நம்ம 96 படத்தை எடுத்து அதுல கொரியன் & அமெரிக்கன் Flavour சேர்த்தால் கிடைப்பது தான் Past Lives.
⭐⭐⭐.5/5
Korean
Tamil ❌
96 படம் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பார்க்கலாம்.
கொரியாவில் பள்ளியில் படிக்கும் ஹீரோ & ஹீரோயின். இருவரும் நண்பர்கள் & அதுக்கும் கொஞ்சம் மேல ஒரு லவ்.
திடீரென ஹீரோயின் குடும்பம் கொரியாவில் இருந்து குடும்பத்துடன் அமெரிக்கா குடிபெயர்ந்து விடுகிறார்கள்.

12 வருடத்திற்கு அப்புறம் மறுபடியும் வீடியோ கால் மூலம் பேசுகிறார்கள். ஆனால் இருவரும் சந்திக்கும் வாய்ப்பு இல்லை என்பதால் பேசுவதை தவிர்க்கிறார்கள்.
இதன் பின் மறுபடியும் 12 வருஷம் கழிச்சு ஹீரோயினுக்கு அமெரிக்கனுடன் திருமணம் ஆகிவிட கடைசியாக ஹீரோ அவளை பார்க்க அமெரிக்கா போறான்.

96 படம் மாதிரியே இரண்டு நாட்கள் சேர்ந்து சுற்றுகிறார்கள். கடைசியில் ஹஸ்பெண்டை மீட் பண்ணிட்டு திரும்புகிறான்.

ரொம்பவே சிம்பிளான அழகான கதை , நல்ல நடிப்பு, அருமையான ரைட்டிங், லொக்கேஷன்கள், பிண்ணணி இசை எல்லாமே நல்லாருக்கு.