1960 வருடத்தில் வாய் பேச முடியாத இளம்பெண்ணுக்கும், ஏலியன்+மீன் மாதிரி இருக்கும் ஒரு மிருகத்துக்குமான Relationship பற்றிய படம்.
IMDb 7.3
Tamil dub இல்லை.
சூப்பரான படம் கண்டிப்பா பார்க்கலாம். Pan’s Labrinth பட இயக்குனர் Guillermo Del Toro வின் இன்னொரு தரமான படம்.
Elisa வாய் பேச முடியாத , தனிமையில் வசிக்கும் இளம் பெண். அரசால் ரகசியமாக நடத்தப்படும் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கிறார். பக்கத்து வீட்டில் வசிக்கும் Giles மற்றும் கூட வேலை பார்க்கும் Zelda என இரண்டு நண்பர்கள் மட்டுமே.
இந்நிலையில் ரகசியமாக ஒரு பெட்டி ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அதில் மீனும் மனிதனும் கலந்த மாதிரி ஒரு மிருகம் உள்ளது. Elisa ஒரு ஆர்வத்தில் இது அருகில் போக அது இவளுக்கு response பண்ணுகிறது. அதுக்கு சாப்பாடு போட்டு பழக ஆரம்பிக்கிறாள்.
இதற்கு நடுவே அந்த மிருகத்தை கொன்று ஆராய்ச்சி செய்ய நாள் குறிக்கிறார்கள், இன்னொரு புறம் ரஷ்ய ஸ்பைகள் இந்த மிருகத்தை கொல்ல துடிக்கிறார்கள்.
ஆனால் Elisa தனது நண்பர்கள் உதவியுடன் மிருகத்தை கடத்தி கடலில் விட ப்ளான் பண்ணுகிறாள் .
இந்த முயற்சியில் யார் வெற்றி அடைந்தார் என்பதை படத்தில் பாருங்கள்.
நல்ல வித்தியாசமான கான்செப்ட். 1960 செட்டப் எல்லாம் சூப்பரா பண்ணிருக்காங்க.
ஹீரோயின் நன்றாக நடித்துள்ளார். அந்த மிருகத்துடன் வரும் காதல் காட்சிகள் கொஞ்சம் ஓவர் தான். ஆனால் காதலுக்கு தான் கண் இல்லையே …
அந்த மிருகம் கிராபிக்ஸ் இல்லையாம். நம்ம கமல் மாதிரி 3 மணி நேரம் ஒருத்தருக்கு மேக்கப் போட்டு உருவாக்கி இருக்கிறார்கள்.
அந்த மிருகத்தை கையாளும் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் Michael Shannon செம வில்லத்தனம்.
Elisa, a lonely janitor, stumbles upon an amphibious creature that is held captive in a secret research facility. She then develops a unique relationship with the creature.
Director: Guillermo del Toro
Cast: Sally Hawkins, Michael Shannon, Richard Jenkins, Octavia Spencer, Michael Stuhlbarg, Doug Jones
ஒரு பக்காவான சைக்காலஜிக்கல் திரில்லர். புயலில் சிக்கிய 10 பேர் ஒரு மோட்டலில் தஞ்சம் அடைகிறார்கள். ஆனால் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். யார் தப்பித்தது ? கொலைகாரன் யார் ? என்பதை படத்தில் பாருங்கள். IMDb 7.3 Tamil dub ❌ OTT
எனக்கு மான்ஸ்டர் திரைப்படங்கள் மிகவும் பிடித்த ஒன்று. திரைப்படம் பற்றிய குறிப்பில் சர்வைவல் வகையான மான்ஸ்டர் திரைப்படம் என்பதால் மேலும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. உலகம் அழிந்து 7 வருடங்கள் கழித்து நடப்பது போன்ற கதை. பூமியின் மீது மோத வரும்