Color Out Of Space – கலர் அவுட் ஆஃப் ஸ்பேஸ் (2019)

 இந்த படம் Prime Video recommendation section -ல் வந்தது அதுவும் தமிழ் ஆடியோவோட இருந்தது.

ஹாரர், படம் summary+போஸ்டர்ஸ் பார்த்தா ஏலியன் படம் மாதிரி இருந்தது… ஹீரோ வேற  Nicholas Cage .இதுக்கு மேல என்ன வேண்டும் இந்த படத்தை பார்க்க.

படத்தின் கதையை பற்றி பார்க்கலாம். Nathan(Nicholas Cage) தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் தனது இறந்து போன தந்தையின் பண்ணை வீட்டில் நிரந்தரமாக தங்கலாம் என வருகிறார். 

பண்ணை வீடு ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஆள் அரவமே இல்லாத பகுதியில் உள்ளது. இவரே காய்கறிகள் வளர்க்கிறார் , ஒரு வித்தியாசமான மிருகமான Alpacas என்ற மிருகத்தையும் பண்ணையில் வளர்க்கிறார். 

இந்நிலையில் ஒரு நாள் இடி மற்றும் கலரான மின்னலுடன் ஏதோ ஒன்று வானத்தில் இருந்து பெருத்த சத்தத்துடன் அவர்கள் வீட்டின் முன் விழுகிறது. 

காலையில் போலீஸ் நியூஸ் சேனல் என எல்லாரும் வந்து பார்க்கிறார்கள். அது ஏதோ செத்த மிருகம் மாதிரி பயங்கர நாத்தம் நிறைந்த புகையுடன் இருக்கிறது. எல்லாரும் அது வானத்தில் இருந்து விழுந்த விண்கல் என முடிவுக்கு வருகின்றனர். 

ஆனால் அடுத்த நாளில் இருந்து வீட்டில் இருப்பவர்களுக்கு அவர்களுக்கே தெரியாமல் மனநிலையில் அதீத மாற்றங்கள் ஏற்படுகின்றன.

 உதாரணமாக Nathan மனைவி கேரட் வெட்டும் போது அசால்ட்டாக தனது இரண்டு விரல்களை தனக்கே தெரியாமல் வெட்டுகிறார்‌. 

இளைய மகன் கிணறு பக்கத்தில் நின்று கொண்டு தனியாக பேசிக் கொண்டு இருக்கிறான். வீட்டைச் சுற்றி நிறைய Pink கலர் பூக்கள் திடீரென வளர்கிறது. வித்தியாசமான பிங்க் கலர் பூச்சிகள் வருகிறது. Nathan என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் கோபத்துடன் சுற்றுகிறான். 

இந்நிலையில் டேம் கட்ட சர்வே எடுக்க வரும் ஒருவன் இந்த பகுதி முழுவதும் தண்ணீர் கெட்டுப் போய் உள்ளது யாரும் தண்ணீர் குடிக்காதீர்கள் என்கிறான். 

இப்படியே போய்க் கொண்டிருக்கும் படம் கடைசி 45 நிமிடங்கள் வேகம் எடுக்கிறது. அவ்வளவு நேரம் சைக்காலஜிகல் திரில்லராக போய்க்கொண்டு இருந்த படம் ஹாரர் ட்ராக்கிற்கு மாறுகிறது.  

படம் மெதுவாக தான் போகிறது ஆனால் நல்ல இன்ட்ரெஸ்டாகவே போகிறது.  

Nicolas Cage கலக்கி இருக்கிறார்.

ஒளிப்பதிவு சூப்பர் ஒரு மாதிரி பிங்க் லைட்டிங்லயே போகிறது படம். 

ஏன் இந்த குடும்பத்திற்கு இப்படி ஆனது… இதற்கு யார் காரணம் என்பதை படத்தில் பாருங்கள்… 

ஒரு வித்தியாசமான ஹாரர் படம்… 

IMDb Rating : 6.2/ 10

Available in Amazon Prime video with tamil Dubbed

Directed by:

Richard Stanley

Written by:

Richard Stanley

Scarlett Amaris

Based on:

“The Colour Out of Space”

by H. P. Lovecraft

Starring: 

Nicolas Cage

Joely Richardson

Elliot Knight

Madeleine Arthur

Q’orianka Kilcher

Tommy Chong

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Fresh – 2022Fresh – 2022

Hulu வில் வெளிவந்துள்ள ஒரு ஹாரர் சர்வைவல் திரில்லர் படம் .  ஹீரோயினை லவ் பண்றேன் என்று  ஏமாத்தி கூட்டிட்டு போய் தனியாக உள்ள வீட்டில் சிறை வைக்கிறான் வில்லன்.  ஏன் அப்படி பண்ணுறான் ? ஹீரோயின் தப்பித்தாளா என்பது தான்

All Of Us Are Dead – 2022All Of Us Are Dead – 2022

All Of Us Are Dead Review ஒரு பள்ளிக்கூடத்தில் வைரஸ் காரணமாக Zombie ஆக மாறும் மாணவர்கள் & ஆசிரியரகள்.இந்த தாக்குதலில் இருந்து தப்பித்தவர்களின் சர்வைவல் தான் இந்த தொடர்.  1 Season, 13 Episodes Tamil dub ❌

The Spy – தி ஸ்பை (2019) – Season 1The Spy – தி ஸ்பை (2019) – Season 1

இது நெட்பிளிக்ஸ் வெளியிட்ட மினி சீரிஸ்.  ஒரு சீசன் அதில் 6 எபிசோட்கள் உள்ளது.  சில சீரிஸ்களை பார்க்க ஆரம்பித்தால் நிறுத்த முடியாது. அந்த வகையை சேர்ந்த தொடர் இது. ஒரே மூச்சில் 6 எபிசோட் களையும் பார்த்து முடித்து விட்டேன்.