In Bruges – 2008

In Bruges Tamil Review 

இது ஒரு நேர்த்தியான டார்க் காமெடி திரில்லர். 

காசுக்காக யாரை வேண்டுமானாலும் கொல்பவர் தான் ஹீரோ. அவரோட இன்னொருத்தர் கூட வேலை பார்க்கிறார். இவர்கள் இருவரும் ஒரு சைக்கோ பாஸ்ஸிடம் வேலை பார்க்கிறார்கள்.  

IMDb 7.9

தமிழ் டப் இல்லை

In Bruges movie review in tamil, dark comedy movies, Collin Farrell, Martin mcdonagh, Black Comedy, movie review in tamil,

லண்டனில் ஹீரோ ஒரு பாதிரியாரை கொல்லும் போது பெரிய தவறு நடந்து விடுகிறது. அதனால் அவர்களின் பாஸ் Bruges நகரில் ஒரு ஹோட்டலில் அடுத்த உத்தரவு வரும் வரை தங்க சொல்கிறார். 

இரண்டு பேரும் ஜாலியா ஊர் சுத்துறாங்க. ஆனா ஹீரோவுக்கு சுத்தமா எதிலும் ஆர்வம் இல்லாமல் இருக்கிறான். 

ஒரு ஷீட்டிங்கில் ஹீரோயினை சந்திக்கிறான் . என்னடா படம் ஃபோர் அடிக்குது என நினைக்கும் போது அவர்களின் பாஸ் போன் பண்ணுகிறார். இதிலிருந்து படம் அப்படியே ட்ராக் மாறுகிறது. 

பாஸ் அப்படி என்ன சொன்னார்?  கொலையில் நடந்த அந்த பெரிய தவறு என்ன அதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன என்பதை டார்க் காமெடி கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர். 

படம் மெதுவாக தான் போகும். திரைக்கதை படத்துக்கு பெரிய பலம். கொஞ்சம் கேரக்டர்கள் வந்தாலும் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து உள்ளார் இயக்குனர். 

Collin Farrell ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குற்ற உணர்ச்சியுடன் சுத்தும் ஒரு கொலைகாரன் கதாபாத்திரத்தில் பக்காவாக பொருந்தி இருக்கிறார். 

அவருடைய நண்பராக வரும் Brendan Gleeson நிறைவான நடிப்பு.

கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். 

Director: Martin McDonagh

Cast: Colin Farrell, Brendan Gleeson, Ralph Fiennes, Clémence Poésy, Jordan Prentice, Thekla Reuten

Screenplay: Martin McDonagh

Cinematography: Eigil Bryld

Music: Carter Burwell

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Koorman – 2022 [Tamil]Koorman – 2022 [Tamil]

ஒரு சைக்காலஜிகல் திரில்லர் படம்.  கூர்மன் என்றால் அடுத்தவரின் மனதில் நினைப்பதை  கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர் என்று அர்த்தமாம். நம்ம Mentalist Patrick Jane  மாதிரி.  படத்தின் ஹீரோ தான் கூர்மன்.  ஹீரோ ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி. சில பிரச்சினைகளால்

Kaala Paani – Dark Water ReviewKaala Paani – Dark Water Review

இது ஒரு அருமையான சர்வைவல் சீரிஸ். ⭐⭐⭐⭐.5 /57 EpisodesTamil ✅ , NetflixCan be watched with family ✅ (Very few violent scenes) ரொம்ப நாள் ஆச்சு இது மாதிரி ஒரு நல்ல சீரிஸ் பார்த்து.‌ஒரே நாள்ல

Karthikeya-2014Karthikeya-2014

Karthikeya Telugu Movie Review  இது ஒரு தெலுகு mystery thriller.  சுப்ரமணியபுரம் என்ற ஊரில் உள்ள முருகன் கோவிலில் நடந்த மரணங்களால் மூடப்படுகிறது. இதனை பற்றி பேசுபவர்கள் பாம்பு கொத்தி இறந்து விடுகிறார்கள்.  Tamil ❌ Telugu ✅ Available