The Shape Of Water – 2017

The Shape Of Water

4 Oscar வாங்குன Sci Fantasy Romance!!!, Thriller. 

1960 வருடத்தில் வாய் பேச முடியாத இளம்பெண்ணுக்கும்,  ஏலியன்+மீன் மாதிரி இருக்கும் ஒரு மிருகத்துக்குமான Relationship பற்றிய படம். 
IMDb 7.3
Tamil dub இல்லை. 
The shape of water movie review in tamil, Oscar winner movie in sci fi, Guillermo del Toro director, best sci fi Romance films, the shape of water IMD

சூப்பரான படம் கண்டிப்பா பார்க்கலாம். Pan’s Labrinth பட இயக்குனர் Guillermo Del Toro வின் இன்னொரு தரமான படம்.
Elisa வாய் பேச முடியாத , தனிமையில் வசிக்கும் இளம் பெண். அரசால் ரகசியமாக நடத்தப்படும் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கிறார். பக்கத்து வீட்டில் வசிக்கும் Giles மற்றும் கூட வேலை பார்க்கும் Zelda என இரண்டு நண்பர்கள் மட்டுமே. 
இந்நிலையில் ரகசியமாக ஒரு பெட்டி ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அதில் மீனும் மனிதனும் கலந்த மாதிரி ஒரு மிருகம் உள்ளது. Elisa ஒரு ஆர்வத்தில் இது அருகில் போக அது இவளுக்கு response பண்ணுகிறது. அதுக்கு சாப்பாடு போட்டு பழக ஆரம்பிக்கிறாள். 
இதற்கு நடுவே அந்த மிருகத்தை கொன்று ஆராய்ச்சி செய்ய நாள் குறிக்கிறார்கள், இன்னொரு புறம் ரஷ்ய ஸ்பைகள் இந்த மிருகத்தை கொல்ல துடிக்கிறார்கள். 
ஆனால் Elisa தனது நண்பர்கள் உதவியுடன் மிருகத்தை கடத்தி கடலில் விட ப்ளான் பண்ணுகிறாள் . 
இந்த  முயற்சியில் யார் வெற்றி அடைந்தார் என்பதை படத்தில் பாருங்கள். 
நல்ல வித்தியாசமான கான்செப்ட். 1960 செட்டப் எல்லாம் சூப்பரா பண்ணிருக்காங்க. 
ஹீரோயின் நன்றாக நடித்துள்ளார். அந்த மிருகத்துடன் வரும் காதல் காட்சிகள் கொஞ்சம் ஓவர் தான். ஆனால் காதலுக்கு தான் கண் இல்லையே … 
அந்த மிருகம் கிராபிக்ஸ் இல்லையாம். நம்ம கமல் மாதிரி 3 மணி நேரம் ஒருத்தருக்கு மேக்கப் போட்டு உருவாக்கி இருக்கிறார்கள். 
அந்த மிருகத்தை கையாளும் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் Michael Shannon செம வில்லத்தனம். 
Elisa, a lonely janitor, stumbles upon an amphibious creature that is held captive in a secret research facility. She then develops a unique relationship with the creature.
Director: Guillermo del Toro
Cast: Sally Hawkins, Michael Shannon, Richard Jenkins, Octavia Spencer, Michael Stuhlbarg, Doug Jones
Screenplay: Guillermo del Toro & Vanessa Taylor
Cinematography: Dan Laustsen
Music: Alexandre Desplat
Watch Trailer: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Split – ஸ்பிலிட்(2016)Split – ஸ்பிலிட்(2016)

Sixth Sense , The Village, Signs போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்த இயக்குநர் M. Night Shyamalan இயக்கத்தில் வந்த ஒரு அருமையான psychological thriller படம் தான் Split.  படத்தின் ஆரம்பத்தில் மூன்று இளம்பெண்களை Casey(Anya Taylor -Joy

Nobody – 2021Nobody – 2021

Nobody – 2021 இந்த படத்தை பற்றி பார்க்குறதுக்கு முன்னாடி … உங்களுக்கு ஆக்ஷன் திரில்லர் படங்கள் பிடிக்கும் என்றாலோ, John Wick series படங்கள் பிடிக்கும் என்றாலோ யோசிக்காமல் படத்தை பாருங்கள் தரமான ஆக்ஷ்ன் என்டர்டெயின்மென்ட் கேரண்டி. 👍 ஹீரோ

Puthiya Mugam – 1993Puthiya Mugam – 1993

இந்த படத்தை முதன் முதலில் 10 வயதில் பெற்றோர்களுடன் தியேட்டரில் பார்த்தேன். கரூரில் கவிதாலயா, கலையரங்கம் என்று அடுத்தடுத்து இரண்டு தியேட்டர்கள் உண்டு. ஒரு தியேட்டரில் புதிய முகம் இன்னொரு தியேட்டரில் சரத்குமாரின் வேடன் படமும் ஓடிக்கொண்டு இருந்தது. அந்த டைமில்