட் ஆகி உள்ளார். ஆரம்பத்தில் பாசத்தை கொட்டும் போதும் சரி பிற்பகுதியிலும் சரி கலக்கி இருக்கிறார். 
 
மகளாக வரும் Kiera Allen தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்து உள்ளார். 
 
டைரக்டர் Aneesh Chaganty ன் முந்தைய படமான Searching அருமையான படம். இந்த படத்தையும் பரபரப்பாக கொண்டு சென்று இருக்கிறார். 
 
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். 
 
IMDb Rating : 6.7/ 10
Available in Netflix
 
Directed by: 
Aneesh Chaganty
Written by:
Aneesh Chaganty
Sev Ohanian
Produced by:
Natalie Qasabian
Sev Ohanian
Starring: 
Sarah Paulson
Kiera Allen
Cinematography
Hillary Fyffe Spera
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Green Room – 2005Green Room – 2005

Green Room Tamil Review  A24 ல இருந்து வந்த இன்னொரு Horror Thriller  4 பேர் கொண்ட Music Band  ஒரு பாரில் நடக்கும் கொலையை தெரியாத்தனமாக பார்த்து விடுகிறார்கள் .  கொலைக்கு காரணமானவர்கள இவர்களை வெளியே விட்டால் பிரச்சினை

In Bruges – 2008In Bruges – 2008

In Bruges Tamil Review  இது ஒரு நேர்த்தியான டார்க் காமெடி திரில்லர்.  காசுக்காக யாரை வேண்டுமானாலும் கொல்பவர் தான் ஹீரோ. அவரோட இன்னொருத்தர் கூட வேலை பார்க்கிறார். இவர்கள் இருவரும் ஒரு சைக்கோ பாஸ்ஸிடம் வேலை பார்க்கிறார்கள்.   IMDb 7.9

தி ப்ரஸ்டீஜ் (The Prestige) – 2006தி ப்ரஸ்டீஜ் (The Prestige) – 2006

தி ப்ரஸ்டீஜ் ( The Prestige – Tamil Review) – 2006 பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் லண்டனில் நடக்கும் கதை.  இரண்டு மேஜிக் வித்தகர்களுக்கு இடையே நடக்கும் தொழில் போட்டியை பற்றி பேசுகிறது.  யாருக்கும் எளிதில் புரியாதபடி படமெடுப்பதில் கில்லாடியான