கொரியன் ஜாம்பி தொடரான Kingdom -ல் இரண்டு சீசன்கள் Netflix -ல் வெளியாகி சக்கை போடு போட்டது.
Kingdom – Ashin Of The North – Special Episode-2021
ஜாம்பிகள் என்றால் மெதுவாக நகரும் என்ற விதியை உடைத்து மின்னல் வேக ஜாம்பிகளை Train to Busan படம் மூலம் வெளி உலகத்திற்கு அறிமுகம் செய்தது தென் கொரியா திரையுலகம்.
Kingdom தொடரில் அரசர்கள் ஆட்சி செய்யும் காலங்களில் ஜாம்பிகளை காண்பித்து புதுமை செய்தனர்.
Kingdom இரண்டு சீசன்களில் ஜாமபிகள் தாக்குதல் மற்றும் அரசியல் காரணங்களால் நாடு படும் கஷ்டங்களை சொல்லி இருப்பார்கள்.
இந்த ஸ்பெஷல் எபிசோட் ரிவியு படிப்பதற்கு முன் 2 சீசன் களையும் பார்த்திருந்தால் நல்லது.
இரண்டு நாடுகளுக்கு இடையே சண்டை மூளும் சூழலில் உள்ளது. இரண்டு நாடுகளுக்கும் நடுவில் ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ளவர்கள் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார்கள். இந்த கிராமத்தை இரண்டு நாடுகளும் அங்கீகாரம் செய்யவில்லை.
இந்த ஊரில் தான் சிறு வயது ஹீரோயின் தந்தையுடன் வசித்து வருகிறார். தந்தை தன் ஊருக்கு எப்படியாவது அங்கீகாரம் பெற முயற்சி செய்கிறார்.
ஒரு நாட்டின் தளபதி கட்டளையை ஏற்று பக்கத்து நாட்டிற்கு உளவாளியாக செல்கிறார். ஆனால் அடுத்த நாள் அவரது கிராமமே கொல்லப்படுகிறது. அதில் ஹீரோயின் மட்டும் தப்பிக்கிறார்.
தானாகவே அம்பு விடுதல் , சண்டை எல்லாம் கற்றுக்கொண்டு தந்தை சாவுக்கு பழி வாங்க ரெடி ஆகிறார். இளவயது பெண்ணாக வளர்ந்த ஹீரோயினுக்கு ஒரு கட்டத்தில் நடந்த உண்மைகள் தெரிய வர பொங்கி எழுகிறார்.
அவர் பழிவாங்க தேர்வு செய்த முறை யாரும் எதிர்பாராத ஒன்று மற்றும் இந்த தொடரின் origin story.
இது slow burning எபிசோட் தான்.. மெதுவாக கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து கதையை பில்டப் செய்கின்றனர்.
புலி வேட்டை காட்சிகள் பரபரப்பாக போகிறது.
மொத்தத்தில் நல்ல ஒரு ஸ்பெஷல் எபிசோட். க்ளைமாக்ஸ் புரிய வேண்டும் என்றால் முதல் இரண்டு சீசன்கள் பார்த்து இருக்க வேண்டும்.
மொத்தத்தில் ஒரே நல்ல prequel to Kingdom ..
Must watch for Kingdom Series fans…