Nightcrawler – நைட் கிராவ்லர் (2014)

அருமையான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் 👌

Louis Bloom (Jake Gyllenhaal) – சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்து வாழ்க்கையை ஓட்டுகிறான். ஆனால் வாழ்கையில் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளுடன் பல வகையான முயற்சிகள் செய்து வண்ணம் உள்ளான் அது மட்டுமல்லாது நல்ல திறமைசாலி. 
ஒரு நாள் இரவில் ஒரு விபத்து நடந்த இடத்தில் ஒருவன் வீடியோ எடுப்பதை பார்க்கிறான். 
அவனிடம் பேசுகையில் அவன் இது போன்ற விபத்துகள், துப்பாக்கி சூடு மற்றும் தீ விபத்துக்கள் நடக்கும் இடத்தில் வீடியோக்கள் எடுத்து அதை செய்தி தொலைக்காட்சிகளிடம் நல்ல விலைக்கு விற்கிறான் என தெரிய வருகிறது. 
அட இது நல்ல பணம் சம்பாதிக்கும் வழியாக இருக்கிறது என்று இவனும் இரவு நேரங்களில் போலீஸாரின் உரையாடல்களை ஒட்டு கேட்கும் கருவியுடன் சாலைகளில் அலைகிறான். 
ஒரு விபத்தினை படம் பிடித்து விற்க நல்ல பணம் கிடைக்கிறது. 
கொஞ்சம் கொஞ்சமாக வீடியோ நுணுக்கங்களை கற்றுக் கொண்டு நன்றாக பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறான். புதிய அதிவேக கார் வாங்குகிறான் , உதவியாளர் ஒருவனை வேலைக்கு சேர்க்கிறான், தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தி பிரிவு இயக்குனர் Nina (Rene Russo) வின் நட்பு கிடைக்கிறது ‌. 
புதிதாக கம்பெனி ஆரம்பிக்கிறான். இந்த தருணத்தில் ஒரு வீட்டில் துப்பாக்கி சூடு நடக்கிறது. போலீஸ் வரும் முன்பே அந்த வீட்டை அடையும் Louis அந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களையும் சேர்த்து படம் பிடித்து விடுகிறான். 
ஆனால் அந்த வீடியோவை வைத்து அவன் கம்பெனியை முன்னேற செய்யும் தில்லுமுல்லு வேலைகள் தான் மிச்ச படம். 
படம் ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும் பின்னர் வேகமாக செல்கிறது.  
செய்தி தொலைக்காட்சிகளின் தில்லுமுல்லுகள் புட்டு புட்டு வைக்கப்படுகின்றன. எவன் செத்தால் என்ன தன்னுடைய சேனல் நன்றாக இருந்தால் சரி என்று செய்யும் காரியங்கள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது. 
அதிலும் கடைசியில் Louis செய்வது ரொம்பவே ஓவர். 
Louis கதாபாத்திரத்தில் Jake Gyllenhaal கலக்கி இருக்கிறார். கடைசியில் சைக்கோ தனமான நடிப்பு… ஆனால் இவர் ஆரம்பத்தில் இருந்தே சைக்கோ தான் என்பது படம் போக போக தெரிகிறது. தான் முன்னேற எவரையும் வாரி விடுகிறார். 
செய்தி சேனல் டைரக்டர் , Louis உதவியாளர் என அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். 
திரைக்கதை, நடிப்பு, ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் என அனைத்தும் சூப்பர்… 
கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். 
IMDb Rating : 7.9/ 10
Available in Netflix 
Director: Dan Gilroy
Cast: Jake Gyllenhaal, Renee Russo, Riz Ahmed, Bill Paxton
Screenplay: Dan Gilroy
Cinematography: Robert Elswit
Music: James Newton Howard

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Talk To Me – 2022Talk To Me – 2022

Talk To Me – 2022 – Review தனிமை, சோகம் மற்றும் விரக்தி ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்யும் என்பதை ஹாரர் கலந்து சொல்லும் படம். ⭐⭐⭐.75/5Tamil ❌ அம்மாவை இழந்த ஒரு பெண் Mia அவளின் ப்ரண்ட் மற்றும்

Howl – 2013Howl – 2013

Howl Tamil Review  நைட் நேரம் காட்டுக்குள்ள போற ட்ரெயின் ப்ரேக் டவுன் ஆகி நின்னுடுது. திடீர்னு ஏதோ ஒரு மிருகம் பயணிகளை எல்லாம் அட்டாக் பண்ணி கொல்ல ஆரம்பிக்க எப்படி தப்பித்தார்கள் என்பதை படத்தில் பாருங்கள்.  படத்துல பெரிய லெவல்

A Time To Kill – எ டைம் டு கில் – 1996A Time To Kill – எ டைம் டு கில் – 1996

அமெரிக்க நிறவெறி அட்டூழியங்களை பற்றி சொல்லும் இன்னொரு படம்.  கொஞ்சம் பழைய படம் தான்… But worth watching…. படத்தின் முக்கிய அம்சம் நடிகர்கள்.. அதிலும் எனக்கு ரொம்பவே பிடித்த Samuel Jackson, Kevin Spacey(Se7en), Matthew McConaughey and Sandra