Broadchurch – ப்ராட்சர்ச் – Season 1(2013)

இது ஒரு பிரிட்டிஷ் தொடர். ப்ராட்சர்ச் ஒரு அழகான கடற்கரையில் அமைந்துள்ள சிறிய ஊர். ஊரை சுற்றி மலை சூழ்ந்து ரம்மியமாக உள்ளது. 

ஒரு நாள் 11 வயது சிறுவன் Danny கடற்கரையில் பிணமாக கிடக்கிறான். போலீஸ் விசாரணையில் கொலை எனத் தெரிகிறது. 

broadchurch Netflix Series Review In Tamil, creator of broadchurch, Broadchurch cast, broadchurch IMDb, broadchurch Netflix, broadchurch series

Ellie Miller ( Olivia Colman ) பதவி உயர்வுக்காக காத்திருக்கும் போலீஸ் அதிகாரி. ஆனால் சீனியரான Alec Hardy ( David Tennant) சிறுவன் கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். அவருடன் பணிபுரிய விருப்பம் இல்லை என்றாலும் வேறு வழியின்றி Miller அவருடன் இணைந்து விசாரணையில் இறங்குகிறார்.  

முதலில் சந்தேக வலையில் சிக்குவது இறந்த சிறுவனின் 15 வயது அக்கா( Cloe – Charlotte Beaumont) மற்றும் அவளின் 17 வயது காதலன் ( Dean – Jacob Anderson – Game Of Thrones – ல் Grey Worm கதாபாத்திரத்தில் வருபவன். ) 

அடுத்து இறந்த சிறுவனின் அப்பா மீது சந்தேகம் கொள்கின்றனர். சிறிய ஊர் மற்றும் அனைவரும் ஒன்றாக நட்பாக இருப்பதால் சந்தேக பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. 

விசாரணையில் பல நபர்களின் பின்புலம் தோண்டப்படுகிறது. சிறுவனின் அப்பாவின் நண்பன், போலீஸ் அதிகாரி Miller – ன் 11 வயது மகன் , சர்ச் பாதிரியார், நியூஸ் பேப்பர் கடை வைத்திருக்கும் முதியவர், கடலின் அருகில் நாயுடன் வசிக்கும் வயதான ஒரு பெண் என அனைவரும் சந்தேக வலையில் சிக்குகிறார்கள். ஒவ்வொருவரையும் சந்தேகப்பட போதிய காரணங்கள் இருப்பதால் போலீஸ் குழம்புகிறது. 

இதில் சிறப்பானது என்னவென்றால் அனைவரும் ஏதோ ஒரு வகையில் சில விஷயங்களை மறைக்கிறார்கள். அதனால் போலீஸ் போலவே சீரிஸ் பார்க்கும் நமக்கும் யார் கொலை செய்து இருப்பார்கள் என்பதை யூகிக்க முடியாமல் நகர்கிறது. 

ஆனால் கடைசியில் நாம் யூகிக்க முடியாத ஒருவன் தான் கொலைகாரன் என்று கண்டுபிடிப்பது சிறப்பு… 

இன்னொரு ட்ராக்கில் பத்திரிக்கையாளர்கள் TRP – க்காக செய்யும் காரியங்கள் ‌கேவலமாக உள்ளது. 

எனக்கு தெரிந்து நடிப்பு மற்றும் எமோஷனல் காட்சிகள் இந்த தொடரை மற்ற துப்பறியும் தொடர்களில் இருந்து வித்தியாச படுத்துகிறது. 

நடிப்பில் போலீஸ் அதிகாரிகளாக வரும் David Tennant மற்றும் Olivia Colman சிறப்பாக பொருந்தி உள்ளனர். இறந்த சிறுவனின் அம்மாவாக நடித்த Jodie Whittaker சிறப்பாக நடித்திருக்கிறார். 

மொத்தத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய க்ரைம் இன்வெஸ்ட்டிகேஷன் திரில்லர்… 

Cast: David Tennant, Olivia Colman, Jodie Whittaker, Andrew Buchan, Marianne Jean-Baptiste, Charlotte Rampling, Matthew Gravelle, James D’Arcy, Eve Myles, Arthur Darville, Lucy Cohu

IMDb Rating : 8.4/ 10

Available in Netflix 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Bosch – Season 1Bosch – Season 1

Bosch Season 1 Review  Bosch – S1 – 10Ep #AmazonPrimeVideo 10 வருஷத்துக்கு முன்னாடி புதைக்கப்பட்ட எலும்புகள் கிடைக்கிறது காரில் பிணத்துடன் மாட்டும் சீரியல் கில்லர் இந்த இரண்டுக்கும் உள்ள தொடர்பை கண்டுபிடிக்க வரும் டிடெக்டிவ் Bosch Gripping

Heavenly Creatures – 1994Heavenly Creatures – 1994

Heavenly Creatures Tamil Review  இரண்டு ஸ்கூல் புள்ளைங்க நல்ல ப்ரண்ட்ச் ‌‌. இவங்க ப்ரண்ட் ஷிப் கொஞ்சம் எல்லை மீறி போகுதுனு நினைக்கிறார்கள் இருவருடைய பெற்றோர்களும். அதனால் இவர்களை பிரிக்கனும் என்று முடிவு செய்கிறார்கள்.  IMDb 7.3 Tamil dub

கிங்டம் – Kingdom – கொரியன் தொடர்கிங்டம் – Kingdom – கொரியன் தொடர்

கிங்டம் – Kingdom – கொரியன் தொடர் – Korean Serial – 2019 – Season 1  இது கொரியன் Joseon era வில் நடக்கும் ஜாம்பி தொடர்.  அரசர்கள் ஆட்சி செய்யும் கால கட்டத்தில் ஜாம்பிகளை பார்ப்பது புதுமையாக